Home
News

Jio ரூ.249 பிளான் போனால் என்ன.. அதே மாதிரி 1 இல்ல 2 இல்ல.. மொத்தம் 5 பிளான் இருக்கு.. இதோ லிஸ்ட்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.249 விலை கொண்ட அதன் பிரபலமான 1ஜிபி ப்ரீபெய்ட் திட்டத்தை நிறுத்திவிட்டது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்து இருக்கலாம். ரூ.249 நீக்கப்பட்டதோடு.. ஜியோ சேவையின் கீழ் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் எந்த திட்டமும் இல்லை என்கிற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த கட்டத்தில் - நீக்கப்பட்ட ரூ.249 க்கு சரியான ஆல்டர்நேட்டிவ் பிளான்கள் (Alternative Plans For Jio Rs.249 Plan) அதாவது மாற்று திட்டங்கள் என்னென்ன என்கிற கேள்வி உங்களுக்கும் எழுந்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏனென்றால் பெரும்பாலான ஜியோ யூசர்களின் தற்போதைய தேடல் அதுவாகத்தான் இருக்கிறது.

Jio ரூ.249 பிளான் போனால் என்ன.. அதே மாதிரி 5 பிளான் இருக்கு!

01. ரிலையன்ஸ் ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்: இந்த திட்டம் 22 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இது தினமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

02. ரிலையன்ஸ் ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்: இந்த திட்டம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இது தினமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

03. ரிலையன்ஸ் ஜியோ ரூ.319 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்: இந்த திட்டம் 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இது தினமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

04. ரிலையன்ஸ் ஜியோ ரூ.329 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்: இந்த திட்டம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இது தினமும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய வழக்கமான நன்மைகளை வழங்குகிறது. கூடுதலாக ஜியோசாவன் ப்ரோ சந்தாவை இலவசமாக வழங்குகிறது.

05. ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்: இந்த திட்டம் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இது தினமும் 2 ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய வழக்கமான நன்மைகளை வழங்குகிறது. கூடுதலாக ட்ரூ 5ஜி டேட்டா நன்மையயும் வழங்குகிறது.

ஒருவேளை நீங்கள் ஏர்டெல் கஸ்டமராக இருந்தால்.. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் அதன் ரூ.249 திட்டத்தை நீக்கியுள்ளது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். இனி பார்தி ஏர்டெல்லின் பேஸிக் ரீசார்ஜ் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டமாக இருக்கும். இது டெய்லி 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. ஜியோவை போலவே இனி ஏர்டெல்லின் கீழும் டெய்லி 1ஜிபி டேட்டாவை வழங்கும் எந்த திட்டமும் இருக்காது. இதற்கு அடுத்தபடியாக ரூ.361 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இது மொத்தம் 50ஜிபி டேட்டாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.

ஆக இப்போதைக்கு மிகவும் மலிவான விலகி ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் நிறுவனம் தான். அது பிஎஸ்என்எல் ரூ.141 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs 141 Plan) ஆகும். இது 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இது டெய்லி 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி வாய்ஸ் கால்கள் மற்றும் 200 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
5 Best Alternatives to Removed Jio Rs 249 plan is Rs 239 Rs 299 Rs 319 Rs 329 and Rs 349
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X