40 ஸ்பேஸ்எக்ஸ் Starlink சாட்டிலைட்கள் புவி காந்த புயலால் சேதம்.. மொத்தம் 12,000 சாட்டிலைட்களை ஏவ திட்டமா?

|

நமது விண்மீன் மண்டலத்தின் மிக பெரிய நட்சத்திரமான சூரியன் இப்போது மிகவும் வன்முறையான ஒரு சூரிய சுழற்சியைக் கடந்து செல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் வெகு தொலைவில் அமைத்திருக்கும் பூமியிலும் உணரப்படுகின்றது. சூரியனின் வெளிப்புற அடுக்கு சமீபத்தில் கொதித்து, கடந்த மாதம் ஜனவரி 29 ஆம் தேதி அன்று சூரியனின் மேற்பரப்பில் இருந்து கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) என்ற ஒரு மாபெரும் உமிழ்வு வெளியேற்றப்பட்டுள்ளது. இது புவி காந்த புயலாக உருவெடுத்துப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீர் சூரிய புயலால் ஏற்பட்ட பாதிப்புகள்

திடீர் சூரிய புயலால் ஏற்பட்ட பாதிப்புகள்

கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) என்ற ஒரு மாபெரும் உமிழ்வு வெளியேற்றப்பட்டதன் விளைவாக, அதிவேக சூரியக் காற்று சூரியனில் இருந்து வெளியிடப்பட்டது. இது பூமியின் வளிமண்டலத்தைத் தாக்கி புதிய புவி காந்தப் புயலை உருவாக்கியுள்ளது. இந்த திடீர் சூரிய புயல் பூமியைத் தாக்கியது மட்டுமின்றி விண்வெளியில் இருந்த செயற்கைக்கோள்களையும் நாசம் செய்துள்ளது. இதில் சமீபத்தில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட எலான் மஸ்கின் புதிய செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விரிவான தகவலைப் பார்க்கலாம்.

ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்குச் சொந்தமான 40 செயற்கைக்கோள்கள் சேதம்

ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்குச் சொந்தமான 40 செயற்கைக்கோள்கள் சேதம்

எலோன் மஸ்கின் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு விலையுயர்ந்த அடியாக, கடந்த வாரம் விண்ணில் ஏவப்பட்ட அதன் 40 செயற்கைக்கோள்கள் புவி காந்தப் புயலால் அழிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. புயலின் அதிகரிப்பு வேகம் மற்றும் தீவிரம் ஆகியவை வளிமண்டல இழுவையை முந்தைய ஏவுதல்களை விட 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று, நிறுவனம் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட ஒரு அதிகர்ப்பூரவ அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியை தாக்கிய சூரிய புயல்: இப்படி செய்யும் நினைக்கவே இல்ல? ரேடியோ சேவைகள் நாக் அவுட்.. எங்கே தெரியுமா?பூமியை தாக்கிய சூரிய புயல்: இப்படி செய்யும் நினைக்கவே இல்ல? ரேடியோ சேவைகள் நாக் அவுட்.. எங்கே தெரியுமா?

ஜியோமெக்னெட்டிக் ஸ்டோர்ம் என்றால் என்ன?

ஜியோமெக்னெட்டிக் ஸ்டோர்ம் என்றால் என்ன?

ஜியோமெக்னெட்டிக் ஸ்டோர்ம் (Geomagnetic Storm) அல்லது புவி காந்தப் புயல் என்று கூறப்படும் புயல், பொதுவாகக் காந்தப் புயல் என்றும் அழைக்கப்படுகிறது. இது சூரியக் காற்று அதிர்ச்சி அலை மற்றும் பூமியின் காந்தப்புலத்துடன் தொடர்பு கொள்ளும் போது, காந்தப்புலத்தின் மேகத்தால் ஏற்படும் பூமியின் காந்த மண்டலத்தின் தற்காலிக இடையூறு என்று கூறப்படுகிறது. இது போன்ற புயல்கள் உருவாக மிக முக்கியமான காரணமாகச் சூரியனில் இருந்து வெளிவரும் கொந்தளிப்புகள் மற்றும் கரோனல் மாஸ் எஜெக்ஷன் உமிழ்வுகள் கருதப்படுகிறது.

ஸ்டார்லிங்க் பாதுகாப்பான பயன்முறையில் பயணிக்கக் கட்டளை

ஸ்டார்லிங்க் பாதுகாப்பான பயன்முறையில் பயணிக்கக் கட்டளை

புயல் நேரத்தில் ஸ்டார்லிங்க் குழு செயற்கைக்கோள்களை ஒரு பாதுகாப்பான பயன்முறையில் பயணிக்கக் கட்டளையிட்டது, அங்கு அவற்றின் இழுவையைக் குறைக்க ஒரு தாள் போன்ற விளிம்பில் பறக்கும் திறம்படக் கருவியை நிறுவனம் ஏற்கனவே அதன் செயற்கைக்கோள்களில் வழங்கியுள்ளது. புயலில் இருந்து செயற்கைக்கோள்களை மறைப்பதற்கு இந்த தாள் போன்ற சாதனம் உதவுகிறது. குறைந்த உயரத்தில் அதிகரித்த இழுவை செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையை உயர்த்தும் சூழ்ச்சிகளைத் தொடங்க பாதுகாப்பான பயன்முறையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கிறது.

ஒரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரீசார்ஜ்.. ஏர்டெல் வழங்கும் சிறந்த 1 ஆண்டு திட்டம்..ஒரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் ரீசார்ஜ்.. ஏர்டெல் வழங்கும் சிறந்த 1 ஆண்டு திட்டம்..

பூஜ்ஜிய மோதல் அபாயத்தை உறுதிப்படுத்திய ஸ்டார்லிங்க்

பூஜ்ஜிய மோதல் அபாயத்தை உறுதிப்படுத்திய ஸ்டார்லிங்க்

மேலும், 40 செயற்கைக்கோள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் அல்லது ஏற்கனவே மீண்டும் நுழைந்திருக்கும் என்று ஸ்பேஸ்எக்ஸ் விரிவாகக் கூறியுள்ளது. ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் கூற்றுப்படி, சுற்றுப்பாதையில் செல்லும் செயற்கைக்கோள்கள் மற்ற செயற்கைக்கோள்களுடன் "பூஜ்ஜிய மோதல் அபாயத்தை" ஏற்படுத்துகின்றது. இதன் வடிவமைப்பின்படி, வளிமண்டலத்தின் மறு நுழைவு - அதாவது சுற்றுப்பாதைக் குப்பைகள் உருவாக்கப்படவில்லை என்பதை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

49 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் 40 செயற்கைக்கோள்கள் பாதிப்பா?

49 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களில் 40 செயற்கைக்கோள்கள் பாதிப்பா?

மேலும் செயற்கைக்கோள் பாகங்கள் தரையில் இறங்கவில்லை என்பதையும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பிப்ரவரி 3 அன்று ஃபால்கன் 9 ராக்கெட்டின் மூலம் புளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டரில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A (LC-39A) இலிருந்து குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு சுமார் 49 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது. துரதிர்ஷ்டவசமாக, விண்வெளியில் பயன்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள் வெள்ளிக்கிழமை புவி காந்த புயலால் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் 'திரவ நீர்' இருந்ததற்கு ஆதாரம் கிடைத்ததா? நாசா வெளியிட்ட உண்மை தகவல்..செவ்வாய் கிரகத்தில் 'திரவ நீர்' இருந்ததற்கு ஆதாரம் கிடைத்ததா? நாசா வெளியிட்ட உண்மை தகவல்..

மொத்தம் 12,000 செயற்கைக்கோள்களை ஏவத் திட்டமா?

SpaceX நிறுவனம் சமீபத்தில் சுமார் 2,000 செயற்கைக்கோள் ஏவுதல் மைல்கல்லைக் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு மலிவான இணையச் சேவைகளை வழங்குவதற்காக மொத்தம் 12,000 செயற்கைக்கோள்களை ஏவத் திட்டமிட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மலிவு விலையில் உலகளவில் அனைவருக்கும் ஒரே மாதிரியான இணையச் சேவையை வழங்க நிறுவனம் ஸ்டார்லிங்க் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தி விரிவுபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரமான சூரிய புயல்

தீவிரமான சூரிய புயல்

இது ஒரு புறம் இருக்க, ஜனவரி 29 ஆம் தேதி சூரியனின் வெளிப்புற அடுக்கின் மேற்பரப்பில் இருந்து வெளியான கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) ஆனது பிப்ரவரி 3 ஆம் தேதி தான் பூமிக்கு வந்தடைந்துள்ளது. இந்த சூரியப் புயல், பூமியின் வளிமண்டலத்தில் மோதியபோது, பூமியின் ​​தரையில் உறுமியது என்று கூறப்பட்டுள்ளது. சூரியப் புயலின் தீவிரத்தைப் பொறுத்து அதன் அளவு கணிக்கப்படுகிறது. தீவிரமான சூரிய புயல்கள் பெரும்பாலும் விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்களை அழிக்கக் கூடியதாகக் கருதப்படுகிறது.

பூமியில் தண்ணீர் எப்படி உருவானது? சூரியன் தான் நமக்கு தண்ணீர் கொடுத்ததா? உண்மையை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..பூமியில் தண்ணீர் எப்படி உருவானது? சூரியன் தான் நமக்கு தண்ணீர் கொடுத்ததா? உண்மையை கட்டவிழ்த்த விஞ்ஞானிகள்..

சூரிய புயலால் ரஷ்யா பகுதியில் ரேடியோ பிளாக் அவுட்டா?

சூரிய புயலால் ரஷ்யா பகுதியில் ரேடியோ பிளாக் அவுட்டா?

இம்முறை ஏற்பட்ட சூரிய புயல் மிகவும் அழிவுகரமான விளைவை ஒரு சில பகுதியில் மட்டும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூரிய புயல் ரேடியோ இருட்டடிப்பு விளைவையும் பூமியில் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவுகள் மிகக் கடுமையாக ரஷ்யாவில் காணப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து, ரஷ்யா நீண்ட காலமாக வானொலி இருட்டடிப்புக்கு உட்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரஷ்யா பகுதியில் உள்ள ரேடியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பாட்டு மிகவும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான செய்திகளும் இணையத்தில் இப்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
40 SpaceX Starlink Satellites Launched Last Week Wrecked By Geomagnetic Storm : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X