Home
News

இது போதுமே.. ரூ.100 குள்ள இப்படி ஒரு Vodafone ரீசார்ஜ்-ஆ.. 28 நாட்கள், OTT நன்மை, 4GB டேட்டா!

விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடாபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited - VIL) ஆனது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக.. இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர் ஆக இருந்தாலும் கூட.. ஜியோ மற்றும் ஏர்டெல்லை போல நாடு முழுவதும் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யவில்லை என்றாலும் கூட.. வோடபோன் ஐடியாவிடம் ஜியோ மற்றும் ஏர்டெல் உடன் போட்டி போடும் அளவிலான சில ஸ்பெஷல் திட்டங்கள் உள்ளன.

அப்படியான ஒரு திட்டத்தை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம். இது ரூ.100 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் விஐ-யின் மலிவான ஓடிடி ப்ரீபெய்ட் திட்டம் (Vi Most Affordable OTT Prepaid Plan Under Rs.100) ஆகும். நாம் இங்கே பேசுவது ரூ.95 திட்டத்தை பற்றித்தான்.

இது போதுமே.. ரூ.100 குள்ள இப்படி ஒரு Vodafone ரீசார்ஜ்-ஆ!

இது ஒரு டேட்டா வவுச்சர் (Data Voucher) ஆகும். அதாவது இந்த திட்டத்தின் கீழ் வேலிடிட்டி எதுவும் கிடைக்காது. ஆனால் 4ஜி டேட்டா மற்றும் சில ஓடிடி நன்மைகள் கிடைக்கும். கிட்டத்தட்ட நாடு முழுவதும் உள்ள வோடாபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் இந்த திட்டத்தின் கீழ் அப்படி என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

"இது அப்படி ஒன்றும் தனித்துவமான ஒரு திட்டத்தை போல தெரியவில்லையே.. வோடாபோனின் போட்டியாளர்கள் ஆன ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் கூட ஓடிடி உடன்தொகுக்கப்பட்ட டேட்டா வவுச்சர்களை நீண்ட காலமாகவே வழங்கி வருகிறது தானே?" என்று நீங்கள் கேட்டால்.. உண்மைதான். ஆனாலும் இந்த திட்டம் நுகர்வோர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பதற்கான காரணம் - இது மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது!

வோடாபோன் ஐடியா ரூ.95-ன் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை, இது 14 நாட்கள் என்கிற "டேட்டா வேலிடிட்டி" உடன் வரும் 4ஜிபி டேட்டாவை வழங்கும். முன்னரே குறிப்பிட்டுள்ளபடி இந்த திட்டத்திற்கு எந்த செல்லுபடியாகும் காலமும் கிடையாது. ஆனால் 14 நாட்களுக்குள் நீங்கள் 4ஜிபி டேட்டாவை காலி செய்யவில்லை என்றால், அது காலாவதி ஆகிவிடும்.

ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை, ரூ.95 திட்டமானது சோனிலைவ் மொபைல் (SonyLIV Mobile) சந்தாவுடன் வருகிறது. இது 28 நாட்களுக்கு கிடைக்கும் ஒரு இலவச சந்தாவாகும். ஆக மொத்தம் இந்த திட்டத்தின் கீழ் 4ஜிபி டேட்டா மற்றும் சோனி லைவ் மொபைல் சந்தா கிடைக்கும். நீங்களொரு விஐ வாடிக்கையாளராக இருந்து, சோனி லைவ் சந்தாவை மிகவும் மலிவான விலைக்கு வாங்க விரும்பினால், இது உங்களுக்கான பெஸ்ட் ஆப்ஷன் ஆக இருக்கும்.

வோடபோன் ஐடியா அறிவித்த ரீசார்ஜ் விலை உயர்விற்கு ரூ.179 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் தற்போது ரூ.199 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளதும், ரூ.459 திட்டமானது ரூ.509 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளதும்,
ரூ.1,799 ஆனது தற்போது ரூ.1999 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டெய்லி டேட்டாவை வழங்கும் திட்டங்களை பொறுத்தவரை, ரூ.269 திட்டமானது இப்போது ரூ.299 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.299 திட்டமானது இப்போது ரூ.349 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.319 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த திட்டம் தற்போது ரூ.379 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நீண்ட கால வேலிடிட்டியை வழங்கும் திட்டங்களை பொறுத்தவரை, ரூ.579 திட்டமானது ரூ.479 இல் இருந்து ரூ.579 ஆக உயர்ந்துள்ளது.ரூ.649 திட்டமானது ரூ.539 இல் இருந்து இப்போது ரூ.649 ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.719 திட்டம் ரூ.859 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.839 திட்டம் ரூ.979 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
4GB data For 14 Days Free SonyLiv Mobile For 28 Days Check Vodafone Idea Rs 95 Prepaid Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X