'குறிப்பாக' ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது. ஏன்..??

|

'இன்டர்நெட் பார்ன்' (Internet Porn) அதாவது இணையம் மூலம் ஆபாசப்படங்களை அணுகுவதில் இந்தியா ஒரு 'மகத்தான இழுவை'யில் இருக்கிறது என்பது தான் நிதர்சனம். கம்ப்யூட்டர் மற்றும் பிசிக்களை விட ஸ்மார்ட்போன்களில் தான் (ஆப்ஸ்கள் முதற்கொண்டு இருக்கிறது ) அதிக அளவிலான ஆபாசம் சார்ந்த அணுகல்கள் நடைபெறுவதே இன்டர்நெட் பார்ன் வளர்ச்சிக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

சீறும் இந்தியா, இத்தனை வேகமா..!? - வாய்பிளக்கும் ஜி7 நாடுகள்..!

எது எப்படி இருப்பினும் ஆபாசப்படங்கள் பார்ப்பது என்பது முற்றிலும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விடயம் ஆகும், உடன் அதற்கான எந்த விதமான சட்டப்பூர்வமான தடைகளும் இல்லாத தேசத்தில் தான் நாம் வாழ்கிறோம். இருப்பினும் ஆபாச படங்கள் சார்ந்த அணுகலில் ஈடுபடும்போது இதர சைபர் தந்திரங்களிலும் நாம் சிக்கும் வாய்ப்புண்டு, குறிப்பாக ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் படங்கள் அணுகும் போது.

அப்படியாக, ஆண்ராய்டு போனில், ஏன் ஆபாச படம் பார்க்க கூடாது என்பதற்கான 4 காரணங்களை பற்றிய தொகுப்பே இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

காரணம் #1 :

சட்டவிரோத வாஸ் சந்தாக்களுக்கு வழிவகுக்கும் (illegal VAS subscriptions)

நடைமுறை :

பெரும்பாலான ஆபாச வலைத்தளங்கள் இலவசமாகத் தான் பெறப்படுகின்றன. இதனை பயன்படுத்தி சில வலைத்தளங்கள் லாபம் பார்க்க சட்ட விரோதமான சட்டவிரோத வாஸ் சந்தாக்களை நடைமுறைப் படுத்தலாம்.

கிளிக் :

பின்பு நீங்கள் உங்கள் ஆண்ராய்டு போன் வழியாக குறிப்பிட்ட வலைதளத்தை கிளிக் செய்தாலே போதும் வாஸ் சந்தா ஆட்டோமட்டிக்காக செயல்படத் தொடங்கிவிடும்.

காரணம் #2 :

மேலும் பல டிக்கர்ஸ்களை ஈர்க்கும் (Attracts more porn tickers)

டவுன்லோட்டிங் :

பார்ன் டிக்கர்ஸ் அதாவது போலியான ஆண்ராய்டு ஆப்ஸ்கள், ஆபாசப் படங்கள் அனுகலாம் என்று உள்ளே நுழைந்தால் நீங்கள் கிளிக் செய்யும் அனைத்திற்கும் பின்னாலும் எதோ ஒரு கேம் எதோ ஒரு ஆப் டவுன்லோட்டிங் இருக்கும்.

காரணம் #3 :

பெரிய அளவிலான செக்யூரிட்டி ரிஸ்க் (Huge security risks)

வாய்ப்பு :

உங்கள் வங்கி மற்றும் இதர பெர்சனல் விடயங்களுக்கான ஜிமெயில் ஐடி மூலம் ஆபாச வலைதளங்களை அணுகினால் நீங்கள் பெரிய அளவிலான சைபர் குற்ற சம்பவங்களில் சிக்க வாய்ப்புள்ளது.

காரணம் #4 :

ரான்சம்வேர்ஸ் (Ransomwares)

தீம்பொருள் :

ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் ஆன்லைனில் எதுவுமே இலவசம் இல்லை, எல்லாவற்றிக்கும் பின்னாலும் ஒரு வியாபாரம் இருக்கிறது. அப்படியான ஒன்று தான் ரான்சம்வேர்ஸ் எனப்படும் தீம்பொருள் (மால்வேர்)..!

தொகை :

இதுபோன்ற மால்வேர்கள் ஒரு சாதனத்தை முழுமையாக 'லாக்' செய்துவிடும், பின்பு அதை 'அன்லாக்' செய்ய பயனாளியை குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்தும்.

