Home
News

ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வாங்க சரியான நேரம்: நம்ப முடியாத விலைகுறைப்பு.!

ஏசர் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஏசர் நிறுவனத்தின் 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைகுறைப்பு

அதாவது ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (AR40AR2841FDFL) மாடலுக்கு தான் தற்போது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி ரூ.24,900-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 31 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.16,999-விலையில் வாங்க முடியும்.

ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வாங்க சரியான நேரம்.!

குறிப்பாக ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்ஸ் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி Cortex-A55 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வாங்க சரியான நேரம்.!

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இப்போது வரும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் கூட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை வசதியைத் தான் கொண்டுள்ளது. ஆனால் இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆனது 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாக வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. பின்பு இதன் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

கம்மி விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களையும் வழங்குகிறது இந்த ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம். மேலும் ஏசர் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை கம்மி விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசர் 40-இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வாங்க சரியான நேரம்.!

ரெட்மி ஸ்மார்ட் டிவி

அதேபோல் வரும் மார்ச் 14-ம் தேதி இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம். குறிப்பாக ரெட்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

.

More from GizBot

Best Mobiles in India

English summary
40-inch Acer Smart TV available at 31 percent discount: Full Details! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X