Home
News

இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமு! வெறும் 16 ரூபாய்க்கு 4G.. ஆட்டத்தை ஆரம்பித்த BSNL!

"4ஜி சேவைக்கே வழி இல்ல.. இதுல எங்க இருந்து 5ஜி நெட்வொர்க்கை கொடுக்க போகுதே தெரியல!" என்கிற ஏளன பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தின் கீழ், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தொடர்ச்சியாகவும், கடுமையாகவும் பணியாற்றி வருகிறது. அதனொரு பகுதியாக. "இது திருப்பி கொடுக்கும் நேரம்!" என்று கூறும்படியான ஒரு காரியத்தை BSNL செய்துள்ளது!

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தன் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அதிவேக நெட்வொர்க்கிற்கு இடம்பெயர்வதற்கான சிறப்பு திட்டங்களை விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. அதாவது பிஎஸ்என்எல் அதன் 4ஜி டேட்டா வவுச்சர் திட்டங்களை (4G Data Vouchers) விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. இதன் கீழ் பலவகையான திட்டங்கள் அணுக கிடைக்கிறது.

வெறும் 16 ரூபாய்க்கு 4G.. ஆட்டத்தை ஆரம்பித்த BSNL!

இருந்தாலும் கூட பெரும்பாலான BSNL வாடிக்கையாளர்கள், ஹை ஸ்பீட் டேட்டாவை பரிசோதனை செய்து பார்க்கும் மனநிலையில் தான் உள்ளனர். எனவே தான் இதன் கீழ் மிகவும் மலிவான விலை நிர்ணயங்களின் கீழ் மொத்தம் 6 திட்டங்கள் அணுக கிடைக்கின்றன. இன்னும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த 6 டேட்டா வவவுச்சர்களுமே ரூ.200 க்குள் என்கிற புள்ளிக்குள் அடங்குகின்றன.

முதல் திட்டம் ரூ.16 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது; கடைசி திட்டத்தின் விலை ரூ.198 ஆகும். இதற்கிடையில் மீதமுள்ள திட்டங்களின் விலை விவரங்கள்: ரூ.94, ரூ.97, ரூ.98 மற்றும் ரூ.151 ஆகும். இந்த 6 திட்டங்களுமே, ஒன்றுக்கு ஒன்று சற்றே வேறுபடும் கூடுதல் நன்மைகளை வழங்குகின்றன மற்றும் இந்த 6 திட்டங்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் (BSNL Prepaid Plans) ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது..

பிஎஸ்என்எல்-ன் ரூ 16 ரீசார்ஜ் ஆனது மொத்தம் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். மேலும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் மட்டுமே ஆகும். அதாவது இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த அதே நாளில், அதன் டேட்டா நன்மையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; இல்லை என்றால் அது காலாவதியாகி விடும். உங்களுடைய மெயின் ரீசார்ஜ் வழியாக கிடைக்கும் டெய்லி டேட்டா லிமிட்டை (Daily Data Limit) நீங்கள் தாண்டி விட்டீர்கள் என்றால்.. BSNL-ன் இந்த ரூ.16 திட்டம் உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்!

அடுத்ததாக உள்ள ரூ.94 ரீசார்ஜ் திட்டமானது, BSNL நிறுவனத்தின் ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர் (Special Tariff Voucher - STV) ஆகும். இது 3GB அளவிலான டேட்டாவை மட்டுமே வழங்கினாலும் கூட, 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. டேட்டா நன்மையை தவிர்த்து, இது கூடுதலாக 200 நிமிடங்கள் வாய்ஸ் கால் நன்மையையும் வழங்குகிறது. இதை பயன்படுத்தி எந்த நெட்வொர்க்கிற்கும் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பதும் இங்கே குறிப்பிடததக்கது.

மூன்றாவது திட்டம் ரூ.97 ஆகும். இந்த டேட்டா வவுச்சரின் வேலிடிட்டி 15 நாட்கள் ஆகும். இது வழங்கும் நன்மைகளை பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும், உடன் நாட்டிலுள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையையும் கிடைக்கும், கடைசியாக இது லோக்துன் கன்டென்ட்யையும் கூட வழங்கும். இதுவொரு அன்லிமிடெட் டேட்டா வவுச்சர் ஆகும், அதாவது தினசரி டேட்டா லிமிட்டை மீறிய பிறகு இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40Kbps ஆக குறைக்கப்படும்.

இந்த பட்டியலில் உள்ள நான்காவது திட்டம் ரூ.98 ரீசார்ஜ் ஆகும். இது 22 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தினமும் 2GB அளவிலான டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா லிமிட்டை தாண்டியதும், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40Kbps ஆக குறைக்கப்படும். அடுத்ததாக உள்ள பிஎஸ்என்எல்-ன் ரூ.151 ரீசார்ஜ் திட்டமானது ஒரு ஒர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) டேட்டா பேக் ஆகும். இதன் கீழ் மொத்தம் 40GB அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

கடைசியாக உள்ள ரூ.198 ரீசார்ஜ் திட்டமானது மொத்தம் 40 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் தினமும் 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். தினசரி வரம்பை கடந்த பின்னர், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40Kbps ஆக குறைக்கப்படும். டேட்டா நன்மையை தவிர்த்து இது இலவச லோக்தூண் கன்டென்ட் மற்றும் Challenges Arena மொபைல் கேமிங் சேவை ஆகியவற்றையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
4G Experience For Just Rs 16 Check Out These 6 4G Data Vouchers From BSNL Under Rs 200
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X