Home
News

இதுக்கு மேல குறைக்க முடியாது.. உச்சகட்ட விலை குறைப்பில்.. தரமான Google போன்.. நம்பி வாங்க 4 காரணங்கள்!

எடுக்கும் ஒவ்வொரு போட்டோவும், வீடியோவும் "சும்மா நச்சுனு" இருக்கும்படியான.. சிறந்த கேமரா திறன்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்களானால், பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் 38% தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கும் இந்த கூகுள் போன் உங்களுக்கானதாக இருக்கலாம்!

அது கூகுள் பிக்சல் 6ஏ (Google Pixel 6a) மாடலாகும். தற்போது இது பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில் மிகப்பெரிய விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இதன் அசல் விலை (Original Price) என்ன? ஆஃபர் விலை (Offer Price) என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்குவதற்கான 4 காரணங்கள் (Reasons to Buy) என்ன? இதோ விவரங்கள்:

உச்சகட்ட விலை குறைப்பில் Google Pixel 6a.. நம்பி வாங்க 4 காரணங்கள்!

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை (OLED Display) கொண்டுள்ளது. இது சக்திவாய்ந்த கூகுள் டென்சர் ப்ராசஸர் (Google Tensor Processor) உடனாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உள்ளது. அதில் 12.2எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ராவைடு கேமரா உள்ளது, முன்பக்கத்தில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டு சாஃப்ட்வேர் ஆதரவும் (Software Support) கிடைக்கும்.

128 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.43,999 ஆகும். இருப்பினும் இது பிளிப்கார்ட் வழியாக வெறும் ரூ.26,999 க்கு வாங்க கிடைகிர்து. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 38% நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. இதுமட்டுமல்ல பிளிப்கார்ட் வழியாக எக்ஸ்சேஞ்ச் டீல் (Exchange Deal) மற்றும் பேங்க் ஆஃபர்களும் (Bank Offers) அணுக கிடைக்கிறது.

எக்ஸ்சேஞ்ச் டீலை பொறுத்தவரை உங்கள் பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்வதன் வழியாக ரூ.26,700 வரையிலான தள்ளுபடியை பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் வேல்யூ (Exchange Value) ஆனது உங்கள் பழைய போனின் மாடல் மற்றும் அதன் நிலையை பொறுத்து வேறுபடும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, பிளிப்கார்ட்டின் இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை ஆனது உங்கள் பகுதியில் கிடைக்கிறதா, இல்லையா என்பதை நீங்கள் முன்னரே சரிபார்க்க வேண்டும். இதை செய்ய பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியின் பின் கோட்-ஐ (PIN Code) உள்ளிட வேண்டும். உங்கள் பகுதியில் எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளதா இல்லையா என்பது வெளிப்படுத்தப்படும்.

வங்கி சலுகைகளை பொறுத்தவரை, ஃபெடரல் பேங்க் கிரெடிட் கார்டுகளை (Federal Bank Credit Card ) பயன்படுத்தி கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனை வாங்கினால் உங்களுக்கு 10% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். அதுவே எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு (HDFC Bank Credit Card) இஎம்ஐ பரிவர்த்தனையில் ரூ1,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

நம்பி வாங்க 4 காரணங்கள்: (1) பிக்சல் 7 சீரிஸ் அறிமுகமாகி விட்டாலும் கூட இன்னமும் இதுவொரு ஸ்டைலிஷ் ஆன ஸ்மார்ட்போனாக உள்ளது (2) முன்னரே குறிப்பிட்டபடி இது சக்திவாய்ந்த கூகுளின் சொந்த டென்சர் சிப்செட்டை கொண்டுள்ளது, இது அட்டகாசமான மற்றும் ஸ்மூத் ஆன செயல்திறனை வழங்குகிறது

(3) ஒப்பீட்டளவில் இதன் ஓஎல்இடி டிஸ்பிளே அற்புதமாக உள்ளது. (4) கடைசியாக இது மிகவும் க்ளீன் ஆன யூஸர் இன்டர்பேஸை வழங்குகிறது. இதுதவிர்த்து போட்டோ எடிட்டிங்கிற்கான மேஜிக் ஏரேசர், மிருதுவான செல்ஃபிக்களுக்கான ஃபேஸ் அன்ப்ளர், நீர் எதிர்ப்பு, நீண்ட கால பேட்டரி லைஃப் போன்றவைகளையும் கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களாக கூறலாம். ஒட்டுமொத்தமாக ஒரு சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை மலிவு விலையில் தேடுகிறீர்களானால், இதுவொரு சிறந்த தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
4 Reasons to buy Google Pixel 6a Which Available to Buy in Flipkart Under 38 Percentage Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X