கொத்தாக.. 13 புதிய ஸ்மார்ட் TVகள் இந்தியாவில் அறிமுகம்.. 43-இன்ச் முதல் 85-இன்ச் வரை.. என்ன மாடல்? என்ன விலை?
ஷாவ்மீ (Xiaomi), சாம்சங் (Samsung) மற்றும் ஒன்பிளஸ் (OnePlus) போன்ற நிறுவனங்களின் பிரீமியம் டிவிகளை (Premium TV) காலி செய்யும் நோக்கத்துடன் சோனி (SONY) நிறுவனமானது கொத்தாக 13 புதிய 4கே ஸ்மார்ட் டிவிகளை (4K HDR Smart TV) இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 13 புதிய சோனி பிராவியா ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த 13 டிவி மாடல்களுமே சோனியின் BZ40L, BZ35L மற்றும் BZ30L சீரீஸின் கீழ் வெவ்வேறு அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. என்னென்ன மாடல்கள் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

சோனி BZ40L சீரீஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன: FW-85BZ40L (85 இன்ச்), FW-75BZ40L (75 இன்ச்), FW-65BZ40L (65 இன்ச்) மற்றும் FW-55BZ40L (55 இன்ச்). இதேபோல சோனி BZ35L சீரிஸின் கீழ் 3 மாடல்கள் வெளியாகியுள்ளன: FW-75BZ35L (75 இன்ச்), FW-65BZ35L (65 இன்ச்) மற்றும் FW-55BZ35L (55 இன்ச்).
கடைசியாக உள்ள சோனி BZ30L சீரீஸின் கீழ் மொத்தம் 6 ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன: FW-85BZ30L (85 இன்ச்), FW-75BZ30L (75 இன்ச்), FW-65BZ30L (65 இன்ச்), FW-55BZ30L (55 இன்ச்), FW-50BZ30L (50 இன்ச்) மற்றும் FW-43BZ30L (43 இன்ச்).
முக்கிய அம்சங்கள்: அனைத்து 13 புதிய ஸ்மார்ட் டிவிகளுமே பெசல்லெஸ் டிசைன், போர்ட்ரெய்ட் மற்றும் டில்ட் மவுண்டிங்கிற்கான நெகிழ்வான இன்ஸ்டாலேஷன் விருப்பங்கள், 24/7 ஆப்ரேஷன், ப்ரீசெட் செட்டிங்ஸ் மூலம் எளிமைப்படுத்தப்பட்ட கான்ஃபிகரேஷன் (Simplified configuration), மிரரிங் திறன்கள் (Mirroring capabilities), செயல்பாட்டின் எளிமைக்கான ப்ரோ மோட் தொழில்நுட்பம் (Pro Mode technology), அத்துடன் மல்டி-டிஸ்பிளே இன்ஸ்டாலேஷன்கள் (Multi-display installations) ஆகியவைகளை கொண்டுள்ளன.
எப்போது முதல் விற்பனை: சோனி நிறுவனத்தின் புதிய BZ40L, BZ35L மற்றும் BZ30L சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்து 13 ஸ்மார்ட் டிவி மாடல்களுமே வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்; இந்த டிவி மாடல்கள் அங்கீகரிக்கப்பட்ட சோனி விநியோகஸ்தர்கள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும்.
விலை விவரங்கள்: சோனி FW-85BZ40L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.700,000 ஆகும். சோனி FW-75BZ40L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.500,000 ஆகும்; சோனி FW-65BZ40L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.300,000 ஆகும்; சோனி FW-55BZ40L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.225,000 ஆகும்
சோனி FW-75BZ35L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.450,000 ஆகும்; சோனி FW-65BZ35L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.250,000 ஆகும்; சோனி FW-55BZ35L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.200,000 ஆகும்; சோனி FW-85BZ30L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.500,000 ஆகும்
சோனி FW-75BZ30L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.350,000 ஆகும்; சோனி FW-65BZ30L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.200,000 ஆகும்; சோனி FW-55BZ30L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.150,000 ஆகும்; சோனி FW-50BZ30L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.125,000 ஆகும் மற்றும் சோனி FW-43BZ30L ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.100,000 ஆகும்.
சோனி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைத்து பதின்மூன்று மாடல்களுமே SORPLASTM மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளன. நினைவூட்டும் வண்ணம் SORPLAS என்பது போஸ்ட் கன்ஸ்யூமர் ரீசைக்கிள்டு பிளாஸ்டிக் சோனி தயாரிப்புகள் (Post-Consumer Recycled Plastic Sony Products) ஆகும்.


Click it and Unblock the Notifications








