ஒரு லேண்ட் லைன் வாங்கிடலாமோ.? அசத்தும் பிஎஸ்என்எல் எல்எல்-49 பிளான்.!
பிஎஸ்என்எல் வழங்கும் 'எக்ஸ்பீரியன்ஸ் எல்எல்-49' என்ற விளம்பரத் திட்டமானது நாம் ஏன் லேண்ட்லைன் கனெக்ஷன் வாங்க கூடாது என்று உங்களை யோசிக்க வைக்கும்படி உள்ளது.
கம்பி மற்றும் கம்பியில்லா பிரிவில் இன்னும் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை பெறும் ஒரு முயற்சியாக, இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு சேவை வழங்குநர் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் டிசம்பர் 2016, 31-ஆம் தேதி வரையிலாக அதன் விளம்பர லேண்ட்லைன் திட்டமான 'எக்ஸ்பீரியன்ஸ் எல்எல்-49' திட்டத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் ஆகஸ்ட் 2016, 15-ம் தேதி அன்று அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் தொடங்கப்பட்டது. நல்ல கருத்துக்களையும் வரவேறப்பையும் வாடிக்கையாளர்களிடம் கிடைத்த பயனாய் பிஎஸ்என்எல் மீண்டும் அதன் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்காக இத்திட்டத்தை நீட்டித்துள்ளது
இந்த திட்டத்தின் அனைத்து பழைய வாக்குறுதிகளும் அப்படியே நீடிக்க இரண்டு புதிய நிபந்தனைகளை பிஎஸ்என்எல் வழங்கியுள்ளத்து.

நிபந்தனை #01
இந்த திட்டம் புதிய லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பிரத்தியேக உள்ளது. தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் எல்எல்-49 திட்டத்தை அனுபவிக்க தங்கள் திட்டத்தை மாற்ற அனுமதி இல்லை.

நிபந்தனை #02
வாடிக்கையாளர்கள் தாங்களாகவே கிளிப் கருவியை ஏற்பாடு செய்துகொள்ள முடியும் அதற்காக வெளி சந்தைகளில் ரூ.600/- கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இது போன்ற சந்தர்ப்பங்களில், கனெக்ஷன் பெட்ரா மாதத்தில் இருந்து எந்த நெட்வர்க் உடனாகவும் கூடுதலாக 300 இலவச அழைப்புகள் மாதம் ஒரு முறை கிடைக்கப்பெறும்.

ஸீரோ கட்டண செலவு
'எக்ஸ்பீரியன்ஸ் எல்எல்-49' திட்டம் ஒரு ஸீரோ கட்டண செலவு திட்டமாகும். அதாவது நிறுவல் தொடங்கி நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு முற்றிலுமாக கட்டமின்றி கிடைக்கிறது.
புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூ.49/- மட்டுமே
இந்த திட்டத்தை பெற முதல் ஆறு மாதங்களுக்கு ரூ.49/- மட்டுமே செலுத்தினால் போதும், ஆறு மாதங்களுக்கு பின்னர் இது சாதாரண திட்டமாக மாற்றியமைக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமை
இந்த திட்டத்தை பெறும் சந்தாதாரர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று எந்த நெட்வொர்க் உடனும் 24 மணி வரம்பற்ற இலவச அழைப்புகளை அனுபவிக்க முடியும்.

அன்லிமிடட் இலவச இரவு நேர அழைப்பு
உடன் காலை 9 மணி முதல் காலை 7 மணி வரையிலாக எந்த நெட்வர்க் உடனும் (உள்ளூர்/ வெளியூர்) அன்லிமிடட் இலவச இரவு நேர அழைப்புகளையும் அனுபவிக்க முடியும்.

இலவச பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சிம் கார்டு
இத்திட்டத்தின் கீழ் லேண்ட்லைன் இணைப்புகளை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு இலவச பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சிம் கார்டு உடன் வழங்கப்படும்.

மேலும் படிக்க
ரூ.500க்கு 600 ஜிபி டேட்டா : ஜியோவின் அடுத்த அதிரடி.!


Click it and Unblock the Notifications