அடேங்கப்பா.. மலிவு விலையில் இந்த 4 திட்டங்கள் இவ்வளவு நன்மைகளை வழங்குதா? அசத்தும் BSNL.!
பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற தனியார் நிறுவனங்களை விட கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் மற்ற நிறுவனங்களை விட கூடுதல் டேட்டா நன்மை மற்றும் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டங்களையும் இந்நிறுவனம் வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.
ஆனால் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டன. பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் இதுவரை 4ஜி சேவையைக் கூட இன்னும் வழங்கவில்லை. இருந்தபோதிலும் கூடிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் ஓடிடி நன்மைகளை வழங்கும் சில திட்டங்களை வைத்துள்ளது. அதாவது இந்நிறுவனம் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் ஓடிடி நன்மையை வழங்கும் நான்கு கம்மி விலை திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த நான்கு திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த டேட்டா உபயோகத்திற்குத் தினசரி வரம்பு இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் BSNL ட்யூன்ஸ், EROS now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலுடன் வருகிறது பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகள், ஹார்டி மொபைல் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் என்டர்டெயின்மென்ட் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகள், ஹார்டி மொபைல் சேவைகள், Lystn இசை, Zing மற்றும் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அதேபோல் சமீபத்தில் டிராய் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 13 மாதங்களில் நடக்காத ஒரு சம்பவம் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் நடந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் மொத்தம் 1.5 மில்லியன் வயர்லெஸ் பயனர்களை இழந்துள்ளது. அதாவது 15 லட்சம் கஸ்டமர்கள் பிஎஸ்என்எல்-ஐ கைவிட்டுள்ளனர்.
கடந்த 13 மாதங்களில், ஒரே மாதத்தில் இவ்வளவு பயனர்கள் வெளியேறியதே இல்லையாம். கிட்டத்தட்ட 1.5 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களை இழந்த பிறகு, பிஎஸ்என்எல்-ன் ஒட்டுமொத்த வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 105.23 மில்லியனாக குறைந்ததுள்ளது. இது 100 மில்லியனுக்கும் கீழே சென்றால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். வோடபோன் ஐடியாவை போலவே பிஎஸ்என்எல் நிறுவனமும் கூட, பல மாதங்களாகவே பயனர்களை சேர்க்க முடியாமல் / தக்கவைக்க முடியாமல் திணறி வருகிறது.


Click it and Unblock the Notifications