இந்தியாவில் 20 வயதாகும் இ-மெயில்

By Karthikeyan
|
இந்தியாவில் 20 வயதாகும் இ-மெயில்

இ-மெயில் இல்லாத உலகை நாம் நினைத்துப் பார்க்கவே முடியாது. குறிப்பாக அலுவலகங்களில் பெரும்பாலான தகவல்கள் மற்றும் அறிக்கைகள் போன்றவை இ-மெயில் மூலமாகவே செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு இ-மெயிலின் பயன்பாடு மிகவும் அதிகமாயிருக்கிறது. தற்போது அந்த இ-மெயிலுக்கு 41 வயதாகி இருக்கிறது.

40 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த ரேய் தாமிலின்சஎன் என்பவர் முதன் முதலாக இ-மெயிலை அனுப்பினார். 1971 அக்டோபரில் தாமிலின்சன் இரண்டு கணினிகளுக்கு இடையே செய்தியை அனுப்பும் சாப்ட்வேரை உருவாக்கினார்.

ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவிற்கு இ-மெயில் வசதி வந்ததாக மும்பையில் உள்ள டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் பன்டமென்டல் ரிசர்ச் (டிஐஎப்ஆர்) அமைப்பின் கணினி பேராசரியர் சுகட்டா சான்யல் தெரிவித்திருக்கிறார்.

முதல் இமெயில் அர்பநெட் என்ற சாப்ட்வேர் மூலம் இரண்டு கணினிகளுக்கு இடையே அனுப்பப்பட்டது. மேலும் அந்த நேரத்தில் அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர்கள் அர்பநெட் அல்லது பிட்நெட் என்ற சாப்ர்வேர்களின் துணை கொண்டு இமெயில் அனுப்பியதாக சான்யல் கூறுகிறார்.

அவர்களில் தியரட்டிக்கல் பிசிக்ஸ் துறையைச் சேர்ந்த ராஜூவ் கவை என்பவரும் ஒருவர். 80களில் அவர் நியூயார்க்கில் ஆராய்ச்சியில் இருக்கும் போது பல மைல்கள் தொலைவில் இருக்கும் தனது சக ஆராய்ச்சியாளர்களுக்கு அர்பநெட் மற்றும் பிட்நெட் மூலம் இ-மெயில்களை அனுப்பியதாக கூறுகிறார்.

இதே பிட்நெட் சாப்ட்வேரை இந்தியாவிலும் நிறுவ அவர் முயற்சி எடுத்தார். அதன் பின் இந்திய அரசு மும்பை, டெல்லி, கான்பூர், கரக்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 5 ஐஐடிகளை நிறுவியது. பெங்களுரில் ஐஐஎஸ்ஸை நிறுவியது. பின் மும்பையில் என்சிஎஸ்டியை நிறுவியது.

1986ல் என்சிஎஸ்டிக்கும் ஐஐடி மும்பைக்கு இடையே இமெயில் அனுப்புவதற்கான டயல் அப் லிங்க் நிறுவப்பட்டது. அதன் பின் இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே இ-மெயில் பறிமாற்றம் தொடங்கியது என்று ராஜூவ் கூறுகிறார்.

ஆனால் தொடக்கத்தில் இமெயிலைப் பற்றி மக்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் வெளி நாடுகளில் இருக்கும் தங்கள் உறவுகளோடு தொடர்பு கொள்ள மிக மலிவு விலையில் உதவும் மிகப் பெரிய உபகரணம் இ-மெயில் என்பது பின்னாளில் உணரப்பட்டதாக கொல்கத்தாவில் இருக்கும் விஇசிசியின் முன்னாள் தலைவர் ஸ்வப்பன் குமார் டி கூறுகிறார்.

இந்தியாவின் கிழக்கு பகுதியில் இ-மெயிலுக்காக எர்நெட் என்ற சாப்ட்வேர் விஇசிசியில் முதன் முதலில் நிறுவப்பட்டது. பின் கொல்கத்தாவில் உள்ள மற்ற நிறுவனங்களிலும் இந்த எர்நெட் நிறுவப்பட்டது. 1991ல் எர்நெட்டைப் பயன்படுத்து இமெயில் அனுப்புவர்களின் எண்ணிக்கை 1000ஐ கடந்தது. மேலும் பிரிண்டர் இல்லாமல் இந்த எர்நெட்டை அப்போது ரூ.30,000க்கு வாங்கலாம்.

தற்போது அதாவது 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இமெயிலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 150 மில்லியனாக இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X