Home
News

கண்ணா கலக்குறீயே.. Now Bar முதல் Text to Speech வரை.. Samsung S25 சீரீஸில் 5 புதிய Galaxy AI அம்சங்கள்!

பலரும் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வின் முக்கிய அறிமுகங்களாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பார்க்கும் மறுகையில், சிலர் அவைகளுடன் சேர்ந்து அறிமுகமான ஒன் யுஐ 7 (One UI 7) மற்றும் அதன் வழியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன 5 புதிய கேலக்ஸி ஏஐ அம்சங்களை (New Galaxy AI Features) முக்கியமான அறிமுகங்களாக பார்க்கின்றனர். அப்படி என்னென்ன புதிய கேலக்ஸி ஏஐ அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன?

01. ஏற்கனவே உள்ள ப்ரவுஸிங் அசிஸ்ட் (Browsing Asist) அம்சத்தில் டெக்ஸ்ட்-டூ-ஸ்பீச் (Text to Speech) திறன் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பு போலவே, சாம்சங் இண்டர்நெட்டிற்கான ப்ரவுஸிங் அசிஸ்ட் டூல் ஆனது உங்களுக்காக ஆன்லைன் கட்டுரைகளை சுருக்கி மொழிபெயர்க்கும். இருப்பினும் கேலக்ஸி எஸ்25-க்கான ஒன்யுஐ 7 வழியாக, இந்த ஏஐ டூல் ஆனது சுருக்கப்பட்ட கட்டுரைகளையும் சத்தமாக வாசிக்கும் திறனை பெறுகிறது.

Samsung S25 சீரீஸில் 5 புதிய Galaxy AI அம்சங்கள்!

மேலும் ஒன்யுஐ 7 அல்லது கேலக்ஸி எஸ்25 பயனர்கள், ப்ரவுஸிங் அசிஸ்ட்-க்கான கேலக்ஸி ஏஐ செட்டிங்ஸ் ஸ்க்ரீனில் புதிய "சிறப்பம்சங்களை உரக்க படிக்கவும்" (Read highlights aloud) என்கிற விருப்பத்தைக் காணலாம். இந்த டூல் வெவ்வேறு மொழி விருப்பங்களையும், குரல் பாணிகளையும் வழங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக கட்டுரைகளை உரக்க படிக்கும்போது, இண்டர்நெட் பிரவுஸரில் பிளேபேக் பட்டன்களுடன் கூடிய ஸ்பெஷல் யுஐ-யும் தோன்றும். இந்த ஆன்-ஸ்கிரீன் கன்ட்ரோல்களை பயன்படுத்தி, நீங்கள் ரீவைண்ட் செய்யலாம், பார்வேட் செய்யலாம் மற்றும் டெக்ஸ்ட்-டூ-வாய்ஸ் சம்மரியை பிளே / பாஸ் செய்யலாம்.

ஒன் யுஐ 7 வழியாக ப்ரவுஸிங் அசிஸ்ட் கேலக்ஸி ஏஐ டூலில் சேர்க்கப்பட்டுள்ள இந்த திறன் எல்லா சூழ்நிலையிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்காது, ஆனால் இது சில நேரங்களில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, உங்கள் கேலக்ஸி எஸ்25 ஸ்மார்ட்போனில் ஆன்லைன் கட்டுரையைப் படிக்க விரும்பினால், ஆனால் நீங்கள் உங்கள் காரை ஓட்டுவதில் பிஸியாக இருந்தால் அல்லது வீட்டை சுற்றி மற்ற செயல்பாடுகளை செய்து கொண்டிருந்தால், இந்த டூல் எந்தவொரு ஆன்லைன் கட்டுரையையும் ஆடியோவாக மாற்றும்.

02. நௌவ் பார் (Now Bar): இது அன்றைய நேரத்திற்கு ஏற்ப தொடர்புடைய தகவல்களை காட்டுகிறது. காலையில், இது வானிலை, உங்களுடைய உறக்கம் தொடர்பான புள்ளிவிவரங்கள் மற்றும் உங்கள் எனர்ஜி ஸ்கோர்-ஐ காண்பிக்கும். நீங்கள் வேலைக்கு செல்லவிருக்கும் போது, கூகுள் மேப்ஸ் (​​Google Maps) நேவிகேஷனை தொடங்கவும், உங்கள் பயணத்தின் போதான ம்யூசிக் பிளேலிஸ்ட்டையும் இது பரிந்துரைக்கும். மாலையில், அந்த நாளிலிருந்து உங்கள் ஸ்டெப்ஸ் கவுண்ட் மற்றும் மெமரீஸ்-ஐ (அந்நாளில் கைப்பற்றப்பட்ட படங்கள்) காண்பிக்கும்.

03. பில்ட்-இன் வீடியோ எடிட்டர் (Built-in video editor) மற்றும் அதன் ஆடியோ ஏரேசர் அம்சத்தை (Audio Eraser feature) பயன்படுத்தி, வீடியோக்களில் இருந்து காற்று போன்ற தேவையற்ற சத்தங்களை நீக்கலாம்.
04. கால் அசிஸ்ட் மற்றும் லைவ் டிரான்ஸ்லேட் (Call Assist and Live Translate) போன்ற விஷயங்களுக்கு சாம்சங் மேலும் பல மொழிகளுக்கான ஆதரவை சேர்த்துள்ளது.

05. சாம்சங் நோட்ஸ் (Samsung Notes) போன்ற சாம்சங் நிறுவனத்தின் ஆப்களில் கூகுள் ஜெமினி (Google Gemini) அம்சங்களை பயனர்கள் அணுகலாம். எல்லாவற்றை விட முக்கியமாக கேலக்ஸி எஸ்25 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ஏழு வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 New Galaxy AI features Introduced with Samsung Galaxy S25 Series One UI 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X