இந்தியாவில் சில மாதங்களில் : ரூ.3000க்கு 4ஜி ஸ்மார்ட்போன்.!!

Written By:

இந்த ஆண்டின் இறுதிக்குள் 4ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.3,000க்கும் கீழ் குறைந்து விடும். இதனால் வாடிக்கையாளர்கள் குறைந்த செலவில் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த முடியும் என்பதோடு இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்தியில் மிகப்பெரிய போட்டி உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கருவிகளுக்கு பெயர் பெற்ற இந்திய சந்தையில் 4ஜி திறன் கொண்ட கருவிகள் குறைந்த விலைக்கு கிடைக்கும் போது, இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
4ஜி சேவை

4ஜி சேவை

இந்தியாவில் அதிவேகமாக 4ஜி சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், வோடாஃபோன் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் இந்த விலை சலுகையை நன்கு பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளன.

அறிமுகம்

அறிமுகம்

இதோடு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் தனது 4ஜி சேவையை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விலை

விலை

4ஜி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலை எந்தளவு குறைவாக கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இரு நிறுவனங்களை எடுத்து கொள்ள முடியும்.

நிறுவனம்

நிறுவனம்

இந்தியாவில் அதிகம் பிரபலம் இல்லாத சீன நிறுவனமான ஃபிகாம் தனது 4ஜி திறன் கொண்ட கருவிகளை அனைத்து சலுகைகளோடு சேர்த்து ரூ.3,999க்கு விற்பனை செய்து, இந்தியாவின் விலை குறைந்த முதல் 4ஜி ஸ்மார்ட்போன் கருவியை அறிமுகம் செய்துள்ளது.

மைக்ரோமேக்ஸ்

மைக்ரோமேக்ஸ்

இதோடு இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் 4ஜி திறன் கொண்ட கருவிகளை விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் விலை குறைந்த 3ஜி கருவிகள் ரூ.3,500 முதல் கிடைக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.

போட்டி

போட்டி

வரும் காலங்களில் 4ஜி கருவிகளுக்கு ஏற்பட இருக்கும் போட்டி தான் இந்த விலை குறைப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இதோடு சீனா, தாய்வான், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே 4ஜி நன்கு அறிமுகமாகிவிட்டதால், இவை குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டு விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்தை

சந்தை

இந்திய 4ஜி ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங், லெனோவோ, சியோமி, மைக்ரோமேக்ஸ் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தற்சமயம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அலைக்கற்றை

அலைக்கற்றை

தற்சமயம் 4ஜி திறன் கொண்ட கருவிகள் FD-LTE, மூலம் 1800 Mhz பேன்ட் மற்றும் TD-LTE, மூலம் 2300 MHz பேன்ட் பயன்படுத்துகின்றது. இந்த இரு தொழில்நுட்பங்களும் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கும் ஒத்துழைக்கும் என்பதால் போட்டி கடுமையானதாகவே இருக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பட்ஜெட் விலையில் புதிய லேப்டாப் அறிமுகம் : லெனோவோ அதிரடி.!!

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விசேஷ வசதியுடன் ஸ்மார்ட்போன்.!!

 முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
4G smartphones in India at Rs 3000 by year end Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot