365 நாளும் போன் பேசிக்கிட்டே இருக்குற Airtel கஸ்டமர்களை காப்பாற்றும் 4 அன்லிமிடெட் திட்டங்கள்!
எல்லோருக்குமே தினமும் 1ஜிபி அல்லது 2ஜிபி டேட்டா தேவைப்படுவது இல்லை. நம்மில் பலருக்கும் டேட்டா நன்மைகளை விட.. தினமும் போன் பேசுவதற்காக அன்லிமிடெட் வாய்ஸ் கால் (Unlimited Voice Call) நன்மையும், ஒடிபி போன்ற தேவைகளுக்கான இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் தான் மிகவும் முக்கியம்!
அப்படியான பயனர்களில் நீங்களும் ஒருவர் என்றால், அதிலும் குறிப்பாக நீங்களொரு ஏர்டெல் கஸ்டமர் என்றால்.. 24 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை முழுக்க முழுக்க அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளில் மட்டுமே கவனம் செலுத்தும் 4 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல் இதோ!

Airtel ரூ.155 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்
ஏர்டெல்லின் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஆனால் இந்த திட்டத்தின் கீழ் வெறும் 1 ஜிபி அளவிலான மொத்த டேட்டா மட்டுமே கிடைக்கும்!
ஆனால் 24 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் சேர்த்து மொத்தம் 300 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். அதுமட்டுமின்றி இலவச ஹலோட்யூன்ஸ், வின்க் மியூசிக் போன்ற கூடுதல் நன்மைகளும் உண்டு!
Airtel ரூ.179 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்
இந்த பட்டியலில் இரண்டாவதாக உள்ள ஏர்டெல் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டமானது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்குகிறது.
இதன் கீழ் உங்களுக்கு 2ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தாலும் கூட 28 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுடன் சேர்த்து, இலவசமாக 300 எஸ்எம்எஸ்களும் அணுக கிடைக்கும். ரூ.155 திட்டத்தை போலவே இதுவும் ஹலோட்யூன்ஸ், வின்க் மியூசிக் போன்ற கூடுதல் இலவச நன்மைகளை வழங்கும்!
Airtel ரூ.455 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்
நம்பினால் நம்புங்கள் ஏர்டெல்லின் ரூ.455 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் உங்களுக்கு வெறுமனே 6ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.
இருப்பினும் இது 84 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. அதாவது உங்களுக்கு 84 நாட்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை அணுக கிடைக்கும். கூடவே 900 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் மற்ற நன்மைகளை பொறுத்தவரை, இது அப்பல்லோ 24/7 நன்மைகள், ஃபாஸ்டாக் மீதான கேஷ்பேக், இலவச விங்க் மியூசிக் மற்றும் இலவச ஹலோட்யூன்ஸ் போன்றவைகளை வழங்கும்.
Airtel ரூ.1799 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்
கடைசியாக.. ஒரே ரீசார்ஜ்ஜில் வருஷம் முழுக்க அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கான ஒரு திட்டம் என்றால் அது ஏர்டெல் ரூ.1799 திட்டம் தான்!
இதன் கீழ் மொத்தம் 24 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். ஆனாலும் ஒரு ஆண்டு முழுவதும் 3600 எஸ்எம்எஸ்களுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை கிடைக்கும்
மேலும் ரூ.455-ஐ போலவே இந்த திட்டமும் அப்பல்லோ 24/7 நன்மைகள், ஃபாஸ்டாக் மீதான கேஷ்பேக், இலவச விங்க் மியூசிக் மற்றும் இலவச ஹலோட்யூன்ஸ் போன்ற கூடுதல் நன்மைகளை வழங்கும்.
ஆமை வேகத்தில் Airtel.. புயல் வேகத்தில் ஜியோ!
ஏர்டெல் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, ஹரியானாவில் உள்ள ஐந்து நகரங்களில் தனது 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பிளஸ் சேவைகள் அணுக கிடைக்கும் இந்திய நகரங்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது!
மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி நெட்வொர்க் இப்போது மொத்தம் 236 இந்திய நகரங்களில் அணுக கிடைக்கிறது. இந்த நகரங்களில் வசிக்கும் ஜியோ பயனர்கள், ஜியோ வெல்கம் ஆஃபரை பெறும் பட்சத்தில் 5ஜி இன்டர்நெட் ஸ்பீட்டை இலவசமாக அனுபவிக்கலாம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!


Click it and Unblock the Notifications








