40" இன்ச் Smart TV.. வெறும் ரூ.11,000 விலை.. 1 இல்லை 2 டிவியா கூட வாங்கலாம்.. யோசிக்காதீங்க ஆர்டர் பண்ணுங்க..
போன வராது.. பொழுது போன கிடைக்காது.. என்று கூவி-கூவி விற்பனை செய்யப்படுகிறது இந்த புத்தம் புதிய 40" இன்ச் ஸ்மார்ட் டிவி (Smart TV). அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) தள்ளுபடியை எல்லாம் ஓரம்கட்டி பின்னுக்கு தள்ளிவிட்டது க்ரோமாவின்(Croma) ஸ்மார்ட்-டிவி தள்ளுபடி.
ஆம், மக்களே இங்கு நாம் பார்க்கப்போகும் தள்ளுபடியானது, மிகவும் பிரபலமான க்ரோமா (Croma) தளத்தில் இருந்து கிடைக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) போன்ற மற்றொரு நம்பகமான ஆன்லைன் ஷாப்பிங் (Online Shopping) தளம் தான் இந்த Croma சைட். தெரியாதவர்களுக்கு மற்றும் இதன் நம்பக தன்மை பற்றி கேள்வியுள்ளவர்களுக்கு, இந்த தளம் இந்தியாவின் டாட்டா குழுமத்திற்கு சொந்தமானது.

டாடா டிஜிட்டல் (Tata Digital) சேவையின் கீழ் கிடைக்கும் ஆன்லைன் ஷாப்பிங் தளம் இது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா டிஜிட்டல் (Tata Digital) மற்றும் க்ரோமா (Croma) தளம் ஆகியவை இரண்டும் டாடா குழுமத்தின் (Tata Groups) கீழ் வருகிறது. சரி, இப்போது ஸ்மார்ட் டிவி சலுகை மற்றும் தள்ளுபடி பற்றிய விபரத்திற்கு வரலாம். புதிதாக உங்களுக்கு ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டுமென்று ஐடியா இருக்கிறதா?
40" இன்ச் ஸ்மார்ட் டிவி (40 Inch Smart Tv):
அப்படியானால், இந்த ஒருமுறை சலுகையை நீங்கள் மிஸ் செய்யவே கூடாது. 32" இன்ச் ஸ்மார்ட் டிவி (32 Inch Smart Tv) வாங்க கிடைக்கும் விலையில் இப்போது உங்களால் 40" இன்ச் ஸ்மார்ட் டிவியே (40 Inch Smart Tv) வாங்க முடியும். இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் மாடலன் ஃபாக்ஸ்ஸ்கை (FOXSKY) என்ற இந்தியாவின் அதிக குறைந்த விலை ஸ்மார்ட் டிவி மாடல்களை விற்பனை செய்யவொரு பிராண்டில் இருந்து வாங்க கிடைக்கிறது.
இந்த பிராண்டின் கீழ் தற்போது அமோக விற்பனையின் தீயாய் விற்பனையாகிக் கொண்டிருக்கும் மாடல் தான் இந்த ஃபாக்ஸ்ஸ்கை FSFHS 40 இன்ச் முழு எச்டி LED ஆண்ட்ராய்டு டிவி (FOXSKY FSFHS 40 inch Full HD LED Smart Android TV) இதன் அசல் விலை ரூ.38,499 ஆகும். ஆனால், க்ரோமா தற்போது வழங்கும் சலுகையின் மூலம் இதன் மீது 70% தள்ளுபடி வழங்கப்பட்டு, ரூ.27,100 விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 40" இன்ச் அளவு கொண்ட ஒரு முழு எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியை இப்போது நீங்கள் வெறும் ரூ.11,300 என்ற விலைக்கு வாங்க முடியும். உண்மையில், இதுவொரு நம்ப முடியாத அதிரடி சலுகையாகும். இந்த ஸ்மார்ட் டிவி மீது நிறுவனம் 1 வருட வாரன்டியையும் வழங்கியுள்ளது. ஆகையால், நீங்கள் எந்தகவலையுமின்றி தாராளமாக இந்த ஸ்மார்ட் டிவியை உங்கள் வீட்டிற்காக வாங்கலாம்.

16ஜிபி ரேம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (16GB RAM Android Smart Tv):
இதன் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் 60Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) கொண்ட FULL HD LED டிஸ்பிளேவுடன் வருகிறது. இதன் பேசல் ஸ்லிம்மாக உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் வீடியோ தரம் உண்மையிலே சிறப்பாக அமைந்துள்ளது. சிறந்த ஆடியோ தரத்திற்கு இதில் 30W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speaker) டால்பி அட்மாஸ் ஆடியோ (Dolby Atmos audio) அம்சத்துடன் வழங்கப்பட்டுள்ளது.
இது 16ஜிபி ரேம் (16GB RAM) உடன் ஆண்ட்ராய்டு 9 டிவி இயங்குதளத்துடன் வருகிறது. இது பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) மற்றும் நெட்ஃபிலிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (YouTube) போன்ற அம்சங்களுடன் வருகிறது. இது 1 HDMI மற்றும் 2 USB போர்ட் ஆதரவை கொண்டுள்ளது. இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) அம்சமும் இணக்கமாகிறது.
குறைந்த விலையில் பெரிய டிஸ்பிளே டிவியை வாங்க விரும்பும் மக்களுக்கு இது சரியான தேர்வாகும்.


Click it and Unblock the Notifications








