சிங்க கர்ஜனையில் அமெரிக்காவுக்கு மிரட்டல் விட்ட கிம் ஜொங்-உன்.!

எங்கள் நாட்டு மீது உள்ள பொருளாதார தடைகளை விலக்கா விட்டால், மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்துவோம் என்று வடகொரியா அதிபர் ஜிங் ஜான் உன் தெரிவித்தார். இது அமெரிக்காவுக்கு மிரட்டல் விடும் பாணியில் இருக்கின

|

தென்கொரியாவுக்கும்-வடகொரியாவுக்கும் உறவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக வடகொரியா அதிபர் ஜிங் ஜான் உன்னும் அறிவித்தார்.

சிங்க கர்ஜனையில் அமெரிக்காவுக்கு மிரட்டல் விட்ட கிம் ஜொங்-உன்.!

இதை வரவேற்பதாக அமெரிக்காவும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், புத்தாண்டு பிறந்ததால், இதை அமெரிக்கா, வடகொரியா, தென்கொரிய உள்ளிட்ட நாடுகள் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

இதைத்தொடர்ந்து எங்கள் நாட்டு மீது உள்ள பொருளாதார தடைகளை விலக்கா விட்டால், மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்துவோம் என்று வடகொரியா அதிபர் ஜிங் ஜான் உன் தெரிவித்தார். இது அமெரிக்காவுக்கு மிரட்டல் விடும் பாணியில் இருக்கின்றது.

ஏவுகணை சோதனை:

ஏவுகணை சோதனை:

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

 வடகொரியா மீது பொருளாதார தடை:

வடகொரியா மீது பொருளாதார தடை:

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

வட கொரியா-தென் கொரியா உறவு:

வட கொரியா-தென் கொரியா உறவு:

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது. இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது.

அணு ஆயுதங்கள் குறித்து ஒப்பந்தம்:

அணு ஆயுதங்கள் குறித்து ஒப்பந்தம்:

இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது. இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. ஆனால், இதனை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

வடகொரியா மீது தடை விலக்கவில்லை:

வடகொரியா மீது தடை விலக்கவில்லை:

ஒப்பந்தத்தின் படியும், கேட்டுக் கொண்டதின் படியும் வடகொரியா மீது உள்ள பொருளாதார தடை உத்தரவை அமெரிக்கா இன்று வரை திரும்ப பெறவில்லை. இதனால் ஏன் நாம் அமெரிக்காவின் உத்தரவுக்க செவி சாய்க்க வேண்டும் என்று நிலைப்பாட்டை வடகொரியா எடுத்துள்ளது.

பியாங்ஜின் ஒப்பந்தம்:

பியாங்ஜின் ஒப்பந்தம்:

பியாங்ஜின் எனவே அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவிட்டால் தங்கள் நாட்டின் பியாங்ஜின் (pyongjin) கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரிய தற்சமயம் எச்சரித்துள்ளது.

 நிறுத்த வாய்பே இல்லை:

நிறுத்த வாய்பே இல்லை:

அமெரிக்கா தடையை நீக்காவிட்டால் தொடர்ந்து நாங்கள் அணு ஆயுத சோதனை மற்றும் அணு ஆயுதங்களை தயார் செய்து விற்பனை செய்து வருவோம் என்று வடகொரியா தெரிவித்து, இன்று வரை நடைமுறையிலும் ஈடுபட்டுள்ளது.

ஐநா கண்டனம்:

ஐநா கண்டனம்:

இந்நிலையில், வடகொரியா நாட்டின் வளங்களை அணு ஆயுதத் தயாரிப்புக்கு திருப்பியதன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியிருப்பதாக ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

தீர்மானத்திற்கு எதிர்ப்பு:

தீர்மானத்திற்கு எதிர்ப்பு:

இந்தத் தீர்மானம் ஐ.நா. சபையில் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டாலும் குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக இதுபோன்ற தீர்மானங்கள் ஏற்புடையதல்ல என ரஷ்யா, சீனா, கியூபா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

வடகொரியா எச்சரிக்கை:

வடகொரியா எச்சரிக்கை:

தங்கள் நாட்டிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அணு ஆயுத ஒழிப்புக்கு தடையாக அமைந்து விடலாம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

மூன்று அதிகாரிகள் மீது நடவடிக்கை:

மூன்று அதிகாரிகள் மீது நடவடிக்கை:

மனித உரிமைகள் மீறல் தொடர்பாக வடகொரியாவின் மூன்று முக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. இதில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் வலக்கரம் என்று கருதப்படும் அதிகாரி ஒருவரும் உள்ளார்.

 பாராட்டு :

பாராட்டு :

இதுகுறித்து வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.வில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தங்கள் நாட்டுடனான உறவை மேம்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர்களின் கிண்டல்:

அதிபர்களின் கிண்டல்:

இந்நிலையில், டிரம்பைப் பார்த்து வயதான பைத்தியம் என்றார் வடகொரியத் தலைவர் கிம். இதற்குப் பதிலடியாக குட்டி ராக்கெட் மனிதன் என்று அவரை கிண்டல் செய்தார் டிரம்ப். அத்துடன், உலகம் இதுவரை பார்த்திராத வகையில் தீயும் சினமும் கொண்டு வடகொரியாவைத் தாக்குவோம் என்றும் டிரம்ப் கூறினார். பலம் பொருந்திய அணு ஆயதங்கள் கொண்ட இரு நாடுகளும் மோதிக் கொள்ளும் நிலை உருவானது.

அமெரிக்காவுடன் பேச தயார்:

அமெரிக்காவுடன் பேச தயார்:

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் 2ம் கட்ட பேச்சு வார்த்ததை நடத்த இருப்பதாக வடகொரியா அதிபர் ஜிங் ஜான் உன் அறிவித்தார். இது புத்தாண்டில் இது உறவு பாலமாக அமைந்தது. அனைத்து மக்களும் இதை உற்றுநோக்கினர்.

திடீர் எதிர்ப்பு:

திடீர் எதிர்ப்பு:

வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்காவிட்டால் மீண்டும் தாங்கள் அணு ஆயுத சோதனைகளை நடத்தியே தீருவோம் என்று வடகொரியா அதிபர் ஜிங் ஜான் உன் புத்தாண்டு உரையில் தெரிவித்தார்.

 இறையாண்மை பாதிப்பு:

இறையாண்மை பாதிப்பு:

அமெரிக்காவின் பொருளாதார தடைகள் நாட்டின் இறையாண்மையை பாதிக்க கூடிய வகையில் இருக்கின்றது. இதனால் அணு ஆயுத சோதனை நடத்த தயாரா இருப்பதாகவும் அதிபர் ஜிங் ஜான் அறிவித்துள்ளார். இதை வடகொரியா மக்களும் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
4 ideas from NKorean leader Kim Jong Un’s New Year’s speech : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X