ஓப்பன்சிக்னல் ஸ்பீட் டெஸ்ட் அறிக்கை வெளியானது; யார் டாப்பு.? யாரு டூப்பு.? ஜியோவா.? ஏர்டெலா.?

இந்தியாவை பொறுத்தவரை இன்றும் கூட 4ஜி என்பது பல சிக்கல்களை சந்திக்கும் ஒரு சேவையாகவே திகழ்கிறது.

|

இந்தியாவை பொறுத்தவரை இன்றும் கூட 4ஜி என்பது பல சிக்கல்களை சந்திக்கும் ஒரு சேவையாகவே திகழ்கிறது. 4ஜி கிடைக்கும்தன்மையில் சிக்கல், பதிவிறக்க வேகத்தில் ஒரு சிக்கல், மறுபக்கம் பதிவேற்ற வேகத்தில் சிக்கல்.? என பல்வேறு சிக்கல்களை சந்தித்து, மெல்ல மெல்ல கடந்த வண்ணம் உள்ளது.

ஓப்பன்சிக்னல் ஸ்பீட் டெஸ்ட் அறிக்கை அவுட்: யார் டாப்பு.? யாரு டூப்பு.?

இருப்பினும், சமீபத்திய காலங்களில், பதிவிறக்க வேகத்தில் ஒரு பம்ப் (ஏற்றம்) காணப்படுகிறது. அதன் விளைவாக எல்டிஇ கவரேஜில் ஒரு நம்பமுடியாத 96% அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. சரி இதனால் நமக்கு என்ன நன்மை விளைந்தது.? பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவற்றின் இணைய வேகம் கூடியதா என்று கேட்டால்.? இதோ ஸ்பீட் டெஸ்ட் அறிக்கை.!

ஏர்டெல் மற்றும் ஐடியாவிற்கு என்ன இடம்.?

ஏர்டெல் மற்றும் ஐடியாவிற்கு என்ன இடம்.?

கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை, 4ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைக்கும் 4ஜி வேகம் சார்ந்த ஸ்பீட் டெஸ்ட்டை நிகழ்த்திய ஓப்பன்சிக்னல், அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் ஜியோவிற்கு என்ன இடம்.? ஏர்டெல் மற்றும் ஐடியாவிற்கு என்ன இடம் என்பதை விரிவாக காண்போம்.

சராசரி பதிவிறக்க வேகமானது.?

சராசரி பதிவிறக்க வேகமானது.?

முடிவுகளின்படி சராசரி பதிவிறக்க வேகமானது 6 Mbps என்று பதிவாகியுள்ளது. அதை பார்தி ஏர்டெல் நிறுவனமே எட்டியுள்ளது. அதற்கு அடுத்த படியாக முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 5.1 Mbps வேகத்துடன் இரண்டாவது இடத்திலும், வோடபோன் மற்றும் ஐடியா முறையே 4.5 Mbps மற்றும் 4.4 Mbps என்கிற சராசரி பதிவிறக்க வேகத்துடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் உள்ளன.

ஒட்டுமொத்த வேகம்.?

ஒட்டுமொத்த வேகம்.?

வெளியான அறிக்கையின்படி, 2017 ஆம் ஆண்டின் கோடையில், ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் ஆகியவற்றுக்கான ஒட்டுமொத்த வேகம் நிலையானதாக இருந்ததாகவும், ஆனால் செப்டம்பர் 2017 ல், மூன்று நெட்வொர்க்குகளிலும் மொத்த பதிவிறக்க வேகம் அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மூன்று ஆபரேட்டர்களும் தங்கள் LTE நெட்வொர்க்குகள் அடைய விரிவடைந்து, அதன் விளைவாக ஏர்டெல் மற்றும் ஐடியா நெட்வொர்க்குகளில் ஒட்டுமொத்த வேகம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

நிகராக தன்னை நிலைநிறுத்தியும் கொண்டுள்ளது.?

நிகராக தன்னை நிலைநிறுத்தியும் கொண்டுள்ளது.?

ஏர்டெல் மற்றும் ஐடியா இருவரும் மே 2017 மற்றும் பிப்ரவரி 2018 க்கு இடையே ஒட்டுமொத்த மெகாபிட் அதிகரிப்பை பதிவு செய்துள்ளனர். இதன் விளைவாக, ஏர்டெல் டிசம்பரில் மொத்த வேக மெட்ரிக் புள்ளியில், ஜியோவை கடந்து முன்னணி வகிக்கிறது. அதே நேரத்தில் வோடபோன் ஆனதும் ஐடியாவிற்கு நிகராக தன்னை நிலைநிறுத்தியும் கொண்டுள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
ரிலையன்ஸ் ஜியோ.?

ரிலையன்ஸ் ஜியோ.?

ரிலையன்ஸ் ஜியோவை பொறுத்தவரை, கடந்த சில மாதங்களுக்கு அதன் பதிவிறக்க வேகம் படிப்படியாக குறைந்துவிட்டது, அதை ஓப்பன்சிக்னல் அறிக்கை அப்பட்டமாக சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சூழ்நிலையை ஜியோ எவ்வாறு கையாளும் என்பதை பார்க்கவும், ஏர்டெல் அடித்ததில் இருந்து மேலே எழும்பி முன்னணிக்கு வந்து இருப்பதும், அதை தக்கவைத்துக்கொள்ளுமா என்பதும் பார்ப்பதற்கு இனி சுவாரசியமாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
4G in India: Airtel Achieved Better Download Speeds than Jio Between May 2017 and February 2018. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X