Home
News

இந்த 5 விஷயம் தெரிஞ்சா Nothing போன் 2-ஐ யாருமே வாங்க மாட்டீங்க! நல்ல போன் தான்.. ஆனா?

நத்திங் (Nothing) என்ற பெயருடன் ஒரு பிராண்டை உருவாக்கி, அதே உலக பேமஸ் ஆக்கி, முதல் ஒரு போனை வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்ற பிறகு, நிறுவனம் அதனுடைய 2வது ஸ்மார்ட்போனான நத்திங் போன் 2 சாதனத்தை அறிமுகம் செய்தது.

நத்திங் போன் 2 (Nothing Phone 2) சாதனத்தை நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஆனால், இதன் முன்னோடி மாடலான நத்திங் போன் 1 (Nothing Phone 1) மாடலுக்கும் இதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்று எதையும் நம்மால் வித்தியாசப்படுத்த முடியவில்லை. குறிப்பாக இதன் டிசைனில் பெரியளவு மாற்றத்தை நாம் பார்க்கவில்லை.

இந்த 5 விஷயம் தெரிஞ்சா Nothing போன் 2-ஐ யாருமே வாங்க மாட்டீங்க!

சரி, இந்த புதிய நத்திங் போன் 2 சாதனத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்று சிலருக்கு குழப்பம் இருக்கலாம். உங்கள் குழப்பத்தை தெளிவுபடுத்த 5 உண்மைகளை சொல்ல போகிறோம். இந்த உண்மை தெரிந்தால், உங்களில் பலர் நத்திங் போன் 2 சாதனத்தை வாங்க தயக்கம் காட்டுவீர்கள். எது எப்படியாக இருந்தாலும் உண்மையை சொல்வது தானே நியாயமானது.

நத்திங் போன் 2 சாதனத்தை வாங்காமல் இருக்க இந்த 5 காரணங்களை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.

1. முதல் விஷயம் Nothing Phone 2 சாதனத்தில் உள்ள கேமரா அவ்வளவு சிறப்பாக இல்லை. அதற்கு இன்னும் பல மேம்படுத்தல்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக புகைப்படங்களில் டீட்டைல் மற்றும் கான்ட்ராஸ்ட் குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இது டூயல் லென்ஸ் கேமராவுடன் வருகிறது.

2. இரண்டாவது விஷயம், இதன் வடிவமைப்பு தான்.. முதல் மாடலான நத்திங் போன் 1 மாடலுக்கும், இரண்டாவது மாடலான நத்திங் போன் 2 சாதனத்திற்கும் இடையிலான டிசைனில் மிகப்பெரிய மாற்றம் என்று எதுவுமில்லை. இருப்பினும், நிறுவனம் அதன் தனித்துவத்தை கிழ்ப் லைட்டிங்கில் காண்பித்துள்ளது.

இந்த 5 விஷயம் தெரிஞ்சா Nothing போன் 2-ஐ யாருமே வாங்க மாட்டீங்க!

3.மூன்றாவது விஷயமாக இதன் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் சில நேரங்களில் சொதப்பலாக அமைந்துள்ளது. இதன் பேட்டரி ஆயுள் டீசெண்டாக அமைந்திருந்தாலும், மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் இதன் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் சற்று மெதுவாக உள்ளது என்பதே உண்மை.

4. நான்காவது விஷயம், இந்த ஸ்மார்ட்போன் அதன் பாக்ஸ் உடன் சார்ஜ்ஜரை கொண்டிருக்கவில்லை. இந்த விலை புள்ளியில் விற்பனையாகும் பல ஸ்மார்ட்போன்களுடன் சார்ஜ்ர் ஹெட் மற்றும் கேபிள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், நத்திங் நிறுவனம் இதை செய்யவில்லை. நத்திங் போன் 2 டிவைஸை வாங்குபவர்கள் தனியாக சார்ஜ்ஜரை வாங்க வேண்டும்.

5. ஐந்தாவது மாற்று இறுதி நெகட்டிவ் விஷயமாக இந்த போனின் விலை பார்க்கப்படுகிறது. உண்மையை சொல்ல போனால், இதன் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அம்சங்களுக்கு ஏற்ற விலை இது இல்லை என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த சாதனம் ரூ.44,999 என்ற விலையில் விற்பனையாகிறது. ஆனால், இது சற்று கணிசமாக அதிக விலை என்று கூறப்படுகிறது.

இப்படி நத்திங் போன் 2 சாதனத்தை வாங்க 5 நெகட்டிக் விஷயங்கள் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு உங்கள் முடிவை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளுங்கள். கேமரா அப்டேட்டை நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக குறைபாடுகளை நிறுவனம் சரி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 Important Reasons To Not To Buy Nothing Phone 2 Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X