புது மினிமம் பேலன்ஸ் ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. 5 வங்கிகளின் சேவிங்ஸ் அக்கவுண்ட்களில் அதிரடி மாற்றம்!
கனரா வங்கி, இந்தியன் பேங்க் உட்பட மொத்தம் 6 முக்கிய வங்கிகள் ஆனது தங்கள் வங்கிகள் சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்து உள்ள வாடிக்கையாளர்களுக்கான கட்டாய நடைமுறை (Compulsory Practice) ஒன்றை நீக்கி உள்ளன. அதென்ன நடைமுறை? இதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:
இந்தியாவின் 6 முக்கிய வங்கிகள் ஆனது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளில் சராசரி மாதாந்திர இருப்பை (Average Monthly Balance - AMB) வைத்திருக்கும் கட்டாய நடைமுறையை நீக்கி உள்ளன. கீழ்வரும் 6 வங்கிகளும் தங்களுடைய வாடிக்கையாளர்களின் பெரும்பாலான சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பிற்கான அளவுகோல்களை நீக்கியுள்ளன.

சராசரி மாதாந்திர இருப்பு என்றால் என்ன? சராசரி மாதாந்திர இருப்பு என்பது ஒரு காலண்டர் மாதம் முழுவதும் தனிநபர்கள் தங்கள் சேவிங்ஸ் அல்லது கரண்ட் அக்கவுண்டில் பராமரிக்க வேண்டிய சராசரி பேலன்ஸ் ஆகும். ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும், ஒருவருடைய அக்கவுண்ட்டில் உள்ள சராசரி மாதாந்திர இருப்பு ஆனது வங்கியால் கணக்கிடப்படுகிறது.
ஒருவேளை குறிப்பிட்ட அக்கவுண்ட்டில் தேவையான சராசரி இருப்பை பராமரிக்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்கின் வகையை பொறுத்து இதற்கான அபராத தொகை மாறுபடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் கீழ்வரும் 6 வங்கிகளில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள் இனிமேல் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.
1. பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda): ஜூலை 1, 2025 முதல் அனைத்து நிலையான சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காததற்கான கட்டணங்களை பரோடா வங்கி தள்ளுபடி செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் ஏஎம்பி குறைவாக இருந்தால் அவர்களுக்கு எந்த அபராத கட்டணமும் விதிக்கப்படாது. இருப்பினும், இந்த விலக்கு பிரீமியம் சேவிங்ஸ் அக்கவுண்ட்களுக்குப் பொருந்தாது.
2. கனரா வங்கி (Canara Bank): கனரா வங்கி ஆனது வழக்கமான சேவிங்ஸ் அக்கவுண்ட்கள், சசேலரி அக்கவுண்ட்கள் மற்றும் என்ஆர்ஐ (NRI) சேவிங்ஸ் அக்கவுண்ட்கள் உட்பட அனைத்து வகையான சேமிப்பு வங்கி கணக்குகளுக்கும் மே 2025 இல் சராசரி மாதாந்திர இருப்பு தேவையைத் தள்ளுபடி செய்தது.
3. இந்தியன் வங்கி (Indian Bank): ஜூலை 7, 2025 முதல், இந்தியன் வங்கி ஆனது குறைந்தபட்ச இருப்பு அளவுகோல்களைத்தள்ளுபடி செய்துள்ளது மற்றும் அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்புக்கான முழுமையான தள்ளுபடியையும் அறிவித்து உள்ளது.
4. பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank): பைனான்சியல் இன்க்ளூஷன் (நிதி சேர்க்கையை) ஊக்குவிக்கவும், வங்கி சேவையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றவும், சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காததற்காக இனி அபராதம் விதிக்கப்போவதில்லை என்று பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அறிவித்துள்ளது.
ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும், வாடிக்கையாளர்களுக்கான இந்த முன்னுரிமை முயற்சி, குறிப்பாக பெண்கள், விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. பேலன்ஸ் மெயின்டெனன்ஸ் அபராதங்களின் அழுத்தம் இல்லாமல் வங்கி சேவைகளை எளிதாக அணுகுவதை இது உறுதி செய்கிறது என்று பிஎன்பி வங்கி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
5. பேங்க் ஆப் இந்தியா (Bank of India): சேவிங்ஸ் அக்கவுண்ட்களில் குறைந்தபட்ச பேலன்ஸ் இருப்பதற்கான அபராதங்களை இந்தியன் வங்கியும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மாற்றங்கள் சந்தை இயக்கவியலுடன் ஒத்துப்போதல், நிதி நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து பிரிவுகளிலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) தான் நடைமுறையை முதன்முதலில் கொண்டு வந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த வங்கி 2020 ஆம் ஆண்டிலேயே குறைந்தபட்ச இருப்பு தேவைகளைத் தள்ளுபடி செய்தது!


Click it and Unblock the Notifications








