Home
News

அப்படி ஒரு ரிப்போர்ட் வர்ற வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போச்சு.. OnePlus 13, 13R கஸ்டமர்கள் புலம்பல்!

அப்படி ஒரு ரிப்போர்ட் வர்ற வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டு இருந்துச்சு.. என்பது தான் ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களை நம்பி வாங்கிய வாடிக்கையாளர்களின் மைண்ட் வாய்ஸ் ஆக இருந்தது. அவர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் ஒன்பிளஸ் உள்ளே வந்து எல்லாவற்றையும் சரி செய்துள்ளது.

ஒன்பிளஸ் 13 சீரீஸின் கீழ் அறிமுகமான ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய 2 மாடல்களுமே இந்தியாவிலும் உலகளவிலும் 4 வருட ஓஎஸ் அப்டேட்களை பெறும் என்கிற வாக்குறுதியுடன் அறிமுகம் செய்யப்பட்டன. இருப்பினும் சமீபத்தில் வெளியான ஒரு ரிப்போர்ட் ஆனது, "அவுட் ஆஃப் பாக்ஸ்" ஓஎஸ்-ஐயும் சேர்த்து தான் ஒன்பிளஸ் நிறுவனம் 4 வருட ஓஎஸ் அப்டேட் என்று கூறுவதாக சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தியது.

OnePlus 13, 13R ஓஎஸ் அப்டேட் பாலிசி குழப்பம்.. தீர்ந்தது!

இந்த ரிப்போர்ட்டால் கடுப்பான மற்றும் குழப்பம் அடைந்த ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் கஸ்டமர்களை சமாதானம் செய்யும் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்கிற தகவல் ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்தே நேரடியாக கிடைத்துள்ளது.

ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய 2 மாடல்களும் 4 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 15 உடன் அனுப்பப்படுகின்றன.

ஆக இவ்விரு மாடல்களும் ஆண்ட்ராய்டு 16, ஆண்ட்ராய்டு 17, ஆண்ட்ராய்டு 18 மற்றும் ஆண்ட்ராய்டு 19 ஆகியவற்றை பெறும் என்று அர்த்தம், செக்யூரிட்டி பேட்ச்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய 2 மாடல்களும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி பேட்ச்களை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் போன்கள் எத்தனை அப்டேட்களை பெறுகின்றன? கூகுள் மற்றும் சாம்சங் தங்களது லேட்டஸ்ட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு 7 வருட ஓஎஸ் அப்டேட்களை வழங்குகின்றன. ஆப்பிள் நிறுவனம் ஓஎஸ் அப்டேட் குறித்த தகவலை பகிரங்கமாக கூறவில்லை என்றாலும், ஐபோன்கள் குறைந்தபட்சம் 5 வருட அப்டேட்களை பெறுகின்றன.

இருப்பினும் மோட்டோரோலா, எச்எம்டி / நோக்கியா, ஹானர் மற்றும் சியோமி பிற போன்ற ஆண்ட்ராய்டு போன் தயாரிப்பாளர்களை விட ஒன்பிளஸ் நிறுவனம் 'பெட்டர்' ஆகத்தான் உள்ளது. ஏனென்றால் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் 2 வருடங்கள் வரை மட்டுமே ஓஎஸ் அப்டேட்களை பெறுகின்றன.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதி 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா உள்ளது இதோடு 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார், எப்/2.2 அபெர்க்ஷர் 3.5 செமீ மேக்ரோ உடனான 50எம்பி கேமராவும் உள்ளது.

கடைசியாக 1/1.95-இன்ச் எல்ஒய்டி600, எப்/2.6அபெர்க்ஷர், ஓஐஎஸ், 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும்.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிற்கான மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் கேஸ்கள் தனியாக வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
4 Years Android Update Policy Confirmed OnePlus 13 OnePlus 13R Will Get OS Updates Up to Android 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X