நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..

|

தமிழில் 'பாம்பின் கால் பாம்பு இனம் மட்டும் அறியும்' என்ற பழமொழி இருக்கிறது. இந்த பழமொழியின் படி பாம்புகளுக்குக் கால்கள் உள்ளது, அது பாம்பின் இனத்திற்கு மட்டுமே தெரியும் என்ற வாக்கியத்தில் அமைந்துள்ளது. இதன் பொருள் மனிதர்களுடன் ஒப்பிடப்பட்டிருந்தாலும், இப்போது இந்த வாக்கியமே உண்மையாகிவிட்டது. ஆம், நான்கு கால்களுடன் கூடிய பாம்பு இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்கு முந்தைய காலத்தில் வளைந்துள்ளது என்று கூறப்படும் ஆதாரம் கிடைத்துள்ளது.

பாம்பின் கால் பாம்பு அறியும் பழமொழியின் பொருள் என்ன தெரியுமா?

பாம்பின் கால் பாம்பு அறியும் பழமொழியின் பொருள் என்ன தெரியுமா?

பாம்பின் கால் பாம்பு இனம் மட்டும் அறியும் தன்மையான கூறும் இந்த பழமொழியின் உண்மையான பொருள் என்ன தெரியுமா? பாம்பின் கால் பாம்பு மட்டும் அறியும் என்பது போல, அறிவிற் சிறந்தவர்களை அறிவினால் அறிந்துகொள்ளும் திறம் அவர்களைப் போன்ற அறிவிற் சிறந்தோர்க்கே விளங்கும் என்பதே இந்த நாலடி பாடலின் பொருள். ஆக, பாம்புகளுக்குக் கால்கள் உண்டு என்றும், அவற்றைப் பாம்பு இனத்தால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்றும் இந்த பழமொழி கூறுகிறது. ஆனால், பாம்புகளுக்குக் கால்கள் இருப்பதை இது வரை யாரும் பார்த்ததில்லை.

பாம்புக்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் கால்கள் இருந்ததா?

பாம்புக்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் கால்கள் இருந்ததா?

இந்த படத்தைப் பார்த்தால் இனி அப்படிச் சொல்ல முடியாது. பாம்புக்கும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாள் கால்கள் இருந்துள்ளது என்கிறது இந்த அறிவியல் கண்டுபிடிப்பு. அறிவியலுக்குத் தெரிந்த முதல் நான்கு கால் பாம்பாக அறிவிக்கப்பட்ட இந்த பாம்பின் படிமம் டைனோசர் வயதுடைய புதைபடிமமானது என்று கூறப்படுகிறது. உண்மையில் இது கால்களுடைய ஒரு பாம்பாக இருக்கலாம், அல்லது இது முற்றிலும் மாறுபட்ட மிருகமாக இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. அது டிராகனா அல்லது பல்லியா அல்லது கடலில் நீந்தக் கூடிய உயிரினமா என்பது தான் இப்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..

145 மில்லியன் ஆண்டுக்கு முன்பு உயிர் வாழ்ந்த கால்களுடைய பாம்பு

145 மில்லியன் ஆண்டுக்கு முன்பு உயிர் வாழ்ந்த கால்களுடைய பாம்பு

நான்கு கால்களுடன் இருக்கும் படிமம் சுமார் 7.7 அங்குலங்கள் (19.5 சென்டிமீட்டர்) நீளமுள்ள ஒரு பென்சிலின் நீளம் கொண்ட சிறிய புதைபடிமமாகக் காட்சியளிக்கிறது. க்ரெட்டேசியஸ் காலம் எனப்படும் காலத்தில் சுமார் 145 மில்லியன் முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்த ஒரு நீளமான உடலைக் கொண்ட இந்த உருவம், முதலில் நான்கு கால்களைக் கொண்ட பாம்பு என்று கூறப்பட்டது. நீண்ட நாட்கள் நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்குப் பின்னர் மற்றொரு தரப்பு ஆராய்ச்சியாளர்கள் இதை இப்போது அழிந்து வரும் கடல் பல்லி இனமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

டெட்ராபோடோஃபிஸ் ஆம்ப்ளெக்டஸ் (Tetrapodophis amplectus) என்றால் என்ன?

டெட்ராபோடோஃபிஸ் ஆம்ப்ளெக்டஸ் (Tetrapodophis amplectus) என்றால் என்ன?

டெட்ராபோடோஃபிஸ் ஆம்ப்ளெக்டஸ் (Tetrapodophis amplectus) என்பது கிரேக்க மொழியில் "நான்கு கால் பாம்பு" என்று பொருள்படும் உயிரினத்தின் பெயராகும். இந்த படிமத்தை மற்றொரு குழு ஆய்வு செய்த பிறகு, இந்த மாதிரியில் முக்கிய உடற்கூறியல் பாம்பிற்கான அம்சங்கள் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளதாக அக்குழு கூறியுள்ளது. ஆனால், முன்னணி ஆய்வு ஆராய்ச்சியாளர் மைக்கேல் கால்டுவெல் அப்படிக் கூறவில்லை. உயிரியல் அறிவியல் துறையில் பேராசிரியராக மற்றும் எட்மண்டன் கனடா ஆல்பெர்டா பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆசிரியர் தலைமையில் நடந்த ஆய்வு,

தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட "பாறை".. உண்மையில் இந்த பாறை என்னவென்று தெரியுமா? எதற்கு பயன்படும்?

இரண்டு கால்களுடன் இதற்கு முன்பு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதா?

இரண்டு கால்களுடன் இதற்கு முன்பு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதா?

பாம்பின் மூதாதையர்களுக்கு நான்கு கால்கள் இருந்தன என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர். இந்த ஆய்வின் முடிவுகள் 2016 ஆம் ஆண்டில் ஆய்வுகள் பத்திரிகையில் வெளியானது. இதற்கு முன் நடத்தப்பட்ட வேறொரு ஆய்வில், 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பாம்புகளின் உடல் உறுப்புக்களில் இருந்து அவற்றின் கால்களை இழந்தது என்று பரிந்துரைக்கப்பட்டது. இரண்டு கால்களுடன் இதற்கு முன்பு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது, பாம்பின் மரபியல் காணப்பட்டு என்று மரபணு பிறழ்வுகள், மற்றும் பிற ஆராய்ச்சி கூட ஒரு புதை படிவ ஆதாரங்களைக் கண்டுபிடித்திருக்கின்றன.

நான்கு கால்கள்.. ஒவ்வொரு காலிலும் ஐந்து விரல்கள்

நான்கு கால்கள்.. ஒவ்வொரு காலிலும் ஐந்து விரல்கள்

ஆனால், நான்கு கால்களுடன் ஒரு டெட்ராபோடோபிஸ் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இதன் கண்டுபிடிப்பு 2015 இல் அறிவியல் இதழில் அறிவிக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட ஒரே நான்கு கால் பாம்பு புதைபடிமமாக இது இப்போது வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு ஆய்வு 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிருடன் இருந்தபோது, டெட்ராபோடோஃபிஸ் அதன் நான்கு கால்களையும், ஒவ்வொன்றும் ஐந்து விரல்களைக் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?

இதற்காக தான் இதன் கால்கள் மற்றும் விரல்கள் பயன்படுத்தப்பட்டதா?

இதற்காக தான் இதன் கால்கள் மற்றும் விரல்கள் பயன்படுத்தப்பட்டதா?

இது நடைப்பயிற்சிக்காகப் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை என்றும், ஆனால் இனச்சேர்க்கையின் போது கூட்டாளர்களைப் பிடிக்கவும், வேட்டையாடும்போது சண்டையிடும் இரையைப் பிடிக்கவும் பெரியளவில் பயன்படுத்தியது என்று ஆராய்ச்சிகளின் தகவல் முன்பு தெரிவித்தது. இந்த விலங்கு பண்டைய பல்லிகளிலிருந்து நவீன கால பாம்புகளுக்கு மாறியதன் ஒரு பகுதியாக இருக்கலாம், மேலும் இது பூமியில் துளையிடும் விலங்குகளிலிருந்து உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சி

பல ஆண்டுகளுக்கு பின்னர் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சி

ஆனால், புதிய ஆய்வின் இணை ஆசிரியரும் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் முதுகெலும்பு பழங்காலவியல் நிபுணருமான ராபர்ட் ரெய்ஸ் ஆகியோருக்கு இந்த முடிவு பொருந்தவில்லை. எனவே, அவர்கள் தனியாருக்குச் சொந்தமானது படிமத்தை தங்களின் சொந்த நுண்ணிய மதிப்பீடு செய்ய Solnhofen அருங்காட்சியகம் சென்று, காட்சியில் வைக்கப்பட்ட படிமத்தை ஆய்வு செய்தனர். புதிய குழு டெட்ராபோடோஃபிஸ் படிமம், இது பாம்பை விடப் பல்லி போன்றது என்பதற்கான ஆதாரங்களை அதிகம் காட்டுகிறது என்று கண்டறிந்துள்ளது.

இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உலகின் முதல் 'கடல் தேவதை' தாவரம்..யாரும் அறிந்திராத பிரமிக்க வைக்கும் உண்மை..இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த உலகின் முதல் 'கடல் தேவதை' தாவரம்..யாரும் அறிந்திராத பிரமிக்க வைக்கும் உண்மை..

முட்டை ஓடு போல நசுக்கப்பட்ட மண்டை ஓடு என்ன சொல்கிறது?

முட்டை ஓடு போல நசுக்கப்பட்ட மண்டை ஓடு என்ன சொல்கிறது?

குறிப்பாக மண்டை ஓட்டில் மாற்றங்கள் இருப்பதாய் ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இது நவம்பர் 17 ஆம் தேதி வெளியான ஜர்னல் ஆஃப் சிஸ்டமேடிக் பேலியோண்டாலஜியில் வெளியிடப்பட்டது. மண்டை ஓட்டின் பெரும்பாலான எலும்புகள் "முட்டை ஓடு போல நசுக்கப்பட்டது," ஒரு ஸ்லாப்பில் உடைந்த மண்டை ஓட்டின் துண்டுகள் மற்றும் மண்டை ஓட்டின் இயற்கையான அச்சுடன் இது காணப்பட்டது என்று கால்டுவெல் கூறினார். "அசல் ஆசிரியர்களால் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட ஒரு விஷயம் மண்டை ஓட்டின் இணை" என்றும் அவர் கூறினார்.

இந்த உறுப்புக்கள் இருந்தால் தானே இதை பாம்பு என்று கூற முடியும்?

இந்த உறுப்புக்கள் இருந்தால் தானே இதை பாம்பு என்று கூற முடியும்?

டெட்ராபோடோபிஸின் உடலும் பாம்பு போன்றது அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் . உதாரணமாக, ஒல்லியான டெட்ராபோடோஃபிஸ் புதைபடிமத்தில் ஜிகோஸ்பீன்ஸ் மற்றும் ஜிகாண்ட்ரா என்ற உறுப்புக்கள் இல்லாமல் இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். இந்த உறுப்பு தான் ஒரு பாம்பை முன்னும் பின்னுமாகப் பயணிக்க உதவும் முதுகெலும்புகளில் நிலைப்படுத்தும் அமைப்புகளைக் கொண்டது என்று ஆராய்ச்சி குழு கூறியுள்ளது. மேலும் அது நீளமான, நேரான விலா எலும்புகளைக் கொண்டுள்ளது, இது ஒரு நீச்சல் வீரராக இருக்கலாம் என்று என்பதைக் குறிக்கிறது.

கடைசியில நீங்களுமா குருநாதா: ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய ஜியோ.! கவலையில் பயனர்கள்.!கடைசியில நீங்களுமா குருநாதா: ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய ஜியோ.! கவலையில் பயனர்கள்.!

பல்லிகள், பாம்புகள் மற்றும் ஆம்பிஸ்பேனியன்களில் காணப்படாத தனித்தும்

பல்லிகள், பாம்புகள் மற்றும் ஆம்பிஸ்பேனியன்களில் காணப்படாத தனித்தும்

இருப்பினும், இது ஒரு திறந்த மற்றும் மூடிய வழக்கு அல்ல. "டெட்ராபோடோஃபிஸ் ஒரு அற்புதமான புதைபடிமமாகும். இது வேறு எந்த ஸ்குவாமேட்டில் காணப்படாத அம்சங்களைக் கொண்டுள்ளது. அதாவது, பல்லிகள், பாம்புகள் மற்றும் ஆம்பிஸ்பேனியன்களில் காணப்படாத தனித்துவமான அம்சங்களைக் காட்டுகிறது என்று சாவோ பாலோ மற்றும் தெற்கு மெத்தடிஸ்ட் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் அருங்காட்சியகத்தின் இணை ஆராய்ச்சியாளர் புருனோ கோன்சால்வ்ஸ் அகஸ்டா கூறினார். இதனால் இது உண்மையில் என்ன உயிரினம் என்பதைக் கண்டறிவதில் குழப்பம் நீடிக்கிறது.

Best Mobiles in India

English summary
4 Legged Snake Fossil Is Actually A Different Ancient Animal New Study Claims : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X