Home
News

Gmail உட்பட.. Google சேவையில் 4 முக்கிய மாற்றங்கள்.. எல்லா பாலும் சிக்ஸ் அடித்த சுந்தர் பிச்சை!

கூகுள் நிறுவனம் தனது வருடாந்திர ஐ/ஓ டெவலப்பர் மாநாட்டில் (Google I/O 2025) வரும் பல புதிய மாற்றங்களை, திட்டங்களை , அறிமுகங்களை அறிவித்தது. இந்நிகழ்வு முழுவதும் ஜெமினி மற்றும் ஏஐ அறிவிப்புகளாலேயே நிரம்பி இருந்தது என்று கூறலாம். அப்படியாக கூகுள் ஐ/ஓ டெவலப்பர் மாநாட்டின் 4 சுவாரஸ்யமான அறிவிப்புகள் இதோ:

1. கூகுள் மீட் லைவ் டிரான்ஸ்லேஷன் (Google Meet Live Translation): இந்த புதிய ஜெமினி அடிப்படையிலான ஏஐ அம்சத்துடன், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் மீட்டிற்கான "லைவ் ஸ்பீச்" மொழிபெயர்ப்பை கொண்டுவருகிறது. இந்த புதிய அம்சத்தின் மூலம், உங்கள் பார்ட்னர் விரும்பும் மொழியில் நீங்கள் சொல்வதை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்க முடியும்.

Gmail உட்பட.. Google சேவையில் 4 முக்கிய மாற்றங்கள்!

கூடுதலாக, உரையாடலை மொழிபெயர்க்கும்போது, ​​குரலின் இயல்பான வெளிப்பாடுகளை அப்படியே வைத்திருக்க ஏஐ முயற்சிக்கும் என்றும், இதனால் தொனி மற்றும் வெளிப்பாடு சரியாக இருக்கும் என்றும் கூகுள் உறுதியளிக்கிறது. இதுகுறித்த விளக்கக்காட்சியின் போது, ​​ஆங்கில பேச்சாளர் ஒருவர் ஸ்பானிஷ் பேச்சாளருடன் அழைப்பில் இருப்பது போன்ற ஒரு டெமோவை கூகுள் காட்டியது.

லைவ் ஸ்பீச் மொழிபெயர்ப்பு அம்சம் இயக்கப்பட்டதும், கூகுள் மீட் அவர்கள் சொல்வதை ஆங்கிலத்தில் டப்பிங் செய்தது. முதற்கட்டமாக கூகுளின் ஏஐ ப்ரோ திட்டம் அல்லது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஏஐ அல்ட்ரா திட்டத்தில் இணைந்த பீட்டா பயனர்களுக்கு இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் அனைத்து பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும்

2. ஜிமெயில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் (Gmail Smart Replies): இமெயில் எழுதும் ​​செயல்முறையை எளிதாக்க கூகுள் இப்போது இன்னும் ஸ்மார்ட் ஆன பரிந்துரைகளை வழங்குகிறது. இப்போது, ​​ஜெமினி உங்கள் ஜிமெயில் பாக்ஸ்கள், உங்கள் மெயில் த்ரெட்ஸ், டிரைவ் மற்றும் பிற குறிப்புகளிலிருந்து தகவல்களை சேகரித்து, உங்களுக்காக ஒரு மின்னஞ்சல் பதிலை உருவாக்கும் போது உங்கள் எழுத்து பாணியைப் பின்பற்ற முயற்சிக்கும் என்று கூகுள் கூறுகிறது.

அதாவது இது ஜிமெயிலில் நாம் பெறும் ஷார்ட் ரிப்ளைகளை போலல்லாமல், நீண்ட பதில்களை உருவாக்கும். மேலும், இது உங்கள் வழக்கமான தொனிக்கு ஏற்பவும், வெவ்வேறு நபர்களுடன் வித்தியாசமாக பேசும். உங்கள் மேலாளரிடம் பேச வேண்டியிருந்தால் அதற்கு ஏற்ப முறையாக பேசும், ஒரு நண்பரிடம் பேசும்போது ஜாலியாக பேசும்.

3) கூகுள் சேர்ச் லைவ் (Google Search Live): கூகுள் ஐ/0 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட மற்றொரு ஜெமினி அடிப்படையிலான அம்சம் கூகுள் சேர்ச் லைப். இது முதன்முதலில் கடந்த ஆண்டு ப்ராஜெக்ட் அஸ்ட்ராவின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அடிப்படையில், நீங்கள் உங்கள் கேமராவை பயன்படுத்தலாம், உங்களுக்கு தேவையான எதையும் சுட்டிக்காட்டலாம் மற்றும் உங்கள் தேடல் குறித்த வினவலை டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இது முதலில் "இந்த கோடையின் பிற்பகுதியில்" பீட்டா பதிப்பாக வெளியிடப்படும்.

4. கூகுள் பீம் (Google Beam): இது முதன்முதலில் 2021 இல் ப்ராஜெக்ட் ஸ்டார்லைன் என அறிவிக்கப்பட்டது, இறுதியாக இப்போது தயாராக உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், உங்கள் சலிப்பூட்டும் வீடியோகால் கால்களை உயிர்ப்பிக்க முடியும் என்று கூகுள் கூறுகிறது. இது ஒரு 3டி வீடியோ கான்பரன்சிங் அமைப்பாகும். இது ஒரு நேரடி தொடர்பு உணர்வைப் பிரதிபலிக்கிறது.

இது 6 கேமராக்கள், ஏஐ, மேம்பட்ட மற்றும் சிறப்பு காட்சிகளை பயன்படுத்தி உண்மை போன்ற, உயர் நம்பகத்தன்மை கொண்ட படங்களை வழங்க உதவுகிறது. இவை அனைத்தும் நிகழ்நேரத்தில் 60fps இல் நடக்கும், மேலும் ஹெட் ட்ராஸ்கிங் மிகவும் துல்லியமாக இருக்கும் என்றும் கூகிள் கூறுகிறது. இது இப்போது பணியிடங்களில் வணிக பயன்பாட்டிற்கு தயாராகி வருகிறது, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிறுவன மட்டத்தில் இதை முதலில் கொண்டு நிறுவனம் ஆக எச்பி (HP) இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
4 Big Announcements in Google IO 2025 Google Meet Live Translation Google Search Live Google Beam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X