Home
News

கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லி பெண்ணிடம் 10 லட்சம் ரூபாயை ஏமாற்றிய மர்ம கும்பல்.! எச்சரிக்கை.!

இப்போது உள்ள புதிய தொழில்நுட்பங்கள் பலருக்கு வருமானம் பெற உதவியாக இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக பல்வேறு மக்கள் யூட்யூப், பேஸ்புக் போன்ற பல்வேறு தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு அவற்றின் மூலம் வருமானம் பெருகின்றனர். குறிப்பாக இதுபோன்ற தளங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கின்றன என்றே கூறலாம்.

ஆனாலும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் இந்த புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஏமாற்றவும் செய்கின்றனர். இந்நிலையில் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் மோசடி கும்பலிடம் 10 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். இப்போது இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பெண்ணிடம் 10 லட்சம் ரூபாயை ஏமாற்றிய மர்ம கும்பல்.! எச்சரிக்கை.!

மும்பையை சேர்ந்த பெண்

அதாவது மும்பையை சேர்ந்த 49 வயதான பெண் ஒருவர் சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் வீட்டில் இருந்த வேலை வாய்ப்பு எனக் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. இதை நம்பி அந்தப் பெண்ணும் அதில் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார்.

அப்போது தான் அந்த பெண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில் தாங்கள் அனுப்பும் வீடியோக்களை லைக் செய்தால் பணம் அனுப்புவோம் என்று அந்த கும்பல் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் அனுப்பிய லிங்கில் சென்று வீடியோவை லைக் செய்துள்ளார் அந்த பெண். அப்போது 150 ரூபாய் பெண்ணுடைய அக்கவுண்டில் கிரெடிட் ஆகியுள்ளது.

பெண்ணிடம் 10 லட்சம் ரூபாயை ஏமாற்றிய மர்ம கும்பல்.! எச்சரிக்கை.!

இந்த 150 ரூபாய் வந்ததால் மகிழ்ச்சியடைந்த அந்த பெண் தொடர்ந்து தனக்கு அனுப்பப்பட்ட வீடியோக்களை லைக் செய்துள்ளார். ஆனால் அதற்கு எவ்வித பணமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தாங்கள் சொல்லும் பிட்காயின்-இல் முதலீடு செய்யும்படியும் அதன்பிறகு சில டாஸ்க்குகளை முடிக்க வேண்டும் என அந்த பெண்ணுக்கு மெசேஜ் வந்துள்ளது.

கம்பி கட்டுற கதை

அந்த பெண்ணும் அவர்கள் சொன்னபடியே செய்திருக்கிறார். அதற்குபிறகு விர்ச்சுவல் அக்கவுண்ட் மூலமாக, அவருக்கு ரூ.20 லட்சம் கிடைத்திருப்பதாக
அந்த மர்ம கும்பல் உருட்டி இருக்கின்றனர். ஆனால் அந்த தொகையை எடுக்க வேண்டும் என்றால் 8 லட்ச ரூபாயை முதலீடு செய்ய வேண்டும் என்று அந்த கும்பல் தெரிவித்துள்ளது.

பெண்ணிடம் 10 லட்சம் ரூபாயை ஏமாற்றிய மர்ம கும்பல்.! எச்சரிக்கை.!

இதற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண் பணத்தை முதலீடு செய்துள்ளார். குறிப்பாக 10.15 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்த பிறகும் பணம்
வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் காவல்துறையில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். தற்போது இதுகுறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மோசடி கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இதுபோன்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம் எனவும், அவர்கள் அனுப்பும் லிங்கை
கிளிக் செய்ய வேண்டாம் என்று போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

பெண்ணிடம் 10 லட்சம் ரூபாயை ஏமாற்றிய மர்ம கும்பல்.! எச்சரிக்கை.!

கவனமாக இருக்க வேண்டும்

குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது நம்முடைய தகவலை நொடிப்பொழுதில் உலகெங்கும் கொண்டுபோய்
சேர்க்க முடிகிறது. ஆனாலும் இதனைப் பயன்படுத்தி தீய காரியங்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் பிறரது தகவல்களை திருடுவது, அக்கவுண்ட்டை ஹேக் செய்து பணம் பறிப்பது என புதுப்புது வழிகளில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். எனவே ஆன்லைனில் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
49-year-old housewife lost Rs 10 lakh in a 'Like and Earn' scam: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X