Home
News

40% டிஸ்கவுண்ட்.. Amazon Prime Day 2025 Sale-ல் மிஸ் பண்ணவே கூடாத மொபைல் போன்கள்.. ஜூலை 12-14 வரை!

அமேசான் பிரைம் மெம்பர்களுக்கு (Amazon Prime Members) மட்டுமான அமேசான் பிரைம் டே 2025 விற்பனை (Amazon Prime Day 2025 Sale) அடுத்த வாரம் தொடங்க உள்ளது. ஜூலை 12 ஆம் தேதி தொடங்கும் இந்த விற்பனை 3 நாட்கள் நடக்கும்; ஜூலை 15 ஆம் தேடியோடு முடிவடையும்.

இந்லையில் அமேசான் பிரைம் டே 2025 விற்பனையின் போது, எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸெரீஸ்கள் மீது 40% வரை தள்ளுபடி கிடைக்கும் என்கிற விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கூடவே எந்தெந்த பேங்க் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கும் என்கிற விவரங்களும் பகிரப்பட்டுள்ளன.

Amazon Prime Day 2025 Sale-ல் மிஸ் பண்ணவே கூடாத மொபைல் போன்கள்!

மொத்தம் 72 மணி நேரம் நடக்கவுள்ள இந்த விற்பனையின் என்னென்ன சலுகைகள் மற்றும் வங்கி சலுகைகள் கிடைக்கும் என்கிற விவரங்களை காட்டும் ஒரு மைக்ரோசைட் அமேசானில் லைவ் ஆகியுள்ளது. அதன்படி ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்சஸெரீஸ்களின் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடிகிடைக்கும்

ஆப்பிள் ஐபோன் 15, சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா, ஒன்பிளஸ் 13எஸ் மற்றும் ஐக்யூ நியோ 10ஆர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்த விற்பனையின் போது விலைக்குறைப்புகளை காண்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சாம்சங், ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் ஹானர் போன்ற பிராண்டுகளின் புதிய ஸ்மார்ட்போன்களும் விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

அந்த பட்டியலில் - சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G), ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5), ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5), ஐக்யூ இசட்10 லைட் 5ஜி (iQOO Z10 Lite 5G), ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி (Realme Narzo 80 Lite 5G), ஹானர் எக்ஸ்9சி (Honor X9c), ஒப்போ ரெனோ 14 சீரிஸ் (Oppo Reno 14 series) மற்றும் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி (Lava Storm Lite 5G) ஆகிய மாடல்கள் உள்ளன.

இந்த விற்பனைக்காக அமேசான் நிறுவனம் ஆனது ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன்கீழ் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகள் செய்யப்படும் போது 10% சேவிங்ஸ் கிடைக்கும். மேலும், 24 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐ சலுகைகள், அமேசான் பே அடிப்படையிலான தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் இருக்கும். இதற்கிடையில், அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகளும் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போன் சிங்கிள் ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: 6GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன். இதன் அசல் வெளியீட்டு விலை ரூ.22,999 ஆகும், ஆனால் அறிமுக சலுகையின் கீழ் இதை வெறும் ரூ.16,499 க்கு வாங்க முடியும்.

ஒன்பிளஸ் 13எஸ் விலை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்ன்ல் ஸ்டோஎஜ் ஆப்ஷன் ரூ.59,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை (Oppo Reno 14 Series Price in India) விவரங்கள்: ஒப்போ ரெனோ14 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.37,999 க்கும், 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.39,999 க்கும் மற்றும் 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன் ரூ.42,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள ரெனோ14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 2 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.49,999 ஆகும் மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.54,999 ஆகும்.

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா விலை விவரங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி அமேசானின் இந்த விற்பனை அதன் பிரைம் மெம்பர்களுக்கு மட்டுமான விற்பனையாகும். மெம்பர் ஆக இல்லாதவர்கள் பிரைம் மெம்பர்ஷிப்பை வாங்கலாம் அல்லது விற்பனையின் போது ஷாப்பிங் செய்ய 30 நாள் இலவச சோதனையை தொடங்கலாம். வருடாந்திர ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தாவின் விலை ரூ.1,499 ஆகும். அதே நேரத்தில் அமேசான் பிரைம் ஷாப்பிங் எடிஷனின் விலை ஒரு வருடத்திற்கு ரூ.399 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
40 Percent Discount on these Smartphones in Amazon Prime Day 2025 Sale Starts July 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X