Home
News

சும்மா ஒரு ஸ்பேஸ் அடிச்சா போதும்.. WhatsApp-க்கு வந்த பெரிய மாற்றம்.. 4 புதிய Text Format-கள் அறிமுகம்!

வழக்கமாக வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் புதுப்புது அம்சங்கள் தான் அறிமுகமாகும். ஆனால் இந்த முறை சற்றே வித்தியாசமாக.. நம்முடைய மெசேஜிங் ஸ்டைலேயே முற்றலும் மாற்ற உதவும் 4 புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்கள் (Text Formatting Options) வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதாவது வாட்ஸ்அப்பில் ஏற்கனவே அணுக கிடைக்கும் போல்ட் (Bold), இடாலிக் (Italic), ஸ்ட்ரைக்த்ரோ (Strikethrough) மற்றும் மோனோஸ்பேஸ் (Monospace) ஆகிய 4 டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களுடன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 4 டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களும் இணையும்.

WhatsApp-ல் 4 புதிய Text Format-கள் அறிமுகம்!

பழைய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களை போலவே, வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள 4 புதிய விருப்பங்களும் கூட, வாட்ஸ்அப் வழியாக அனுப்பப்படும் மெசேஜ்களை ஒழுங்கமைக்கவும், தேவைக்கு ஏற்ப வடிவமைக்கவும் உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களின் பெயர்கள் என்ன? அவைகளை பயன்படுத்துவது எப்படி? யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்கள் யாருக்கெல்லாம் கிடைக்கிறது? வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களானது அனைத்து ஆண்ட்ராய்டு (Android), ஐஓஎஸ் (iOS), வெப் (Web) மற்றும் மேக் (Mac) டெஸ்க்டாப் பயனர்களுக்கும் அணுக கிடைக்க்கிறது. வாட்ஸ்அப் சேனல் நிர்வாகிகளும் கூட இந்த புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களை பயன்படுத்த முடியும்.

WhatsApp-ல் 4 புதிய Text Format-கள் அறிமுகம்!

புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களின் பெயர்கள் என்ன? வாட்ஸ்அப் நிறுவனம் அதன் புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் விருப்பங்களை புல்லடட் லிஸ்ட் (Bulleted List), நம்பர்டு லிஸ்ட் (Numbered List), பிளாக் கோட் (Block Quote) மற்றும் இன்லைன் கோட் (Inline Code) என்று அழைக்கிறது.

புல்லடட் லிஸ்ட்: இது ஒரு செயல்பாட்டின் படிகளை கோடிட்டு காட்டவும், செய்முறையில் உள்ள பொருட்களை பட்டியலிடவும் அல்லது மெசேஜிங் முக்கிய புள்ளிகளை குறிப்பிடவும் உதவும். இந்த டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங்கை பயன்படுத்த "-" சிம்பிலை டைப் செய்து, அதை தொடர்ந்து ஒரு ஸ்பேஸ்-ஐ (Space) டைப் செய்து, பின்னர் குறிப்பிட்ட மெசேஜை டைப் செய்ய வேண்டும்.

WhatsApp-ல் 4 புதிய Text Format-கள் அறிமுகம்!

நம்பர்டு லிஸ்ட்: இதுவும் புல்லடட் லிஸ்ட்ஸ்-ஐ போலவே தான் விஷயங்களை பிரித்துக்காட்ட உதவும். ஆனால் நம்பர்டு லிஸ்ட்ஸ்-ல் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இது குறிப்பிட்ட வரிசையை எண்ணிடப்பட்ட பட்டியலாக காட்டும். இந்த டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங்கை பயன்படுத்த "1.", "2." அல்லது "3." என்கிற தொடர்ச்சியான எண்களில் ஏதேனும் ஒன்றை டைப் செய்து, அதை தொடர்ந்து ஒரு ஸ்பேஸ்-ஐ டைப் செய்து, பின்னர் குறிப்பிட்ட மெசேஜை டைப் செய்ய வேண்டும்.

பிளாக் கோட்: இது ஒரு மெசேஜில் உள்ள முக்கியமான வார்தைகளை முன்னிலைப்படுத்தவும், மெசேஜ்களில் அதை மிகவும் கவனிக்கும்படி செய்யவும் உதவும். இந்த டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங்கை பயன்படுத்த.. ஒரு மெசேஜின் தொடக்கத்திலேயே ">" சிம்பிலை டைப் செய்து, அதை தொடர்ந்து ஒரு ஸ்பேஸ்-ஐ டைப் செய்து, பின்னர் குறிப்பிட்ட மெசேஜை டைப் செய்ய வேண்டும்.

இன்லைன் கோட்: இது ஒரு வாக்கியத்தில் உள்ள குறிப்பிட்ட தகவலை / வார்த்தையை.. மற்ற வார்த்தைகளில் இருந்து வேறுபடுத்தி காட்ட உதவும். இந்த டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங்கை பயன்படுத்த "" சிம்பிலை டைப் செய்து, பின்னர் குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்து, மீண்டும் "" சிம்பிலை டைப் செய்யவும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த 4 புதிய விருப்பங்களும், ஏற்கனவே இருக்கும் போல்ட், இடாலிக், ஸ்ட்ரைக்த்ரோ மற்றும் மோனோஸ்பேஸ் உடன் இணையும்.

வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள 4 புதிய டெக்ஸ்ட் ஃபார்மெட்டிங் ஆப்ஷன்கள் ஆனது பயனர்கள் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்த உதவுவதோடுஸ் சேர்த்து, அவர்கள் அனுப்பும் மெசேஜ்கள் மூலம் - குறிப்பாக க்ரூப் சாட்களில் - மிகவும் திறம்பட தொடர்புகொள்ளவும், விஷயங்களை பகிரவும் முடியும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
4 New Text Formatting Options in WhatsApp Bulleted Numbered List Block Quote Inline Code How to Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X