Home
News

WhatsApp செட்டிங்ஸ்-ல் புது மாற்றம்.. க்ரீன் கலருக்கு கும்பிடு.. வந்தது ரெட், ப்ளூ, பர்பிள் கலர்கள்!

வாட்ஸ்அப்பில் கிடைக்கும் டீஃபால்ட் க்ரீன் கலர் சாட் வால்பேப்பரை (Default Green Color Chat Wallpaper) பிடிக்காமல்.. அதை வேறொரு போட்டோ அல்லது வால்பேப்பர் கொண்டு பெர்சனலைஸ் செய்த பல பயனர்களில் நீங்களும் ஒருவர் என்றால்.. உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

வாட்ஸ்அப் நிறுவனம் ஒருவழியாக அதன் ஆப்பில் உள்ள டீஃபால்ட் சாட் வால்பேப்பர் அம்சத்தில் க்ரீன் கலரை தவிர்த்து மேலும் பல கலர் ஆப்ஷன்களை சேர்த்துள்ளது. ஐபோன்களுக்கான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் காணப்பட்டுள்ள இந்த புதிய கஸ்டமைசேஷனின் கீழ் என்னென்ன கலர் ஆப்ஷன்கள் கிடைக்கும்? இதை செட் செய்வது எப்படி? எப்போது அனைவருக்கும் அணுக கிடைக்கும்? இதோ விவரங்கள்:

WhatsApp செட்டிங்ஸ்-ல் ரெட், ப்ளூ, பர்பிள் வால்பேப்பர்!

வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன்கள் வழியாக சோதிக்கப்படும் புதிய அம்சங்களை பற்றிய ட்ராக் செய்யும் டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக கிடைத்த தகவலின்படி, ஐஓஎஸ் 24.11.10.70-க்கான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் ஆப்பிளின் டெஸ்ட்ஃபிளைட் (Apple TestFlight) சோதனை திட்டம் வழியாக ஐபோன் பயனர்களுக்கு டீஃபால்ட் சாட் வால்பேப்பரில் மல்டிபிள் கலர் ஆப்ஷன்கள் தேர்வு செய்ய கிடைக்கிறது.

தற்போது வரை புதிய டீஃபால்ட் சாட் தீம் அம்சமானது சோதனை கட்டத்தில் அல்லது உருவாக்கத்தின் கீழ் மட்டுமே உள்ளது. அதாவது இந்த அம்சத்தை தற்போது எனேபிள் செய்யு முடியாது. ஆனால் கூடிய விரைவில் இது பீட்டா டெஸ்ட்ர்களுக்கு பயன்படுத்த கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WhatsApp செட்டிங்ஸ்-ல் ரெட், ப்ளூ, பர்பிள் வால்பேப்பர்!

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோவால் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டின் படி, வாட்ஸ்அப்பில் உள்ள செட்டிங்ஸ் மெனுவின் கீழ் கிடைக்கும் டீஃபால்ட் சாட் தீம் அம்சத்தின் கீழ், தற்போது மொத்தம் ஐந்து கலர் ஆப்ஷன்கள் அணுக கிடைக்கிறது. டீஃபால்ட் க்ரீன் தீம் உடன் சேர்த்து ப்ளூ, க்ரே, ரெட் மற்றும் பர்பிள் கலர் ஆப்ஷன்கள் அணுக கிடைக்கிறது.

மேற்கண்ட 4 புதிய சாட் தீம்களில் ஒன்றை தேர்ந்தெடுப்பதன் வழியாக மாறும் வாட்ஸ்அப் டூடுல் பேக் கிரவுண்ட் ஆனது பழைய க்ரீன் கலர் தீமை போலவே உங்களுக்கான மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் சாட்டிற்கான மாற்றமாக மட்டுமே இருக்கும். அதாவது நீங்கள் சாட் செய்யும் மற்ற வாட்ஸ்அப் பயனர்களுக்கு இந்த மாற்றம் பிரத்தில்பலிக்காது.

WhatsApp செட்டிங்ஸ்-ல் ரெட், ப்ளூ, பர்பிள் வால்பேப்பர்!

இந்த புதிய சாட் தீம் அம்சமானது ஸ்டாண்டர்ட் சேனலில் வருவதற்கு முன், ஐஓஎஸ் பீட்டா டெஸ்டர்களுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு-க்கான பெரும்பாலான அம்சங்கள் வாட்ஸ்அப் முழுவதும் பகிரப்படுவதால், இந்த அம்சம் எதிர்காலத்தில் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டுவெர்ஷனிலும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் வாட்ஸ்அப் அதன் பிளாட்ஃபார்மில் ஏஐ ஜெனெரேடட் ப்ரொபைல் போட்டோவை ( AI Generated Profile Photo) கொண்டுவரும் என்கிற தகவலும் வெளியானது. அதாவது வாட்ஸ்அப் செயலிக்கு உள்ளயே ஏஐ ஜெனெரேடட் ப்ரொபைல் போட்டோக்களை உருவாக்கி அதன் பயன்படுத்துவதற்கான விருப்பத்தை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரவுள்ளது.

டபுள்யூஏபீட்டாஇன்ஃபோவின் கூற்றுப்படி, இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டின் பீட்டா வெர்ஷனை பயன்படுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு அணுக கிடைக்கிறது. இது வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-ல் கிரியேட் ஏஐ ப்ரொபைல் போட்டோ என்கிற புதிய பகுதியின் கீழ் அணுக கிடைக்கிறது,. பெயர் குறிப்பிடுவது போலவே இது நீங்கள் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் ஒரு ஏஐ ஜெனெரேடட் ப்ரொபைல் போட்டோவை உருவாக்கும்.

அதாவது இந்த ஏஐ அம்சம் பேஸ்புக்கில் கிடைத்த கிரியேட் அவதார்-ஐ போலவே செயல்படலாம். வரம்பற்ற விருப்பங்களின் கீழ் உங்களுடைய ஏஐ புகைப்படத்தை நீங்களே உருவாக்கலாம். இது பயனர்கள் தங்கள் உண்மையான படங்களை மறைப்பதற்கும், செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த படங்களை ப்ரொபைல் போட்டோக்களாக பயன்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். Photo Courtesy: WABetaInfo

More from GizBot

Best Mobiles in India

English summary
4 New Default Chat Theme Colour and Wallpapers Added in WhatsApp Latest Beta Version How it Works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X