Home
News

ஒன்னுல 2 வாங்குவீங்க.. வெறும் ரூ.14,499 போதும்.. 40 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி.. யாரு விடுவா?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை (Amazon Great Indian Festival Sale) முன்னிட்டு 40 இன்ச் கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவியானது, வெறும் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் முழு அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் இதோ.

தீபாவளி நெருங்கிவிட்டாலே, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் முதல் மொபைல், டேப்லெட், லேப்டாப்கள் வரை தள்ளுபடி அமோகமாக வழங்கப்படும். இதில் டிவி வாங்குவதே பலரது திட்டமாக இருக்கும். சொல்லப்போனால், தீபாவளிக்கு முன்பில் இருந்தே டிவி வாங்க காத்திருக்கும் மக்களையும் இங்கு பார்க்க முடியும். இவர்களுக்கு, இப்போதே நல்ல நேரம் வந்துவிட்டது.

வெறும் ரூ.14,499 போதும்.. 40 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி.. யாரு விடுவா?

கம்மியான பட்ஜெட்டில் 40 இன்ச், 50 இன்ச் டிவி வழங்குவதில் கோடாக் (KODAK) நிறுவனத்தை அடித்துக் கொள்ள முடியாது. அந்த வரிசையில், மிகவும் மலிவான விலையில், ஃபுல்எச்டி எல்இடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு ஓஎஸ் சப்போர்ட், 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி போன்ற பக்கா அம்சங்களுடன் விற்பனைக்கு வந்த 40 இன்ச் கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் டிவிக்கு அமேசானில் அதிரடி டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடாக் 9எக்ஸ்ப்ரோ சீரிஸ் டிவி அம்சங்கள் (KODAK 9XPRO Series TV Specifications): இந்த டிவியில் 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (Full HD) எல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ‎1080p ரெசொலூஷன், எச்டிஆர் (HDR), சூப்பர் கான்ட்ராஸ்ட் (Super Contrast) மற்றும் ஹை பிரைட்னஸ் (High Brightness) சப்போர்ட் உள்ளது.

அதோடு 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இதில் ‎178 டிகிரி வியூ ஆங்கிள் (View Angle) கிடைக்கும். ஏ+ கிரேடு டிஸ்பிளே கொண்டிருப்பதால், குவாலிட்டியான வீடியோ அவுட்புட் கிடைக்கும். ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11 OS) மற்றும் மாலி (Mali) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது.

இந்த டிவியில் 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி வருகிறது. இந்த டிவியை டேப்லெட் (Tablet), ஐபோன் (iPhone) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம். அதோடு ப்ளூடூத், யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்ஐ கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜீ5 (Zee5), ஆக்ஸிஜன் பிளே (Oxygen Play), ஈராஸ் நவ் (Eros Now), ஜியோசினிமா (JioCinema), சோனிலிவ் (SonyLiv), யூடியூப் (Youtube), மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஆர் (IR) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கன்ட்ரோல் கொண்ட ரிமோட் (Remote) வருகிறது. அதோடு கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் ‎30W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் வருகின்றன. அதில் டால்பி டிஜிட்டல் பிளஸ் (‎Dolby Digital Plus) மற்றும் சரவுண்ட் (Surround) சப்போர்ட் உள்ளது.

இந்த டிவியில் 2 யுஎஸ்பி (USB) போர்ட் வருகிறது. அதோடு ஈதர்நெட் (Ethernet), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட் இடம்பெற்றுள்ளது. டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-fi) மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) சப்போர்ட் உள்ளது. இந்த டிவிக்கு ஒரு வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. அதோடு 6 மாதத்துக்கான அசசரிஸ் (Accessories) வாரண்டி வருகிறது.

பிளாக் (Black) கலரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் விலை ரூ.25,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை முன்னிட்டு, வெறும் ரூ.14,499க்கு கிடைக்கிறது. இந்த டிவியை அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
40 inche KODAK 9XPRO Series Android LED TV Sale Under Rs 15000 With in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X