தொடர்ந்து விலை அதிகரிக்கும் 4ஜி ஸ்மார்ட்போன்கள்.. இதெல்லாம் நல்லதுக்கே இல்லை..ஆமா.!
தொடர்ந்து நாட்கள் செல்ல செல்ல 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலை எதிர்பார்த்திடாத வகையில் அதிகரித்து வருகிறது. COVID-19 தொற்று உலகம் முழுவதும் பரவியதால், விதிக்க ஊரடங்கின் காரணமாக இது நடந்தது என்று கூறப்படுகிறது. இந்த நீண்ட கால இடைவெளி காரணமாக விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் மொபைல் உதிரிப்பாகங்களின் ஏற்றுமதிச் செலவும் அதிகரித்துள்ளது. இதனால், 4ஜி ஸ்மார்ட்போன் மீதான விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

இந்த விலை அதிகரிப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நல்லதே இல்லை
சிப்செட் விலைகள் கூட மிக அதிக தேவை காரணமாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஸ்மார்ட்போன் சந்தையில் மிகக் குறைந்த அளவு விநியோகம் மட்டுமே நிகழ்கிறது. இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2ஜி பயனர்களை முடிந்தவரை வேகமாக 4ஜி பயனராக மாற்ற முயன்று வருகின்றது. இதன் மூலம், ஒரு பயனருக்குச் சராசரி வருவாயை (ARPU) அதிகரித்து, அதன் மூலம் அதிக வருவாயைப் பெற விரும்புவதால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நலனுக்காக 4ஜி ஸ்மார்ட் போன்கள் மிக முக்கியமானதாக இருக்கிறது.

மலிவான 2ஜி போனில் இருந்து 4ஜி போனுக்கு மாறுவது சிக்கலா?
ஆனால் மலிவான 2ஜி போனில் இருந்து 4ஜி போனுக்கு மாறுவது என்பது சில மக்களுக்கு விருப்பமற்றதாக இருக்கக் கூடும். அதுவும், தற்போது உள்ள விலை அதிகரிப்பு சூழ்நிலையில் இது மிகவும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. ஆம், 4ஜி ஸ்மார்ட்போன்கள் விலை உயர்ந்ததாக இருந்தால், மக்கள் எப்படி அதிகமான பணம் செலவு செய்து 2ஜி சேவையில் இருந்து 4ஜி சேவைக்கு மாற்றம் செய்ய விரும்புவார்கள் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இது பல மரபு நெட்வொர்க் பயனர்கள் செய்ய விரும்பாத ஒன்றாக மாறிவிடும்.

இந்தியா 2ஜி முக்ட் ஆக வேண்டும் - முகேஷ் அம்பானி
இந்தியா 2ஜி முக்ட் ஆக வேண்டும் என்று முகேஷ் அம்பானி விரும்புகிறார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி தனது முந்தைய அறிக்கைகளில், ஜியோ இந்தியா 2ஜி முக்ட் நாடாக மாற விரும்புகிறது என்று கூறினார். இது இன்னும் பாரம்பரிய நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவர்களுக்குச் சிறந்த இணைப்பு அணுகலை வழங்கும். மேலும், இது தொழில்துறைக்கு அதிக வருவாய் ஈட்ட உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

2ஜி இல்ல 4ஜி எல்லாமே வயதானவர்களுக்கு ஒன்று தான்
2G நெட்வொர்க்கைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் வயதானவர்கள் மற்றும் அவர்களுக்கு 4G சேவையால், உண்மையிலேயே எந்தப் பயனும் இல்லை அல்லது 4G நெட்வொர்க்குகள் இல்லாத கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கும் இது பயனளிக்கப் போவதில்லை. இந்த சிக்கலை போக்கவே, ரிலையன்ஸ் ஜியோ இந்திய மக்களுக்கான மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போனாக அதன் ஜியோபோன் நெக்ஸ்ட் உடன் வெளிவர முயன்றுள்ளது. ஆனால், ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் கூட இதற்குக் கைகொடுக்கவில்லை.

இந்த நிலையை மாற்றும் என்று நம்பிய ஜியோபோன் நெக்ஸ்ட் நிலை என்னானது?
ஆம், ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், ஜியோபோன் நெக்ஸ்ட் 2ஜி பயனர்களை ஈர்க்கும் சாதனமாக இருக்காது என்பது தெளிவாகத் தெரிந்தது. காரணம் அதன் விலை தான். இது ஜியோ பயனர்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்திய எதையும் போலல்லாமல் இருந்தது. இன்று மிட்ரேஞ்ச் அல்லது பட்ஜெட் ரேஞ்ச் வகைகளில் கூட அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் முன்பு போல் மலிவு விலையில் கிடைப்பதில்லை. காரணம், உலகளாவிய சந்தையில் எழுந்துள்ள சப்ளை செயின் சிக்கல்கள் மற்றும் ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களின் உற்பத்தி செலவுகள் உயர்ந்துள்ளது.

மரபுவழி நெட்வொர்க்குகளால் ஆபரேட்டர்களுக்கு அதிக பராமரிப்பு செலவா?
மரபுவழி நெட்வொர்க்குகள் ஆபரேட்டர்களின் பராமரிப்புச் செலவை மட்டுமே கூட்டுகின்றன, மேலும் அவர்களுக்குப் போதுமான பணத்தை 2ஜி ஈட்டவில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையெனில், மற்றொரு கோளறுப்பிடியான சூழ்நிலையில் அனைத்து நிறுவனங்களும் போராட வேண்டியதிருக்கும். 4ஜி ஸ்மார்ட்போன்களின் நிலையே இப்படி இருக்கும் போது, ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் அதிகப்படியான 5ஜி சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications