அடடா., 4ஜி ஆதரவோடு Jio phone 5: மொபைல் விலையே ரூ.500-க்கு குறைவுதான்!

|

Jio phone 5 4ஜி இணைப்பு மற்றும் சமூகவலைதள பயன்பாடு ஆதரவு என அட்டகாச அம்சங்களோடு ரூ.500-க்கு குறைவான விலையில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜியோபோன் 5

ஜியோபோன் 5

தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விரைவில் ஜியோபோன் 5யை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து 91 மொபைல்கள் என்ற இணையதள அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜியோ போன் அடுத்த அறிமுகமாக ஜியோ 5 அறிமுகப்படுத்த வேலை பார்த்து வருகிறது.

ஜியோபோன் சிறப்பம்சங்கள்

ஜியோபோன் சிறப்பம்சங்கள்

அந்த அறிக்கையில் ஜியோபோன் சிறப்பம்சங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஜியோபோனின் லைட் மதிப்பாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜியோபோன் 5 பக்கா மலிவு விலையில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ போன் 5 விரைவில் வெளியாகும்

ஜியோ போன் 5 விரைவில் வெளியாகும்

ஜியோ போன் 5 விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அதன்விலை ரூ.500-க்கும் குறைவாக அதாவது ரூ.399 விலையில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இதைவிட கம்மி விலை மொபைல்போனே இல்லை என்பதாகும்.

மொபைல்போனில் ஆதரிக்கும் சிறப்பம்சங்கள்

மொபைல்போனில் ஆதரிக்கும் சிறப்பம்சங்கள்

ஜியோ போன் 5 மொபைல்போனில் ஆதரிக்கும் சிறப்பம்சங்கள் குறித்த வெளியான தகவலை பார்க்கலாம். அதில் 4ஜி எல்டிஇ ஆதரவு, Kaios மூலம் இயக்கப்படும், வாட்ஸ் ஆப், போஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள பயன்பாடுகள் இருக்கும். அதோடு வாடிக்கையாளர்கள் ஜியோபோனை போன்றே வோல்ட்இ அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

வானில் நிகழ்ந்த அதிசயம்.! சரியான நேரத்தில் பதிவு செய்த இசைக் கலைஞர்.!வானில் நிகழ்ந்த அதிசயம்.! சரியான நேரத்தில் பதிவு செய்த இசைக் கலைஞர்.!

2 ஆம் ஜெனரேஷன் பியூச்சர் போன்

2 ஆம் ஜெனரேஷன் பியூச்சர் போன்

ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த 2018 ஆண்டின் ஜூலை மாதத்தில், 2 ஆம் ஜெனரேஷன் பியூச்சர் போன் மாடலான ஜியோபோன் 2 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வைத்தது.

4ஜி வோல்ட்இ போன்

4ஜி வோல்ட்இ போன்

ஜியோபோன் 2-வில் 4ஜி வோல்ட்இ போன் பால்ஸ் சேல்ஸ் விற்பனையில் வெறும் ரூ.2,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஜியோ போன் 2 இன் க்யூவெர்ட்டி கீபேட், டூயல் சிம் கார்டு ஆதரவு, பெரிய திரை அனைவரையும் கவர்ந்தது.

வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர்

வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர்

ஜியோ போன் 2ல் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட அனைத்துச் செயலிகளையும் பயன்படுத்தும் விதமாக இருந்தது. இது 4ஜி வசதி கொண்டது. இதில் கூகுள் மேப், யூடூயூப் மற்றும் வீடியோ காலிங் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களோடு விற்பனைக்கு வந்தது.

Best Mobiles in India

English summary
4G LTE Jiophone 5 model may launch under Rs.500 here expected specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X