ஜியோ பற்றிய வதந்தி, முன்கூட்டியே உஷாராகி பிஎஸ்என்எல் வழங்கும் சலுகைகள்..!
ரிலையன்ஸ் ஜியோவிற்கு அடுத்தபடியாக அதிகபட்ச சலுகைகளை வழங்கும் நிறுவனமாக பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனம் திகழ்கிறது. ஆனால், மறுபக்கம் நாட்டின் வளர்ந்த பிராட்பேண்ட் சேவையிலும் பல சலுகைகளை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாபைபர் திட்டம் பற்றிய பல வதந்திகள் ஏற்கனவே நாடு முழுவதும்பரவி விட்ட நிலையில் அது பரவலாக ரூ.500/-ல் இருந்து தனது திட்டங்களை தொடங்க வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.
இதுபோன்ற வதந்திகள் மூலம் பிஎஸ்என்எல் தனது புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. பிஎஸ்என்எல்-ன் பிபி249 பிராட்பேண்ட் திட்டத்தை விட பிபிஜி யூல்டி 999 தான் சிறந்தது என்று பிஎஸ்என்எல் தனக்கு தானே போட்டியிட்டு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அப்படியாக, பிபி249 பிராட்பேண்ட் திட்டத்தை விட பிபிஜி யூல்டி 999 எப்படி சிறந்தது என்பதை பற்றிய தொகுப்பே இது.

வேகம் :
பிபி249 திட்டம் போல் அல்லாமல், இந்த பேக் 4எம்பிபிஎஸ் வேகத்தில் கிடைக்கப்பெறுகிறது. எனினும் 10ஜிபி என்ற அளவிலான தரவு பயன்பாட்டு வரம்பிற்கு பிறகு வேகம் 1எம்பிபிஎஸ் என்று குறையும்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இலவச அழைப்புகள் :
இதில் 30 நாட்கள் செல்லுபடியாகும் 400 நிமிடங்களுக்கான இலவச அழைப்பை நீங்கள் பெற முடியும் மற்றும், பயன்படுத்தாத நிமிடங்கள் 30 நாட்களுக்கு பிறகு உங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்து பயனர்களுக்கும் :
இந்த ரூ.999 பேக் ஆனது அனைத்து பயனர்கள் மற்றும் புதிய பயனர்களுக்கும் உடனடியாக இணைப்பு பெறும் வசதியோடு வழங்கப்படுகிறது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில் :
வார நாட்களில் வழங்கப்படும் வழக்கமான 400 இலவச அழைப்பு நிமிடங்கள் தவிர்த்து நீங்கள் ஒவ்வொரு ஞாயிறன்றும் ஒரு மாதம் வரை இலவச அழைப்பு வரம்பற்ற அழைப்புகளை அனுபவிக்க முடியும். மேலும், இந்த சருகைக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு. நீங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள் நிகழ்த்திக்கொள்ளலாம்.

வருடாந்திர பேக் :
இந்த புதிய பேக் உடன், பிஎஸ்என்எல் ஒரு புதிய அறிமுகம் செய்துள்ளது அதாவது ஒவ்வொரு பயனரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கான முழு பேக் தொகையையும் செலுத்த முடியும்முறையை அறிமுகப்படுத்தி உள்ளது மற்றும், வருடாந்திர பேக் கட்டணம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டும் அதே விலையில் கூடுதலாக சில தள்ளுபடிகளையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :
வெறும் ரூ.1/-க்கு வரம்பற்ற 4ஜி தரவு : ஐடியா அதிரடி..!


Click it and Unblock the Notifications