வெளியாகுமா 4 இன்ச் ஐபோன் 6 மினி

By Meganathan
|

ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் கைகளுக்கு பெரிதாக இருக்கின்றதா, ஆப்பிள் நிறுவனம் இதற்கான தீர்வை கண்டுபிடித்து விட்டது. ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் செய்திகளின் படி 4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 6 மினி 2015 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

[2014 ஆம் ஆண்டின் டாப் 10 டேப்ளெட்]

ஆப்பிள் இன்ஸைடரின் படி ஐபோன் 6 மினி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஐபோன் 5எஸ் போன்றும் வடிவமைப்பு ஐபோன் 6 போன்று இருக்கும் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது.

வெளியாகுமா 4 இன்ச் ஐபோன் 6 மினி

ஆப்பிள் நிறுவனம் 4 இன்ச் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த ஸ்மார்ட்போன் 2015 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகும் என்றும் கோவென் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய ஐபோன் 6 மினி ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் போன்ற வடிவமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[செல்பீ ஸ்டிக் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் 1926 ஆம் ஆண்டை சேர்ந்தது]

ஐபோன் 5சி ஸ்மார்ட்போனின் மாற்றாக இந்த ஸ்மார்ட்போன் அமையும் என்றும் கூறப்படுகின்றது. ஐபோன் 6 மினி குறைநத செலவில் தயாரிக்கப்படுவதோடு இதில் குவால்காம் பிராசஸர் பொருத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
4 Inch iPhone 6 mini rumoured to release in 2015. Apple is planning to launch a mini version of its iPhone dubbed iPhone 6s in 2014.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X