ஆப்பிள் வாட்ச் கொண்டு வரும் ஐந்து புதிய அம்சங்கள்.!

ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் புதிய இயங்குதளம் பல்வேறு வசதிகளை வழங்குகிறது. நண்பர்கள் அல்லது குடும்பத்தாருடன் சிறு தகவல்களை பரிமாறிக் கொள்ள வாக்கி-டாக்கி மோட் பயன்படுத்தலாம்.

|

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் புதிய இயங்குதளம் பல்வேறு வசதிகளை வழங்குகிறது. நண்பர்கள் அல்லது குடும்பத்தாருடன் சிறு தகவல்களை பரிமாறிக் கொள்ள வாக்கி-டாக்கி மோட் பயன்படுத்தலாம். சிரி வாட்ச் ஃபேஸ் இனி மூன்றாம் தரப்பு செயலிகளையும் காண்பிக்கும். இத்துடன் ஷாட்கட் என அழைக்கப்படும் பிரத்யேக சிரி கமாண்டுகளை வாட்ச் மூலம் பயன்படுத்தலாம்.

ஆப்பிள் வாட்ச் கொண்டு வரும் ஐந்து புதிய அம்சங்கள்.!

ஆப்பிள் வாட்ச் சாதனத்தை கொண்டு உடற்பயிற்சி மற்றும் உடல்நலம் சார்ந்தவற்றுக்கு அதிகம் பயன்படுத்துவோருக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வாட்ச் ஓஎஸ் 5 கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஆப்பிள் வாட்ச் உங்களுக்கு வழங்கும் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

நண்பர்களுடன் போட்டியிடலாம்:

நண்பர்களுடன் போட்டியிடலாம்:

உடற்பயிற்சி செய்யும் போது ஊக்கப்படுத்த சிறப்பான துணை இருப்பது பலவழிகளில் பயன்தரும். அந்த வகையில் ஃபிட்பிட் போன்ற சாதனங்கள் நண்பர்களுடன் போட்டியிடும் வசதியை வழங்கி வருகின்றன. இதே அம்சத்தை விரைவில் உங்களது ஆப்பிள் வாட்ச் செய்யக்கூடும்.

வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில், நண்பர்களுக்கு சவால் விடும் அம்சம், ஒவ்வொரு வாரமும் போட்டிகள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்ய முடியும். இதில் நண்பர்களின் செயல்பாடுகளை பார்த்து தெரிந்து கொள்ளவும் முடியும்.

ஆட்டோமேடிக் வொர்க்அவுட் டிட்டெக்ஷன்

ஆட்டோமேடிக் வொர்க்அவுட் டிட்டெக்ஷன்

ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் வழங்கப்பட இருக்கும் சுவாரஸ்ய அம்சமாக இதை குறிப்பிட முடியும். நீங்கள் உடற்பயிற்சி செய்ய துவங்கினால், வாட்ச் அதனை தானாக கண்டறிந்து, டிராக் செய்வதை பரிந்துரைக்கும்.

இத்துடன் உடற்பயிற்சியை துவங்கும் முன் டிராக் செய்ய மறந்திருந்தாலோ, உடற்பயிற்சி செய்து முடித்ததும் டிராக் செய்வதை நிறுத்த மறந்தாலோ ஆப்பிள் வாட்ச் அதனை தானாக ஆன் மற்றும் ஆஃப் செய்து விடும்.

அதிக வொர்க்அவுட் மோட்கள்

அதிக வொர்க்அவுட் மோட்கள்

புதிய வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் 12 புதிய வொர்க் அவுட் மோட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு யோகா பெரும்பாலானோரால் செய்யப்படும் உடற்பயிற்சிகளில் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் யோகா செய்யும் போது துடிப்பு மற்றும் உடலின் இதர நடவடிக்கைகளை டிராக் செய்யும்.

புதிய மெட்ரிக்கள்

புதிய மெட்ரிக்கள்

ஓட்ட பயிற்சி செய்யும் போது உங்களது வொர்க்அவுட்-க்கு தகுந்த மெட்ரிக்கள் வழங்கப்படுகின்றன. உதாரணத்துக்கு ஆப்பிள் வாட்ச் அணிந்து கொண்டு வெளிப்புறத்தில் ஓடும் போது, நீங்கள் எத்தனை மைல் கடந்திருக்கிறீர்கள், இன்னும் கடக்க வேண்டிய தூரம் போன்ற தகவல்களை பார்க்க முடியும்.

பாட்கேஸ்ட்கள்

பாட்கேஸ்ட்கள்

இந்த அம்சம் உடல்நலன் சார்ந்தது இல்லை என்றாலும், உடற்பயிற்சியின் போது முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள இது பயன்தரும். ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் பாட்கேஸ்ட்கள் வழங்கப்படுகின்றன. பாட்காஸ்ட்-இல் உங்களது பயன்பாடு, நீங்கள் பயன்படுத்தும் மற்ற ஆப்பிள் சாதனங்களிலும் சின்க் செய்யபப்ட்டு விடும். சிரியிடம் கேட்டாலே ஆப்பிள் பாட்கேஸ்ட்களை தேட முடியும்.

Best Mobiles in India

English summary
5 new fitness features coming to your Apple Watch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X