இ-பாஸ் இல்லாம எங்கயும் போகாதிங்க., இ-பாஸ் வாங்காமல் ஊருக்கு வந்த 4 பேர்., என்ன நடந்தது தெரியுமா?

|

சென்னையில் இருந்து திருப்பூருக்கு இ-பாஸ் வாங்காமல் வந்த 4 பேர் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரையடுத்து அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா., உலகின் 212 நாடுகளில் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல்

பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல்

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதான ஒன்றாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்குள் நுழையும் வெளியேறவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

எனது வெற்றி அதிர்ஷ்டமில்ல., என் முதல் விமானப் பயணம் இப்படிதான்: சுந்தர்பிச்சை பகிர்ந்த நினைவுகள்!எனது வெற்றி அதிர்ஷ்டமில்ல., என் முதல் விமானப் பயணம் இப்படிதான்: சுந்தர்பிச்சை பகிர்ந்த நினைவுகள்!

2 லட்சத்து 56 ஆயிரத்து 611 ஆக உயர்வு

2 லட்சத்து 56 ஆயிரத்து 611 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. உலகில் கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.

https://tnepass.tnega.org என்ற வலைதளம்

https://tnepass.tnega.org என்ற வலைதளம்

மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் இருக்கிறது. தொடர்ந்து வெளி ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பயணிப்பவர்கள் இ-பாஸ் பயன்படுத்துவது கட்டாயம். இபாஸ் https://tnepass.tnega.org என்ற வலைதளத்தில் வாங்கலாம்.

இ பாஸ் பெறுவது எப்படி

இ பாஸ் பெறுவது எப்படி

தனிநபர் இ பாஸ் பெறுவதற்கு திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், வேறு இடத்தில் சிக்கித் தவித்தல் போன்ற சில காரணங்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படுகிறது என்பது இதில் கவனிக்கத்தக்க விஷயம். தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். 5-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 30 ஆம் தேதி அமலில் உள்ளது.

இ-பாஸ் வாங்காமல் பயணம்

இ-பாஸ் வாங்காமல் பயணம்

இந்த நிலையில் 19 வயது இளம்பெண், 16 வயது சிறுவன், 25 வயது இளம்பெண், 9 மாத பெண் குழந்தை ஆகிய 4 பேர் சென்னையில் இருந்து இ-பாஸ் வாங்காமல் திருப்பூருக்கு காரில் வந்துள்ளனர்.

சோதனை எடுக்கப்பட வேண்டும்

சோதனை எடுக்கப்பட வேண்டும்

இதையடுத்து அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள அக்கம் பக்கத்தினர் அந்த தொகதி எம்.எல்.ஏவிடம் 4 பேர் சென்னையில் இருந்து வந்திருக்கின்றனர் அவர்களுக்கு சோதனை எடுக்கப்பட வேண்டும் என முறையிட்டுள்ளனர்.

Lockdown-ற்கு பிறகு TV வாங்க இதுதான் சரியான நேரம்! அதீத சலுகை சிறந்த லாபம்!Lockdown-ற்கு பிறகு TV வாங்க இதுதான் சரியான நேரம்! அதீத சலுகை சிறந்த லாபம்!

வீட்டிலேயே தனிமைப்பட்டு கண்காணிப்பு

வீட்டிலேயே தனிமைப்பட்டு கண்காணிப்பு

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, அந்த 4 பேரையும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின் வீட்டிலேயே தனிமைப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
4 Passengers travel without E-pass from chennai to tirupur

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X