இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!

|

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திடம் இருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு திட்டத்தின் நன்மைகள் (Benefits) மற்றும் வேலிடிட்டியை (Validity) பற்றி அறிந்தால்.. "இதென்ன ரீசார்ஜ்-ஆ? அல்லது லைஃப் டைம் செட்டில்மென்ட்-ஆ?" என்கிற எண்ணம் உங்களுக்குள் எழுந்தால்.. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!

ஏனென்றால்.. அந்த ரீசார்ஜ்ஜின் மொத்த வேலிடிட்டியும், நன்மைகளும் அப்படி! அதென்ன ரீசார்ஜ்? அதன் விலை என்ன? அது வழங்கும் நன்மைகள் என்ன? இதோ விவரங்கள்:

மிகவும்

மிகவும் "நீளமான" வேலிடிட்டி மற்றும் மிகப்பெரிய அளவிலான டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது, வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யும் வண்ணம், ஏராளமான ரீசார்ஜ் விருப்பங்களைக் கொண்டுள்ளது.

அப்படியாக நீங்கள் மிகவும் "நீளமான" வேலிடிட்டி மற்றும் மிகப்பெரிய அளவிலான டேட்டா நன்மையை வழங்கும் ஒரு BSNL திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால்.. கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்து உள்ளீர்கள்!

வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

சிங்கிள் ரீசார்ஜ்ஜில் 400 நாட்கள் வேலிடிட்டி, கூடவே 730ஜிபி டேட்டா!

சிங்கிள் ரீசார்ஜ்ஜில் 400 நாட்கள் வேலிடிட்டி, கூடவே 730ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் "கிட்டத்தட்ட" 400 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெயிட் ரீசார்ஜ் உள்ளது. கூடுதலாக, இந்த திட்டம் 730 ஜிபி அளவிலான டேட்டாவையும் வழங்குகிறது.

நாம் இங்கே பேசும் BSNL திட்டத்தின் விலை ரூ.2399 ஆகும். முன்னரே குறிப்பிட்டபடி, இந்த திட்டம் கிட்டத்தட்ட 400 நாட்களுக்கு செல்லுபடியாகும்; இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது 395 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.

இதுவொரு விசித்திரமான ரீசார்ஜ் ஆகும்!

இதுவொரு விசித்திரமான ரீசார்ஜ் ஆகும்!

வழக்கமாக (இந்திய டெலிகாம் சந்தையில்) 1 வருடம் அல்லது 12 மாதங்களுக்கு செல்லுபடுயாகும் ரீசார்ஜ் திட்டங்கள் தான் அணுக கிடைக்கும். ஆனால் இது சற்றே வித்தியாசமாக 13 மாதங்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கும் ஒரு திட்டமாக உள்ளது

இப்படி ஒரு திட்டத்தை இந்தியாவில் உள்ள தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் யாருமே வழங்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதேபோல இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய திட்டம் அல்ல; இது ஏற்கனவே இருக்கும் ஒரு திட்டம் தான். BSNL நிறுவனத்திடம் இருந்து தேர்வுசெய்யக்கூடிய பல திட்டங்கள் இருப்பதால் இது பலரால் கவனிக்கப்படாமல் இருக்கலாம்!

ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. Jio-வின் இந்த 3 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?ஒரே ஒரு ரீசார்ஜ்.. 365 நாட்களுக்கும் ஓஹோன்னு நன்மைகள்.. Jio-வின் இந்த 3 சூப்பர் பிளான்களை பற்றி தெரியுமா?

ரூ.2399 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

ரூ.2399 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

பிஎஸ்என்எல்-ன் ரூ.2399 திட்டமானது 2ஜிபி அளவிலான டெய்லி டேட்டாவை (Daily Data) வழங்கும். அதாவது செல்லுபடியாகும் 395 நாட்களுக்கும் மொத்தம் 730ஜிபி டேட்டாவை வழங்கும்.

ஒருவேளை நீங்கள் 2ஜிபி என்கிற டெய்லி டேட்டா லிமிட்டை தீர்த்து விட்டீர்கள் என்றால், உங்களுக்கான இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40கேபிபிஎஸ் (40Kbps) ஆகக் குறைக்கப்படும்; அதாவது இதை ஒரு அன்லிமிடெட் டேட்டா ரீசார்ஜ் என்றும் கூறலாம்.

டேட்டா நன்மைகள் மட்டும் தானா?

டேட்டா நன்மைகள் மட்டும் தானா?

இல்லவே இல்லை! டேட்டா நன்மையோடு சேர்த்து இந்த திட்டத்தின் கீழ் 30 நாட்களுக்கான இலவச PRBT (பெர்சனல் ரிங் பேக் டோன்) சேவையும் அணுக கிடைக்கும். மேலும் 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் (Eros Now Entertainment) சேவையையும், லோக்துன் சேவையையும் கூட நீங்கள் இலவசமாக அணுகலாம்.

கடைசியாக, இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Calls) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-களும் (SMS) அணுக கிடைக்கும்.

பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த "எமன்".. என்னது அது?

தினமும் 6 ரூபாய் 7 பைசா செலவு செய்தால் போதும்!

தினமும் 6 ரூபாய் 7 பைசா செலவு செய்தால் போதும்!

ஆம்! இந்த BSNL திட்டத்தின் தினசரி செலவு ரூ.6.07 மட்டுமே ஆகும். இந்தியாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இதே போன்ற திட்டங்கள் ஆனது (அதாவது 1 ஆண்டு முழுவதும் 2ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது) இதை விட அதிகமான செலவை வழங்குகின்றன.

இப்போது சொல்லுங்கள்! இது ரீசார்ஜ்-ஆ அல்லது லைஃப் டைம் செட்டில்மென்ட்-ஆ என்று நாங்கள் குறிப்பிட்டதில் ஏதேனும் பிழை அல்லது குறை இருக்கிறதா? இருந்தால். கமெண்ட் செக்ஷன் வழியாக உங்கள் கருத்துக்களை பதிவிடவும்!

Best Mobiles in India

English summary
400 Days Validity and 790GB Data in Single Recharge Check This Most Unnoticed BSNL Prepaid Plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X