பூமி போல் செவ்வாய் கிரகத்திலும் இதே பிரச்சனையா? 5 கிமீ தூரத்திற்கு அதிக சேதம்: நாசா வெளியிட்ட வைரல் புகைப்படம்

|

செவ்வாய் கிரகத்தைப் பற்றிய செய்திகள் சமீப காலமாக அதிகம் வெளியாகி வருகிறது. காரணம், உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி குழுக்கள் செவ்வாய் கிரகத்தில் ஏராளமான புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகச் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் எக்ஸோ-மார்ஸ் ஆர்பிட்டர் தற்பொழுது ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதில் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது.

5 கிமீ நீளத்திற்கு செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு

5 கிமீ நீளத்திற்கு செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு

பூமியில் நிலச்சரிவு ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்துவது போல இப்போது, செவ்வாய் கிரகத்திலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு முதல் முறையாக எக்ஸோ-மார்ஸ் ஆர்பிட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உருவான இந்த நிலச்சரிவானது சுமார் 5 கிமீ நீளத்திற்கும் அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளது என்று விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஆர்பிட்டர் பதிவு செய்த படங்கள்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஆர்பிட்டர் பதிவு செய்த படங்கள்

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) தற்பொழுது இன்ஸ்டாகிராம் மற்றும் அதன் சமூக வலைத்தள பக்கங்கள் வழியாகப் பகிர்ந்துள்ளது. விண்வெளி ஏஜென்சியின் கூற்றுப்படி, எக்ஸோ-மார்ஸ் ஆர்பிட்டர் ரெட் பிளானட் மேலே சுற்றிக்கொண்டிருக்கும் நிலச்சரிவைக் கைப்பற்றியது என்று கூறப்பட்டுள்ளது.

ஒரே சீரிஸ் மொத்தமும் க்ளோஸ்- ஹாட்ஸ்டாரை அன்-இன்ஸ்டால் செய்யும் மக்கள்: அதில் அப்படி என்ன இருக்கு?ஒரே சீரிஸ் மொத்தமும் க்ளோஸ்- ஹாட்ஸ்டாரை அன்-இன்ஸ்டால் செய்யும் மக்கள்: அதில் அப்படி என்ன இருக்கு?

பூமியில் ஏற்படும் நிலச்சரிவு போல் செவ்வாயில் நிலச்சரிவு

பூமியில் ஏற்படும் நிலச்சரிவு போல் செவ்வாயில் நிலச்சரிவு

நிலச்சரிவுகள் என்பது குறிப்பிட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் நிகழும் புவியியல் செயல்முறைகள் ஆகும்.பூமியில் ஏற்படும் நிலச்சரிவு போல் செவ்வாய் கிரகத்திலும் நிலச்சரிவு என்பது பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் நிகழ்கின்றது. மேலும், செவ்வாய் கிரக உடல்களில் காணப்படும் ஒத்த செயல்முறைகளைப் புரிந்துகொள்ளப் பூமி ஒப்புமைகளை நாம் பயன்படுத்தப்படுத்திப் புரிந்துகொள்ள முயலலாம் என்று ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.

செவ்வாயில் இடிந்து விழுந்த பகுதி எப்படி இருக்கிறது?

செவ்வாயில் இடிந்து விழுந்த பகுதி எப்படி இருக்கிறது?

இந்த குறிப்பிட்ட நிலச்சரிவுக்கு, பொருள் இடிந்து விழுந்த பகுதி சட்டத்திற்கு வெளியே உள்ளது என்று ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.இருப்பினும் நிலச்சரிவின் தடங்கல் மற்றும் வைப்பு மண்டலங்கள் நீளமான கோடுகளுடன் பாயும் முகடுகள் போன்ற சிறந்த விவரங்களை ஆர்பிட்டரின் புகைப்படங்கள் காட்டுகின்றது. இருப்பினும், விஞ்ஞானிகளுக்கு இந்த சேதம் எப்போது ஏற்பட்டது என்ற விபரம் தெரியவில்லை.

சீனா உருவாகியுள்ள உலகின் மிகப்பெரிய காற்றாலை.. இதன் ராட்சஸ சக்தி எவ்வளவு பெரியது தெரியுமா?சீனா உருவாகியுள்ள உலகின் மிகப்பெரிய காற்றாலை.. இதன் ராட்சஸ சக்தி எவ்வளவு பெரியது தெரியுமா?

எப்போது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது?

எப்போது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது?

ஆர்பிட்டரின் புகைப்படங்கள் காட்டும் நிலச்சரிவின் தாக்கம் மற்றும் அதன் பள்ளங்களின் தோற்றங்கள் இது சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு அல்ல என்பதைக் குறிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.ஆனால், இதன் உருவாக்கம் துல்லியமாக எந்த தேதியில் நிகழ்ந்தது என்பதை கண்டறிவது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

எக்ஸோ மார்ஸ் டிரேஸ் கேஸ் ஆர்பிட்டர் (TGO) செவ்வாயில் என்ன-என்ன செய்கிறது?

எக்ஸோ மார்ஸ் டிரேஸ் கேஸ் ஆர்பிட்டர் (TGO) செவ்வாயில் என்ன-என்ன செய்கிறது?

எக்ஸோ மார்ஸ் டிரேஸ் கேஸ் ஆர்பிட்டர் (TGO) என்பது 2016 இல் செவ்வாய் கிரகத்தைச் சென்றடைந்தது. ஆனால், இதன் முழு அறிவியல் பணியை ஆர்பிட்டர் 2018 ஆம் ஆண்டில் தொடங்கியது. இந்த ஆர்பிட்டர் இது வரை கண்கவர் படங்களைப் பூமிக்குத் திருப்பு அனுப்புவது மட்டுமல்லாமல், கிரகத்தின் வளிமண்டல வாயுக்களின் மிகச்சிறந்த தகவல்களையும் வழங்கி வருகிறது. மேலும் கிரகத்தின் மேற்பரப்பை நீர் நிறைந்த இடங்களுக்கு வரைபடமாக்குகிறது.

SpaceX மூலம் விண்வெளிக்கு சென்ற எறும்புகள்.. எதற்காக எறும்புகள் இறால் உடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?SpaceX மூலம் விண்வெளிக்கு சென்ற எறும்புகள்.. எதற்காக எறும்புகள் இறால் உடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?

2023 இல் செவ்வாய் கிரகத்தில் நடக்க போகும் ஆராய்ச்சி

2023 இல் செவ்வாய் கிரகத்தில் நடக்க போகும் ஆராய்ச்சி

இந்த ஆர்பிட்டரின் அடுத்த முக்கிய வேலையாக வரும் 2023 இல் செவ்வாய் கிரகத்திற்கு வரும் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் ரோவர் மற்றும் கசாசோக் பிளாட்பார்ம் கொண்ட இரண்டாவது எக்ஸோமார்ஸ் பணிக்கான தரவு ரிலே சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகம் மற்றும் பூமி போன்ற கிரகங்களின் சுவாரசியமான தகவல்கள் பற்றி அறிய எண்களின் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
5 Km Long Landslide On Mars Captured By European Exo Mars Orbiter : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X