மிகவும் அதிகம் :

இது போன்ற முரட்டுத்தன்மான ரான்சம்வேர்ஸ் மால்வேர்கள் ஆபாச வாளைதலங்களில் மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது வகையினர் உஷார்.!

மொத்தம் 3 வகையான ஆன்லைன் ஆபாச பார்வையாளர்கள் உள்ளனர். ஒரு வரம்பு இல்லாத பட்சமான (வயது, நேரம்) மக்கள் ஆன்லைனில் ஆபாச படங்களை பார்க்கிறாரக்ள், ஆபாச வலைதள அணுகலை நிகழ்த்துகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

'கேஸூவல் வியூவர்ஸ்' எனப்படும் சாதாரண பார்வையாளர்கள் தொடங்கி மிக எளிதாக ஆபாசத்திற்கு அடிமையாகி விட்டோம் என்றும் கருதும் மக்கள் வரை ஒவ்வொரு ஆன்லைன் பார்ன் பார்வையாளர்களையும் நம்மால் வகைப்படுத்த முடியும். அப்படியாக வகைப்படுத்தப்பட, ஒரு பொதுவான மூன்று பிரிவுகளில் ஆன்லைன் பார்ன் பார்வையாளர்களை பிரிக்கலாம்.

அது என்னென்ன வகை.? குறிப்பாக மூன்றாவது வகையினருக்கு என்ன சிக்கல்கள் மற்றும் ஆபத்துகள் காத்திருக்ககின்றன என்ற கட்டுரையை படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.!

'அடிச்சாச்சு லக்கி ப்ரைஸ்' விவசாயி நிலத்தில் கிடைத்த விண்கல்.!

மிச்சிகன்: அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் நகரத்தில் அறிய வகை விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல், உலகின் ஆறாவது மிகப் பெரிய விண்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிய வகை விண்கல்லின் மதிப்பு சுமார் 74 லட்சத்திற்கும் மேல் இருக்குமென்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிய வகை விண்கல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மேற்கட்ட ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

விவசாயி நிலத்தில் விண்கல்

மிச்சிகன் பகுதியில் வசிக்கும் டேவிட் மாசுரேக் என்ற விவசாயின் நிலத்தில் தான் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டேவிட் மாசுரேக், இந்த நிலத்தை விவசாயத்திற்காக 1988 இல் வாங்கியதாகத் தெரிவித்திருக்கிறார்.

30 ஆண்டு

இந்த விண்கல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக டேவிட் இன் வாசல் படி அருகே, வெறும் தடுப்பு கல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான் கூடுதல் சுவாரசியம். சிறு தினங்களுக்கு முன்பு தான் தோட்ட வேலைக்காகக் கற்களை இடம் மற்றும் பொது இதன் வடிவம் வித்தியாசமாக இருப்பை உணர்த்த டேவிட் அருகில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

74 லட்சம் விண்கல்

23 பவுண்ட் எடை கொண்ட விண்கல்லை, மிச்சிகன் பல்கலைக்கழத்தில் உள்ள புவியியலாளர் மோனா சர்பிஸ்கு ஆய்வு செய்து, அது உண்மையான விண்கல் என்பதை உறுதி செய்து டேவிட் இடம் தெரிவித்துள்ளார். அதன் மதிப்பு சுமார் 74 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறியுள்ளார்.

1930ஆம் ஆண்டு பூமிக்கு வந்துள்ள விண்கல்

இந்த அறிய வகை விண்கல்லில் இரும்பு மற்றும் நிக்கல் துகள்கள் அதிகம் உள்ளதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விண்கல் 1930ஆம் ஆண்டில் பூமிக்கு வந்துள்ளது என்ற தகவல்களுடன் அடுத்த கட்ட ஆய்வுகளில் ஏதேனும் அறிய வகை புது கூறுகள் கண்டுபிடிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை

டேவிட் இந்த விண்கல்லை விற்று, அதில் வரும் பணத்தில் பாதியை மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை தரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

ஆபாச வலைதங்களில் இருக்கும்போது ஏன் பேஸ்புக்கை லாக்அவுட் செய்ய வேண்டும்

இந்தியாவின் முன்னேற்றம் எந்த விதமான துறையையும் விட்டுவைக்கவில்லை. ஆபாசப்படங்களை அதிகமாக பார்க்கும் டாப் 10 உலக நாடுகளில் இந்தியாவிற்கு 3-வைத்து இடம் (பிரபல ஆபாச வலைத்தளமான 'பார்ன்ஹப்'-ன் தரவுகளின்படி)..!

