ஆக.15 முதல் அமல்.. இந்த 4 விதிகளும் தெரியாமல் புதிய FASTag வருடாந்திர பாஸ் வாங்கிடாதீங்க!
2025 சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கி, என்எச்ஏஐ (NHAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India) ஆனது புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸை (New FASTag Annual Pass) அறிமுகப்படுத்தி, அமலுக்கு கொண்டு வருகிறது.
அடிக்கடி வாகனம் ஓட்டுபவர்களுக்கு, நெடுஞ்சாலை பயணத்தை எளிதாக்கும்படியும், மலிவு விலையில் பாஸ்டாக் சேவையை வழங்கும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய வருடாந்திர பாஸ்க்கான 4 முக்கிய விதிகளும் உள்ளன. அதென்ன விதிகள்? ஆண்டுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்? எங்கு வாங்க வேண்டும்? எங்கெல்லாம் பயன்படுத்த்த முடியும்? எங்கெல்லாம் பயன்படுத்த முடியாது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ்க்கான 4 முக்கிய விதிகள்:
1. புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ் ஆனது தனியார் வாகனங்களுக்கு மட்டுமே கிடைக்கும்
2. புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ்-ஐ ஒருமுறை இதை வாங்கிய பின்னர் மாற்ற முடியாதது மற்றும் இது பதிவு செய்யப்பட்ட ஒரு வாகனத்துடன் மட்டுமே வேலை செய்யும்.
3. புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ்-ல் ஆட்டோ -ரினியூவல் கிடையாது. அதாவது காலாவதியான பிறகு நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்
4. 200 பயணங்கள் அல்லது 1 வருடம், எது முதலில் வருகிறதோ அதுவரை மட்டுமே புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ் செல்லுபடியாகும்.
என்ன விலை? புதிய வருடாந்திர பாஸ்டாக் பாஸ் மூலம், தனியார் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் 200 டோல் கிராசிங்குகளுக்கு அல்லது ஒரு முழு வருடத்திற்கு, எது முதலில் வருகிறதோ அதற்கு ஒரு முறை ரூ.3,000 கட்டணம் செலுத்த வேண்டும். இது ஓட்டுநர்கள் அடிக்கடி அல்லது மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்யம் செயல்முறையில் இருந்து விடுதலை அளிக்கும்; கூடவே டோல் கேட்களில் ஏற்படும் போக்குவரத்தையும் குறைக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி கடந்த 2025 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த புதிய பாஸ் ஆனது, வணிக நோக்கமற்ற தனியார் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரின் கூற்றுப்படி, இந்த திட்டம் ஒருவருக்கொருவர், தங்களுக்கு அருகில் அமைந்துள்ள சுங்க கட்டணச்சாவடிகளில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதையும், சிங்கிள் பேமண்ட் அமைப்பை அமலுக்கு கொண்டுவருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
மேலும் இந்த பாஸ் உங்கள் தற்போதைய பாஸ்டாக் உடன் இணைக்கப்படும் (அது செயலில் இருக்க வேண்டும் மற்றும் உங்கள் வாகனத்தின் பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்). மேலும் இந்த புதிய பாஸ் ஆனது என்எச்ஏஐ மற்றும் எம்ஓஆர்டிஎச் (MoRTH) இன் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் மட்டுமே செயல்படும்.
புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ் வாங்குவது எப்படி?
- ராஜ்மார்க் யாத்ரா செயலி அல்லது என்எச்ஏஐ / மோர்த் வலைத்தளத்தை அணுகவும்
- உங்கள் வாகன எண் மற்றும் பாஸ்டாக் ஐடி கொண்டு லாக்-இன் செய்யவும்
- யுபிஐ, பேங்க் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் ரூ.3,000 ஆன்லைன் வழியாக செலுத்தவும்
- புதிய பாஸ் உங்கள் பாஸ்டாக் உடன் இணைக்கப்பட்டு ஆகஸ்ட் 15 அன்று செயல்படுத்தப்படும்.
புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ் எங்கெல்லாம் வேலை செய்யும்? எங்கெல்லாம் வேலை செய்யாது? என்எச்ஏஐ நடத்தும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் (எ.கா., டெல்லி-மும்பை விரைவுச் சாலை, மும்பை-நாசிக்) இது வேலை செய்யும். மாநில நெடுஞ்சாலைகள் அல்லது நகராட்சி சாலைகள் (எ.கா., மும்பை-புனே விரைவுச் சாலை, ஆக்ரா-லக்னோ விரைவுச் சாலை) ஆகியவைகளில் வேலை செய்யாது.
புதிய பாஸ்டாக் வருடாந்திர பாஸ்-ன் நன்மைகள்:
- மீண்டும் மீண்டும் ஆன்லைன் ரீசார்ஜ்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை
- சுங்கச்சாவடிகளில் குறைவான காத்திருப்பு நேரத்தை எதிர்பார்க்கலாம்
- கட்டணங்கள் தொடர்பான சர்ச்சைகள் குறையும்
- ஒரு கட்டணம், ஒரு முழு ஆண்டு அல்லது 200 பயணங்களை உள்ளடக்கும்.


Click it and Unblock the Notifications








