Home
News

ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்.. கிரெடிட் கார்டு, UPI முதல் 3 வகை விலை உயர்வு வரை!

2025 ஆகஸ்ட் மாதத்தில் உங்கள் மாதாந்திர செலவுகளை நேரடியாக பாதிக்கக்கூடிய, நிதி தொடர்பான சில முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. கிரெடிட் கார்டு மற்றும் யுபிஐ விதிகளில் ஏற்படும் மாற்றங்கள் முதல் எதெல்லாம் விலை உயர்வை சந்திக்கலாம் என்பது வரையிலாக ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்பே நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள் இதோ:

1. எஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit Card) சேவையில் முக்கிய மாற்றம்: ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட சப் பிராண்டட் கிரெடிட் கார்டுகளுடன் முன்னர் வழங்கப்பட்ட இலவச விமான விபத்து காப்பீட்டு தொகை ஆனது எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளில் கிடைக்காது.

ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்!

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான இந்த காப்பீடு, யுசிஓ வங்கி, மத்திய வங்கி, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் அலகாபாத் வங்கி போன்ற வங்கிகளுடன் இணைந்து வழங்கப்பட்ட எலைட் (ELITE) மற்றும் ப்ரைம் (PRIME) கார்டுகளின் வழியாக கிடைத்தது. இந்த பலன் தற்போது நீக்கப்படுவதால் அடிக்கடி விமானங்களில் பயணிப்பவர்கள் பயணக்காப்பீட்டிற்கு கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும்.

2. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற உட்பட யுபிஐ (UPI) சேவையில் முக்கிய மாற்றம்: ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், சர்வர் சுமையை குறைக்கவும், யுபிஐ சேவையின் வேகத்தை மேம்படுத்தவும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களில் என்பிசிஐ (NPCI) ஆனது புதிய பயன்பாட்டு வரம்புகளை அமலுக்கு கொண்டுவருகிறது

இதன்கீழ் 4 மாற்றங்கள் அமலுக்கு வரும்:
1. பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள்: ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே
2. மொபைல் நம்பர் இதன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் சரிபார்ப்புகள்: ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே
3. ஆட்டோபே வழியிலான பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் 3 நிலையான நேர இடைவெளிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்
4. தோல்வியுற்ற பரிவர்த்தனை நிலையை ஒரு நாளைக்கு 3 முறை மட்டுமே பார்க்க முடியும்

3. எல்பிஜி விலைகள் திருத்தப்பட வாய்ப்புள்ளது: ஆகஸ்ட் 1 ஆம் தேதி உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதத்தில், வணிக எல்பிஜி விலை ரூ.60 குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வீட்டு சிலிண்டர்களின் விலையும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை இது நடக்கவில்லை என்றால் அடிப்படை சமையல் தேவைகளுக்கு ஆகஸ்ட் மாதம் அதிக பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

4. சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகளும் உயரலாம்: கடந்த ஏப்ரல் 9 முதல் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகள் மாறாமல் உள்ளன, ஆனால் ஆகஸ்ட் 1 முதல் இதில் திருத்தம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. விலைகள் உயர்ந்தால் பலருடைய பயணம் மற்றும் சமையல் செலவுகள் அதிகரிக்கக்கூடும். அறியாதோர்களுக்கு இவ்வகை எரிபொருள்கள் பொதுவாக பெருநகரங்களில் ஆட்டோக்கள், டாக்ஸிகள் மற்றும் சமையலறை எரிவாயு குழாய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

5. விமான டிக்கெட்களின் விலையும் அதிகரிக்கக்கூடும்: விமானங்களுக்கு சக்தி அளிக்கும் எரிபொருளான ஏவியேஷன் டர்பைன் எரிபொருளின் (ATF) விலைகள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருத்தப்பட உள்ளன. இந்த விலைகள் உயர்ந்தால், விமான நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட அதிக செலவை பயணிகளின் தலையில் கட்டக்கூடும்; அதாவது விமான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படலாம். ஆகஸ்ட் மாதத்தில் பயணிக்க திட்டமிடுபவர்கள் தொடர்ச்சியாக விமான கட்டணங்களை கண்காணிக்க வேண்டும், ஏனெனில் முன்கூட்டியே முன்பதிவு செய்வது கடைசி நேர விலை உயர்வை தவிர்க்க உதவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 Big Financial Changes Come to Effect From August 1 Including UPI SBI Credit Card and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X