'கிலி' கிளப்பும் வடகொரியா, செய்வதறியாமல் 'அலறும்' கொரியத் தீபகற்பம்..!
தனக்கு இருக்கும் மாபெரும் சக்தியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் தோன்றியதையெல்லாம் செய்வதை சர்வதிகாரம் என்பார்கள். அப்படியான ஒரு நிலைப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு நாடு தான் வடகொரியா.!
சமீப காலமாக தனது ஆயுத பலத்தை வெளிப்ப்படையாக உலகிற்கு காட்சிப்படுத்திக் கொண்டிருக்கும் வட கொரியாவின் செயல்கள், அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாய் அமைந்துள்ளது. அப்படியாக, ஒட்டுமொத்த கொரியத் தீபகற்பத்தையே உஷார் நிலைக்குள் தள்ளும் வட கொரியா ஹை-டெக் யுக்திகள் பல.!

01. சைபர் தாக்குதல் :
வடகொரியாவின் பல வழக்கமான பலவீனங்களை ஈடுகட்டும் ஒரு சமச்சீரற்ற வழிமுறை தான் பிற நாடுகளுக்கு எதிரான வட கொரியாவின் சைபர் தாக்குதல்கள்.

பியொங்யாங் :
சமீப காலமாக வடகொரியா பலவகையான சைபர் தாக்குதல்களில் ஈடுபடுவதின் மூலம் பியொங்யாங் (Pyongyang - அந்நாட்டின் தலைநகரம்) பற்றிய வலிமையை சற்று அறிந்து கொள்ள முடிகிறது.

சீனா மற்றும் ரஷ்யா :
இருப்பினும், சீனா மற்றும் ரஷ்யா அளவிற்கு சிறப்பான, தாக்குப்பிடிக்கக்கூடிய சைபர் தாக்குதல்களை நிகழ்த்த வடகொரியா திறமையற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திறமையற்றது :
அதாவது வடகொரியாவின் சைபர் தாக்குதல்கள் ஒரு நாட்டின் பயன்பாடுகளை முடக்கவோ, நெட்வொர்க்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அளவிற்கோ திறமையற்றது.

02.பேலிஸ்டிக் மிஸைல்ஸ் :
பேலிஸ்டிக் மிஸைல்ஸ் (Ballistic Missiles) அதாவது விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்.

ரஷ்ய - சீன உதவி :
வடகொரியா ஒரு குறிப்பிடத்தக்க ஏவுகணை திறன் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இதற்கு ரஷ்யா மற்றும் சீனாவின் பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யா மற்றும் சீனா உதவியுடன் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முசூதன் - தெப்போடோங் :
தற்போதைய நிலவரப்படி வடகொரியாவிடம் தோராயமாக, சுமார் 600 குறுகிய தூர ஸ்கட் ஏவுகணைகள் (Short-range Scud missiles), 200 னோடோங் ஏவுகணைகள் (Nodong missiles), ஐம்பது முசூதன் (Musudan) மற்றும் தெப்போடோங் (Taepodong) ஏவுகணைகள் இருக்கின்றது.

இலக்கு :
இரசாயன அல்லது அணு சக்தி கொண்டு உருவாகும் இவ்வகை ஆயுதங்களால் வடகொரிய தீபகற்பத்தை சுற்றி எங்கு வேண்டுமானாலும் இலக்கை நிர்ணயிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

03.இரசாயன ஆயுதங்கள் :
வடகொரியாவிடம் பெரிய அளவிலான ரசாயன ஆயுதங்களின் கையிருப்பு இருக்கிறது என்பது உலக நடுகள் அறிந்த விடயமே.

இலக்குகள் :
உள்நாட்டில் தயாரிக்கப்படும் இவ்வகை ஆயுதங்களை விமானம் அல்லது ஏவுகணைகளில் பொருத்தி இலக்குகள் குறி வைக்கப்படலாம் என்பது தான் உச்சக்கட்ட விபரீதம்.

நல்ல செய்தி :
வட கொரியாவின் பலவீனமான பொருளாதாரம் மற்றும் 'தனிமை' போன்ற போன்றவைகள் இவ்வகையான ஆயுதங்களை அதிகம் உற்பத்தி செய்ய விடாமல் தடுக்கிறது என்பது கொரிய தீபகற்பத்திற்கு ஒரு சிறிய நல்ல செய்தியாகும்.

04.ஹை டெக் பீரங்கிகள் :
அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு உலக நாடுகளும் 2 மணி நேரத்தில் நகரம் ஒன்றை அழிக்கும் அளவு ராணுவ சக்தி கொண்டது என்பதை ஈடுகட்டும் அளவு ஆயிரக்கணக்கான பீரங்கிகளை வடகொரியா கொண்டுள்ளது.

170 எம்எம் கோக்ஸன் :
முக்கியமாக 25 மைல் தூரம் கடந்து தாக்கும் 170 எம்எம் கோக்ஸன் (170 mm Koksan) வகை பீரங்கிகள்.

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications