4 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்! காரணம் ஸ்மார்ட்போனா என்னப்பா சொல்றீங்க?

|

ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனத்தை அதிகம் பயன்படுத்தியதால் தாய்லாந்தைச் சேர்ந்த 4 வயதுக் குழந்தையின் கண் பார்வை பறிபோயுள்ளது. குழந்தையின் பார்வை பறிபோனதற்கு முக்கிய காரணமாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பயன்பாடுதான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி

அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி

உலக மக்கள் அனைவரையும் இந்த செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிஞ்சு குழந்தைகளின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கத்தில் கையில் இந்த ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களை பெற்றோர் கொடுத்துவிடுகின்றனர். இதற்குப் பின்னால் உள்ள விபரீதம் என்ன என்பதையும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் அஜாக்கிரதை

பெற்றோரின் அஜாக்கிரதை

பெற்றோரின் அஜாக்கிரதையினால் குழந்தைகளின் பார்வை பறிபோகும் அளவிற்கு ஆபத்து இதில் உள்ளது என்பதை உணருங்கள். குழந்தைகளின் சேட்டைகளைக் குறைப்பதற்காகவும், பெற்றோர்கள் வேலை செய்யும் நேரங்களில் குழந்தைகளின் தொந்தரவு இல்லாமல் இருக்கவும் குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் பெற்றோர்கள் கொடுத்துவிடுகின்றனர்.

பொங்கல் கிஃப்ட் விடுங்க மக்களே: இந்திய ரயில்வே அறிவித்த மிகப்பெரிய ஜாக்பாட் கிஃப்ட் பாருங்க.!பொங்கல் கிஃப்ட் விடுங்க மக்களே: இந்திய ரயில்வே அறிவித்த மிகப்பெரிய ஜாக்பாட் கிஃப்ட் பாருங்க.!

2 வயது முதல் ஸ்மார்ட்போன் பயன்படுத்திய குழந்தை

2 வயது முதல் ஸ்மார்ட்போன் பயன்படுத்திய குழந்தை

தச்சர் நியூஸ்டிக்கர் சூயிடுங் என்பவற்றின் 4 வயதுக் குழந்தை, ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் அதிகம் பயன்படுத்தியதால் கண் பார்வை பறிபோய்விட்டது. தச்சர் நியூஸ்டிக்கர் சூயிடுங், குழந்தைக்கு 2 வயது முதல் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட்களை பயன்படுத்த அனுமதித்தது இருக்கிறார். ஆனால் அது இன்று விபரீதத்தில் போய் முடிந்துள்ளதென்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கருவிழி சேதாரம்

கருவிழி சேதாரம்

இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து அதிகப்படியான நேரம் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் பயன்படுத்தியதனால் குழந்தையின் கண் பார்வை மோசம் அடைந்துள்ளது என்றும், குழந்தையின் கருவிழியில் அதிகப்படியான சேதாரம் ஏறப்பட்டுள்ளதென்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருவிழியில் அறுவைசிகிச்சை

கருவிழியில் அறுவைசிகிச்சை

கருவிழியில் அறுவைசிகிச்சை குழந்தையின்
பாதிக்கப்பட்ட குழந்தையின் கண் பார்வையை மீண்டும் பெறுவதற்கு மருத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குழந்தையின் பதிக்கப்பட்ட கருவிழியை அறுவைசிகிச்சை மூலம் சரி செய்துள்ளனர்.

ஜியோ பட்ஜெட் பயணர்களா?- தினசரி 1.5 ஜிபி டேட்டா., இதோ 4 புதிய திட்டங்கள்ஜியோ பட்ஜெட் பயணர்களா?- தினசரி 1.5 ஜிபி டேட்டா., இதோ 4 புதிய திட்டங்கள்

80 சதவீதம் பார்வை மீண்டும் கிடைத்துள்ளது

80 சதவீதம் பார்வை மீண்டும் கிடைத்துள்ளது

இரண்டு கண்களிலும் மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சைக்குப் பின் குழந்தையின் பார்வை 80 சதவீதம் குணமடைந்துள்ளது. அதேபோல் இனி ஸ்மார்ட்போன், டேப்லெட், கணினி, டிவி போன்ற சாதனங்களை அதிகம் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுமாறு குழந்தையின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

டைஸ்க்கினியாஸ்

டைஸ்க்கினியாஸ்

டைஸ்க்கினியாஸ் என்பது மயோபியா, ஃபோர்சைடுட்னிஸ், அசிஸ்டிமடிசம், சிதைந்துபோகும் பிரதிபலிப்பு, சிதைந்த சிதைவு போன்ற பலவிதமான காரணங்களால் உருவாகுவதாகும். ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் சாதனங்களில் அதிகம் பயன்படுத்துவதால் டைஸ்க்கினியாஸ் தான் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்பான எச்சரிக்கை

அன்பான எச்சரிக்கை

தான் குழந்தைக்கு நேர்ந்த சோகம் போல் மற்ற குழந்தைக்கு நேரிட வேண்டாம் என்று குழந்தையின் தந்தை தச்சர் நியூஸ்டிக்கர் சூயிடுங் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் நடந்ததை விவரித்துப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், மனதிற்கும் ஆபத்து விளைவிக்கும் மொபைல் சாதனங்களை அதிகம் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று உலக பெற்றோர் அனைவரையும் அவர் அன்பாக எச்சரித்துள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
4 Year Old Kid Undergoes Eye Surgery Due To Excess Use Of Smartphone And Tablet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X