வீட்டுக்கு உள்ளேயே இனி தியேட்டர்.. அட்ரா சக்கை விலையில் 43, 50, 55, 65, 75-இன்ச் SONY Google TVகள் அறிமுகம்!
சோனி (SONY) நிறுவனம் தனது புதிய பிராவியா 2 II சீரீஸ் ஸ்மார்ட் டிவிகளை (Bravia 2 II series Smart TVs) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பல வகையான ஸ்க்ரீன் அளவுகளில் (Screen Sizes) வரும் இந்த ஸ்மார்ட் டிவிகள் 4கே ரெசல்யூஷன் (4K Resolution), மேம்படுத்தப்பட்ட ஆடியோ (Enhanced audio) மற்றும் ஸ்மார்ட் அம்சங்களை (Smart features) வழங்குகிறது.
இந்த டிவிகள் 43-இன்ச் (43 inch), 50-இன்ச் (50 inch), 55-இன்ச் (55 inch), 65-இன்ச் (65 inch) மற்றும் 75-இன்ச் (75 inch) விருப்பங்களில் கிடைக்கின்றன. அனைத்து மாடல்களும் சோனி எக்ஸ்1 பிக்சர் ப்ராசஸரில் (Sony X1 Picture Processor) இயங்குகின்றன. இது நாய்ஸ்-ஐ குறைக்கவும் டீடெயில்களை ஷார்ப் செய்யவும் மேம்பட்ட வழிமுறைகளை பயன்படுத்துகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகளில் உள்ள பில்ட் இன் 4கே எக்ஸ்-ரியாலிட்டி ப்ரோ (Built-in 4K X-Reality PRO) ஆனது ஃபுல் எச்டி (FHD) மற்றும் 2கே (2K) கன்டென்ட் கன்டென்ட்-ஐ 4கே-க்கு அருகில் கொண்டுவரும் அளவிற்கு மேம்படுத்துகிறது. வேகமான காட்சிகளில் மென்மையான காட்சிகளை வழங்க இந்த டிவிகளில் உள்ள மோஷன்ஃப்ளோ எக்ஸ்ஆர் தொழில்நுட்பம் ( Motionflow XR technology) கூடுதல் பிரேம்களை (Extra Frames) சேர்க்கிறது.
இந்த சீரிஸில் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் எக்ஸ் (DTS X) ஆதரவுடன் 20W ஓப்பன் பேஃபிள் டவுன்-ஃபயரிங் டிவின் ஸ்பீக்கர்கள் (20W open baffle down-firing twin speakers) உள்ளன. மேலும் இதிலுள்ள கிளியர் பேஸ் தொழில்நுட்பம் (Clear Phase technology) ஆனது சமச்சீர் ஆன ஒலிக்காக ஆடியோ பிரெக்வென்சிகளை சரிசெய்கிறது. டிவிகள் கூகுள் டிவி (Google TV) கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட் டிவிகள் கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) மூலம் வாய்ஸ் கண்ட்ரோல்-ஐயும் (Voice Control) ஆதரிக்கிறது.
சோனி பிராவியா 2 II சீரீஸ் மிகவும் மெல்லிய பெசல்கள் மற்றும் மினிமலிஸ்ட் தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமிங்கிற்கு, இது HDMI 2.1 வழியாக ஆட்டோ லோ லேட்டன்சி மோட்-ஐ (ALLM) கொண்டுள்ளது, இது கேமிங் கன்சோல் இயக்கப்பட்டிருக்கும் போது ஸ்டார்ட் ஆகும். குறிப்பாக பிளேஸ்டேஷன் 5 உடன், ஆட்டோ HDR டோன் மேப்பிங் சிஸ்டமின் போது காட்சிகளை மேம்படுத்துகிறது.
மேலும் இந்த டிவிகள் தானாகவே கேம் மோட் (Game Mode) மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்-க்கு (Standard Mode ) இடையில் மாறும். சோனி பிக்சர்ஸ் கோருக்கான அணுகலுடன் வரும் இந்த இந்த டிவிகள் உடன் வாய்ஸ் எனேபிள்டு ரிமோட் (voice-enabled remote) சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் டிவிகள் கூடுதல் நீடித்து நிலைக்கும் வகையில் எக்ஸ் ப்ரொடெக்ஷன் ப்ரோவையும் (X-Protection PRO) கொண்டுள்ளன.
சோனி பிராவியா 2 II சீரீஸ் ஸ்மார்ட் டிவி விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
K-75S25M2 (75-இன்ச்) - ரூ.1,45,990 - இப்போது வாங்க கிடைக்கிறது
K-65S25M2 (65-இன்ச்) - ரூ. 97,990 - இப்போது வாங்க கிடைக்கிறது
K-55S25M2 (55-இன்ச்) - ரூ. 75,990 - இப்போது வாங்க கிடைக்கிறது
K-43S25M2 (43-இன்ச்) - ரூ. 50,990- இப்போது வாங்க கிடைக்கிறது
K-50S25M2 - விலை மற்றும் விற்பனை தேதி பின்னர் அறிவிக்கப்படும்
K-50S22M2 - விலை மற்றும் விற்பனை தேதி பின்னர் அறிவிக்கப்படும்
K-43S22M2 - விலை மற்றும் விற்பனை தேதி பின்னர்அறிவிக்கப்படும்
சலுகைகளை பொறுத்தவரை சோனியின் புதிய பிராவியா 2 II சீரீஸ் ஸ்மார்ட் டிவிகளை வாங்குபவர்கள் ரூ.5,000 வரை கேஷ்பேக் மற்றும் EMI விருப்பங்களை பெறலாம். இந்த டிவிகள் சோனி சென்டர்கள், முக்கிய மின்னணு சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள ஆன்லைன் தளங்களில் வாங்க கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








