அலெர்ட்.. இப்படி உட்காந்துகிட்டு மொபைல் கேம் ஆடினால்.. அவ்ளோதான்... என்னென்ன நடக்கும் தெரியுமா?
ஒரு சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு சுமார் 6 மணிநேரம் 58 நிமிடங்கள் இண்டர்நெட் உடன் இணைக்கப்பட்ட ஸ்க்ரீன்களில் செலவிடுகிறார். அதாவது நம்மில் பலரும் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 7 மணிநேரம் மொபைல் ஸ்க்ரீனையோ அல்லது லேப்டாப் ஸ்க்ரீனையோ பார்த்து கொண்டே இருக்கிறோம்!
பெரும்பாலான பயனர்கள் வெவ்வேறு பயன்பாடுகளுக்காக மொபைல் மற்றும் லேப்டாப்களை பயன்படுத்தி வருகின்றன. அவர்களுடன் ஒப்பிடும் போது ஒரு குறிப்பிட்ட கேமிற்கு "அடிமையாகி" ஒரே ஸ்க்ரீனில் பல மணி நேரங்களை நீங்கள் செலவு செய்தால்.. கீழ்வரும் 5 கெடுதல்கள் ஒன்றையாவது நீங்கள் சந்திக்க நேரிடும்!

முதல் மற்றும் முக்கிய கெடுதல்: ஆஸ்தெனோபியா (Asthenopia), அதாவது கண் சோர்வு. நீண்ட நேர கேமிங் உங்கள் கண்களை கடுமையாக பாதிக்கும்; குறிப்பாக இரவு நேரங்களில் கேமிங் செய்தால் நிலைமை இன்னும் மோசமாகும். இரவு நேரம் என்பது ஸ்க்ரீன்களில் இருந்து கண்கள் ஓய்வு எடுக்கும் நேரமாகும். அப்போதும் உங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுக்கவில்லை என்றால் ஆஸ்தெனோபியாவை சந்திக்க நேரிடும்.
ஆஸ்தெனோபியா என்பது அடிப்படையில் கண்களில் உணரப்படும் அசௌகரியம் (Discomfort ) மற்றும் அதனை தொடர்ந்து வரும் தலைவலி (Headache) ஆகும். மொபைல் ஸ்க்ரீன் அல்லது லேப்டாப் ஸ்க்ரீனை தொடர்ந்து பயன்படுத்துவதால் அல்லது பார்ப்பதால் காலப்போக்கில் உங்களுடைய கண் பார்வை மங்கும் ஆபத்தும் உள்ளது.
இரண்டாவது கெடுதல்: ஸீரோ ப்ரொடெக்டிவிட்டி (Zero Productivity), அதாவது ஒரு குறிப்பிட்ட கேமிற்கு நீங்கள் அடிமையாகி விட்டால், வேலை நேரம் போக எப்போதெல்லாம் ஒய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் நீங்கள் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தாமல், கேம் விளையாடினால் அது நிச்சயம் உற்பத்தித்திறனை பூஜ்யத்திற்கு கொண்டு செல்லும்.
மூன்றாவது கெடுதல்: மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் கோளாறு ஏற்படும். பெரும்பாலான மக்கள் கேமிங் செய்யும் போது ஒரே இடத்தில் அல்லது ஒரே தோரணையில் மணிக்கணக்கில் இருப்பார்கள். காலப்போக்கில் இது கவலை, உடல் பருமன், தூக்கக் கோளாறுகள் மற்றும் மன அழுத்தத்தை உருவாக்குவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நான்காவது கெடுதல்: சமூக வாழ்க்கை காணமால் போய்விடும். கேமிங்கிற்கு அடிமையாகி விட்டால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நேரம் கொடுக்க முடியாமல் போக்கும். ஒருகட்டத்தில், இது உங்களை அவர்களிடம் இருந்து பிரிந்துவிடும். நீங்கள் எதையுமே கண்டுகொள்ளவில்லை என்றால், நீங்கள் மெல்ல மெல்ல சமூக வாழ்க்கையில் இருந்து வெளியேறி தனிமரமாகி விடுவீர்கள்!
ஐந்தாவது கெடுதல்: பிளே ஸ்டோர்களில் இருந்து நீங்கள் பலவகையான வீடியோ கேம்களை பதிவிறக்கும் செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தால் - அலெர்ட்! ஏனென்றால் சில ஆன்லைன் கேம்களில் மால்வேர்கள் அல்லது வைரஸ்கள் இருக்கலாம். இது உங்கள் தனிப்பட்ட தரவுகளை திருடும் திறன்களை கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








