சாம்சங் அம்சம் கொண்ட ஐபோனா? நம்பலாமா பாஸ்.??

Written By:

ஆப்பிள் நிறுவனம் 5.8 இன்ச் திரை கொண்ட ஐபோன் கருவியை வெளியிட இருப்பதாக சில காலமாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த கருவியில் சாம்சங் அம்சம் ஒன்று வழங்கப்படலாம் என்ற செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொன்டிருக்கின்றன.

சாம்சங் அம்சம் கொண்ட ஐபோனா? நம்பலாமா பாஸ்.??

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி கருவிகளில் வளைந்த திரை வழங்கப்பட்டிருந்ததை தொடர்ந்து வெளியாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் கருவியில் வளைந்த திரை வழங்கப்படலாம் என மேக்ரூமர்ஸ் என்ற இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சாம்சங் அம்சம் கொண்ட ஐபோனா? நம்பலாமா பாஸ்.??

வளையும் திறன் கொண்ட ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களை தயாரித்து அதற்கான காப்புரிமைகளை பெற முயற்சித்து வருவதை வைத்து இந்த செய்தி வெளியாகியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் கருவியில் ஃபேல்டெட் எட்ஜ் சைடு ஸ்கிரீன்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

சாம்சங் அம்சம் கொண்ட ஐபோனா? நம்பலாமா பாஸ்.??

இவ்வகை டிஸ்ப்ளேக்கள் ஓரங்களில் இருக்கும் பெஸல்களுக்கு பதில் விசேஷ பட்டன்கள் அல்லது ஜெஸ்ட்யூர் போன்ற அம்சங்களை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதோடு ஏஎம்ஓஎல்இடி வகை டிஸ்ப்ளேக்களை ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வாங்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

சாம்சங் அம்சம் கொண்ட ஐபோனா? நம்பலாமா பாஸ்.??

மேலும் ஆப்பிள் நிறுவன கருவிகளில் ஓஎல்இடி திரைகளை பொருத்த ஆப்பிள் திட்டமிட்டிருப்பதாகவும் நம்பப்படுகின்றது. இதனால் 2018 ஆம் ஆண்டு வெளியாகும் ஐபோன் கருவிகளில் இவ்வகை திரைகளை எதிர்பார்க்க முடியும்.

 

English summary
5.8 inch iPhone may have a curved display Inspired by Samsung Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot