லாலிபாப் கொண்ட 5 இன்ச் ஸ்மார்ட்போன் ரூ.10,990 தான்
எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புதிய 3ஜி கருவினை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியை அளிக்கும் விதமாக இந்த கருவி அமையும் என்பதை இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலையின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

எல்ஜி மேக்ஸ் எனும் புதிய ஸ்மார்ட்போன் 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை வை-பை, ப்ளூடூத் 4.0, ஏ-ஜிபிஎஸ் 2.0 மற்றும் 2540 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. எல்ஜி மேக்ஸ் கருவி சிங்கிள் மற்றும் டூயல் சிம் என இரு மாடல்களில் கிடைக்கும் என்றும் வெள்ளை, டைட்டன் அல்லது கோல்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications