EPFO 2025 புத்தாண்டில் கொண்டுவரும் 5 முக்கிய மாற்றங்கள்.. உற்சாகத்தில் PF சந்தாதாரர்கள்..
நாட்டில் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது மிகவும் சிறந்த முதலீட்டுத் திட்டமாக உள்ளது. குறிப்பாக நாட்டில் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் என்றே தனித்தனி PF கணக்கு வழங்கப்படுகிறது. இந்த PF கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் பி.எஃப் கணக்கில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPFO கொண்டுவரும் புதிய விதிகள் மற்றும் மாற்றங்களால் PF கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய அளவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2025 தொடக்கத்தில் இந்த புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய விதிகள் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

1. ஏடிஎம்: பி.எஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருந்து விரைவாகப் பணம் எடுத்துக்கொள்ளும் வகையில் ஏடிஎம் கார்டை வழங்க EPFO அமைப்பு முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஏடிஎம்மில் இருந்து நேரடியாக பணம் எடுக்கும் வசதி 2025-26 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த வசதி அனைத்து பி.எஃப் பயனர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.
2. பி.எப் கணக்கில் கூடுதலாகப் பணத்தைச் சேமிக்கலாம்: தற்போது பி.எப் கணக்கில் மாத ஊதியத்தில் தொழிலாளர் சார்பில் சரிசமமாக 12 சதவீதம் பணம் செலுத்தப்படுகிறது.ஆனால் இந்த வரம்பை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. எனவே அடுத்து ஆண்டு வரும் புதிய விதிகளில் ஊழியர்கள் 12%க்கும் அதிகமான தொகையை PF-க்கு அளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் மூலம் ஓய்வுக்குப் பிறகு பெரிய ஓய்வூதிய நிதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
3.EPFO ஐடி சிஸ்டம் அப்கிரேடு (EPFO IT system upgrade): இந்த திட்டம் மூலம் EPFO அதன் ஐடி (IT) உள்கட்டமைப்பை மேம்படுத்தப் போகிறது. குறிப்பாக இது பி.எஃப் தொகையை க்ளெய்ம் செய்யும் பயனாளிகளுக்கு தங்கள் வைப்புத்தொகையைக் குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். அதேபோல் ஐடி மேம்படுத்தல் ஜூன் 2025க்குள் முடிவடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
EPFO IT சிஸ்டம் அப்கிரேடு செய்வதன் முக்கிய நன்மைகள் என்னவென்றால், பி.எஃப் பயனர்களின் க்ளெய்ம்கள் விரைவாக செட்டில் செய்யப்படும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும், மோசடி வழக்குகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

4.EPFO ஈக்விட்டி (EPFO equity): EPFO அமைப்பு உறுப்பினர்களுக்கு ஈக்விட்டியில் முதலீடு செய்வதற்கான வசதியை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. இது பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் நிதியை சிறந்த முறையில் நிர்வகிக்க வாய்ப்பளிக்கும். குறிப்பாக EPFO நேரடி ஈக்விட்டி முதலீட்டை அனுமதித்தால், உறுப்பினர்கள் அதிக வருமானத்தையும் எதிர்பார்க்கலாம்.
5.EPFO ஓய்வூதியத் தொகை ( EPFO pension): EPFO ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறது. அதாவது புதிய விதியின் கீழ், ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் ஓய்வூதியத் தொகையை நாட்டில் எந்த வங்கியிலிருந்தும், எந்த வங்கிக் கிளையிலிருந்து எடுக்க முடியும். இதற்காக அவர்களுக்குக் கூடுதல் சரிபார்ப்பு தேவை இருக்காது. குறிப்பாக எந்த வங்கியிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெறலாம் என்பதால் காத்திருப்பு நேரம் கணிசமாகக் குறையும்.


Click it and Unblock the Notifications








