Just In
- 22 min ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 49 min ago
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
- 1 hr ago
உன் வீட்டுக்காரர் பெயர் என்ன? அலெக்சாவை பாடாய் படுத்தும் இந்தியர்கள்.. எப்படி சிக்கிருக்கேன் பார்த்தியாப்பா!
- 2 hrs ago
4 மிட்-ரேன்ஜ் போன்கள் மீது "முரட்டு" ஆபர்.. சம்பளம் போடுற நேரமா பார்த்து டெம்ப்ட் ஏத்துறாங்களே!
Don't Miss
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Automobiles
2-3 லட்ச ரூபா டவுண்பேமென்டிலேயே இந்த எஸ்யூவி கார்களை வாங்கிடலாம்! நம்பவே முடியல.. இந்த காரைகூட வாங்க முடியுமா?
- Sports
முகமது சிராஜை ஏமாற்றுகிறாரா ரோகித்.. நன்றாக ஆடியும் அங்கீகாரம் இல்லை.. மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு
- News
"ரெக்கார்டு".. 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து.. சாதனை செய்த கோவை பெண்.. சபாஷ்
- Lifestyle
இத யூஸ் பண்ணி நீங்க சுயஇன்பம் செய்றீங்களா? அது ஆபத்தானதாம்... பின்ன எப்படி செய்யுனும் தெரியுமா?
- Finance
பெண்கள் ஐபிஎல்.. 4670 கோடி கல்லாகட்டிய BCCI.. இங்கேயும் அம்பானி, அதானி..!
- Movies
பூஜா ஹெக்டே வேணுமா.. இருக்கு.. ஜகபதி பாபு வேணுமா.. இருக்கு! சல்மான் கானின் புது பட டீசர் எப்படி?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
மத்தியஅரசு மீண்டும் அதிரடி! புதிதாக 47 சீன ஆப்ஸ்களுக்கு தடை- லிஸ்டில் இன்னும் 275 ஆப்ஸ் இருக்கு!
இந்தியாவில் மீண்டும் புதிதாக 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக தடை செய்யப்பட்ட செயலிகளின் க்ளோன்களாக பயன்படுத்தப்பட்டு வந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதல்
லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறியது.

20 இந்திய வீரர்கள் வீரமரணம்
இந்திய சீன எல்லை பிரச்சனையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததன் எதிரொலியாக சமூகவலைதளங்களில் சீனாவிற்கு எதிராக இந்தியர்கள் கருத்து பதிவிட்டனர். அதில் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீன செயலிகளை பயன்படுத்தக் கூடாது போன்ற குரல்கள் மேலோங்கி வந்தது.

உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு
அதேபோல் உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT குறிப்பிட்ட சீன செயலிகளை நீக்க வேண்டும் என்றும் சில செயலிகள் மூலம் இந்தியர்களின் தகவல்கள் சீனாவின் வசம் சென்று கொண்டிருப்பதாகவும், இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கையை சீன மேற்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியா சீனா பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த செயலிகள் மூலம் பின்வாசல் வழியாக சீனா இந்தியாவுக்குள்ளான தகவல் தொடர்பை துண்டிக்க முயலும் எனவும் கூறப்பட்டு வந்தது.

59 சீன செயலிகளுக்கு தடை
இந்த நிலையில் டிக்டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் பிரதான பயன்பாடாக இருக்கும் பல்வேறு செயலிகளும் இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு
இதுதொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், தரவு பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் மற்றும் 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாத்தல் குறித்து கடுமையான கவலைகள் உள்ளன. இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பும் அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

59 சீன செயலிகள் பட்டியல்
இந்தியாவில் தடை செய்யப்பட்டு 59 சீன செயலிகள் குறித்து பார்க்கலாம். டிக்டாக் (Tiktok), ஷேர் இட், க்வாய், யூசி பிரவுசர், பய்டு மேப் (Baidu map), ஷெயின், க்ளாஷ் ஆப் கிங்ஸ், டியூ பேட்டரி சேவர், ஹலோ, லைக், யூகேம் மேக்அப், எம்ஐ கம்யூனிட்டி, சிஎம் ப்ரவுசர், வைரஸ் க்ளீனர், அபஸ் பிரவுசர், ரோம்வி, க்ளப் ஃபேக்டரி, நியூஸ்டாக், உள்ளிட்ட 59 செயலிகள் இதில் அடக்கம்.

க்ளோன்களாக இருக்கும் 47 சீன பயன்பாடுகள்
இந்த நிலையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நீக்க பட்டியலில் கூடுதல் பயன்பாடுகளை இணைத்திருக்கிறது. ஜூலை 24, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவின்படி, முன்னர் தடைசெய்யப்பட்ட 59 சீன பயன்பாடுகளின் க்ளோன்களாக இருக்கும் 47 சீன பயன்பாடுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

உண்மையை பிரதபலிக்கும் செயலிகள்
சீன செயலிகளுக்கு அடுத்தடுத்து தடை தொடரும் என்ற தெரிவிக்கப்படும் நேரத்தில் தற்போது தடைசெய்யப்பட்ட இந்த 47 செயலியானது, முன்னதாக தடை செய்யப்பட்ட செயலிகளின் க்ளோன் அதாவது உண்மையை பிரதபலிக்கும் செயலிகள்(லைட்) பதிப்புகள் இடம்பெறும் என தெரிகிறது. இதில் டிக்டோக் லைட், ஹலோ லைட், ஷேர்இட் லைட், பிகோ லைட் மற்றும் VFY லைட் இவை அனைத்தும் கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தடைக்கான காரணங்கள்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறுகையில், இந்தியாவில் சில பதிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டபோதிலும் சில செயலிகள் மூலம் பயன்பாடுகள் செயல்படுவதாக கண்டறியப்பட்டது. அவை பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

பட்டியலில் 275 செயலிகள்
சீன நிறுவனங்க் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான விதிகளை முன்னதாகவே கடுமையாக்கியுள்ள நேரத்தில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் இந்த செயலிகள் தடை குறித்து தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. அடுத்தடுத்து சீன செயலிகள் மீதான தடை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470