'பாலுணர்வுக் கிளர்ச்சியம்' அதாவது பார்னோகிராஃபி (Pornography) என்பது சரியானதா..? தவறானதா..? என்று விவாதம் செய்வதால் எதுவும் இங்கே மாறிவிடப் போவதில்லை என்பது உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். அதனால், ஆபாசப்படம் பார்க்கும்போது ஏன் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டை எப்போதுமே லாக்-அவுட் செய்ய வேண்டும் விளக்கம் கொடுத்து விடுகிறோம்..!

லாக்-இன் :

இண்டர்நெட்டில் ஆபாசப்படங்கள் பார்க்கும் போது உங்கள் முகநூல் அக்கவுண்ட் லாக்-இன்'னில் இருந்தால் நீங்கள் டிராக் செய்யப்படுவீர்கள்..!

நடத்தை :

உங்கள் முகநூல் அக்கவுண்டின் பேஸ்பூக் ப்ளக்டு-இன் பட்டன், லைக் பட்டன், ஷேர் பட்டன் போன்ற அம்சங்களில் இருந்து கொண்டு நீங்கள் ஆபாச வலைதளத்தில் இருந்தால் உங்கள் நடத்தை கண்காணிக்கப்படும்.

லைக் மற்றும் ஷேர் :

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு லைக் மற்றும் ஷேர் பட்டன்கள் அதனை பயன்படுத்தும் மக்களை கண்காணிக்காது என்று உறுதியளிக்கப்பட்டது ஆனால் இப்போது அது மாறிவிட்டது.

தகவல்கள் :

"விளம்பரங்களை இலக்குகளாக வைத்து மக்களின் சமூக விடயங்களை கண்காணிக்க மாட்டோம், மேலும் சேகரிக்கப் படும் தகவல்கள் எல்லாமே 90 நாட்களில் அழிக்கப்பட்டுவிடும். பணத்திற்காக விற்கப்படமாட்டாது" என்று 2001 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதிகள் தற்போது காணாமல் போய் உள்ளன.

ட்ராக் :

தற்போது உங்களை 'ட்ராக்' செய்வது மட்டுமின்றி உடன் நீங்கள் எந்த வலைதளத்தில் உள்ளீர்கள், எவ்வளவு அதிகமாக குறிப்பிட்ட வலைதளத்தில் உள்ளீர்கள் என்பதை வைத்து உங்கள் நடத்தையையும் சேர்த்து கண்காணிக்கின்றனர்.

புதிய தனியுரிமை கொள்கை :

சமீபத்தில் புதிய தனியுரிமை கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது அதில் "எங்களின் சேவையின் கீழ் உங்களுக்கு கிடைக்கும், நீங்கள் பார்வையிடும் மூன்றாம் தரப்பு வலைத்தளங்களின் தரவுகள் சேகரிக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது.

அனைத்துமே சேகரிக்கப்படும் :

அதாவது நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள் மற்றும் ஆப்ஸ் பற்றிய தகவல், அந்தந்த வலைத்தளங்கள் மற்றும் ஆப்ஸ்களில் நீங்கள் பயன்படுத்தும் எங்கள் சேவைபற்றிய தகவல்கள், உடன் உங்களுக்கு சேவை வழங்கும் வலைத்தளங்களின் டெவெலப்பர் மற்றும் பப்ளிஷர் விவரங்கள் என அனைத்துமே சேகரிக்கப்படும்.

வகை :

முக்கியமாக ஆபாச வலைத்தளங்கள் மட்டும் கண்காணிக்க படுவதில்லை, நாம் அணுகும் அனைத்து வகையான வலைத்தளங்கள் மற்றும் ஆப்ஸ்களும் கண்காணிக்கப்படுகிறது என்பது குறிப்பித்தக்கது.

மறுபக்கம் :

நிறுவனத்தின் ப்ரைவசி பாலிசிகள் இவ்வளவு சீக்கிரம் நிலையை மாற்றிக் கொள்கின்றன என்பது சற்று தொந்தரவாக இருக்கிறது என்பது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் நுகர்வோர்கள் மற்றும் பயனாளிகள் அனைவரும் தெளிவாக செயல் பட வேண்டியதும் நிதர்சனம் தான்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
4 reasons why you should avoid watching porn on Android smartphones. Read more about this in Tamil GizBot.

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more