இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? தனியார் வங்கி பெயரில் போலியாக குறுஞ்செய்தி: பல லட்சங்களை இழந்த 40 பேர்.!
ஆன்லைன் வசதி அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக வங்கி சார்ந்த வேலைகளை மிகவும் சுலபமாக்கியுள்ளது ஆன்லைன் வசதி. ஆனாலும் இந்த ஆன்லைன் பயன்பாட்டில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில் மும்பையில் ஒரு தனியார் வங்கி பெயரில் மிகப் பெரிய மோசடி ஒன்று நடந்துள்ளது.
அதாவது மும்பையில் உள்ள ஒரு தனியார் வங்கிப் பெயரில் 40 வாடிக்கையாளர்களுக்குப் போலியாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பி லட்சக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இதில் ஏமாற்றப்பட்ட மக்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள் மற்றும் பிரபலமானவர்கள்.

நடிகை ஸ்வேதா மேனன்
மேலும் பாதிக்கப்பட்ட 40 பேரில் தொலைக்காட்சி நடிகை ஸ்வேதா மேனனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நடிகை ஸ்வேதா மேனன் அளித்த புகாரில், கடந்த வியாழக்கிழமை ஒரு குறுஞ்செய்தி என்னுடைய மொபைல்போனுக்கு வந்தது. அதில் என்னுடைய வங்கியில் வந்ததாக நம்பிவிட்டேன். பின்பு அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து படித்தேன்.
குறிப்பாக திறக்கப்பட்ட போர்ட்டலில், எனது வாடிக்கையாளர் ஐடி, பாஸ்வேர்டு மற்றும் ஓடிபி ஆகியவற்றைக் கேட்கவும், அதைப் பதிவு செய்து உள்ளே சென்றேன் என்று கூறினார். அதன்பின்னர் வங்கி அதிகாரியைப் போல் ஒரு பேசி ஸ்வேதா மேனனின் போனுக்கு வந்த மற்றொரு ஓடிபி-ஐ உள்ளிட சொல்லியுள்ளார். பின்பு ஸ்வேதா மேனன் அந்த ஓடிபி-ஐ உள்ளிடவும் உடனவே அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.57,636 டெபிட் செய்யப்பட்டது. அப்போது தான் ஸ்வேதா மேனனுக்கு தனது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் இதேபோன்று போலியாக வந்த குறுஞ்செய்தியைப் படிக்க வேண்டி கிளிக் செய்த வாடிக்கையாளர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் ஏமாற்றப்பட்டது. அதுவும் மூன்று நாட்களில் 40 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் போன் மூலம் வங்கி ஊழியர்கள் என்று கூறி, ரகசிய தகவல்களைக் கேட்டால் யாரும் பகிர வேண்டாம் என்றும்,
குறுஞ்செய்தி இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் மும்பை காவல்துறை பலமுறை மக்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு செய்துள்ளது. மேலும் செய்திகளில் கூட இது சம்பந்தமாகச் செய்திகளும் அதிகம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்தும் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக இதற்கு முக்கிய காரணம் மோசடி செய்பவர்கள் அனுப்பும் குறுஞ்செய்தி நம்பும் படியாக இருந்தது தான்.

குறிப்பாக சிலர் மக்களுக்கு KYC அல்லது PAN கார்டு விவரங்களைப் புதுப்பிக்காததால் அவர்களின் வங்கி கணக்கு தடுக்கப்பட்டுள்ளது என்று போலி எஸ்எம்எஸ்-களை அனுப்புகின்றனர். பின்பு அந்த எஸ்எம்எஸ் இல் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை கிளக் செய்யும் போது அது போலி இணையதளத்தில் செல்லும். அங்கு அவர்கள் வாடிக்கையாளர்களின் ஐடி, பாஸ்வேர்டு, ஓடிபி போன்ற விவரங்களை உள்ளிடுகின்றனர். இதனால் எளிதாக ஏமாற்றப்படுகின்றனர்.

சொல்லக் கூடாது
குறிப்பாக முன்பின் தெரியாதவர்களிடம் ஓடிபி-ஐ எப்போதும் சொல்லக் கூடாது. குறிப்பாக இதன் மூலம் தான் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். அதேபோல் ஆபர் என்று முன்பின் தெரியாத நிறுவனங்களிடம் வரும் இணைப்புகளை கிளிக் செய்தால் கூட இதுபோன்ற பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே எப்போதும் ஆன்லைனில் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








