அம்பானியின் இந்த 4 அறிவிப்பும் டிஜிட்டல் இந்தியாவின் கதவை திறக்கும்.!

ஹேப்பி நியூ இயர் ஆபரை அறிமுகம் செய்த அதே மேடையில், அம்பானி டிஜிட்டல் இந்தியாவிற்கான 4 பெரிய அறிவிப்புகளையும் வழங்கினார்.

|

ஒரு மாத காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு நாட்டில் இப்போதுள்ள நிலைமையே மாபெரும் எடுத்துக்காட்டு. சராசரி இந்திய மக்களின் கைகளில் காசு சுத்தமாக இல்லை எல்லாமே டிஜிட்டல் என்றாகி விட்டது. கிரெட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் ஸ்வைப்கள், பேடிஎம், ப்ரீசார்ஜ் போன்ற டிஜிட்டல் பணப்பைகள் என இந்தியாவே மிக விரைவிலான டிஜிட்டல் மயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சமீபத்தில் வெளியான அரசாங்க அறிக்கையின் கீழ் 40% பணபரிவர்தனைகள் ஆன்லைனில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கிறது. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை சிலர் கடுமையாக விமர்சிக்க சிலர் இதை இந்தியாவின் முன்னேற்றமாக கருதி ஆதரவு அளித்தும் வருகின்றன. அதெல்லாம்ஒருபக்கமிருக்க முகேஷ் அம்பானிக்கும், அவரின் தலைமையின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோவிற்கும் இந்தியா டிஜிட்டல் பாதை நோக்கி பயணிக்க வல்ல விடயங்களை நிகழ்த்துவதை நீங்கள் உணர்ந்தீர்களா.?

4 பெரிய அறிவிப்பு

4 பெரிய அறிவிப்பு

சமீபத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சலுகைகளை நீட்டிப்பாக ஹேப்பி நியூ இயர் ஆபரை அறிமுகம் செய்தார். உடன் அதே மேடையில் டிஜிட்டல் இந்தியாவிற்கான 4 பெரிய அறிவிப்புகளையும் வழங்கினார் அதென்ன..?

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

01. எம்என்பி

01. எம்என்பி

அதாவது மொபைல் நம்பர் போர்ட்டலிட்டி. ரிலையன்ஸ் ஜியோ இப்போது எம்என்பி-க்கு ஆதரவு அளிக்கிறது. இதனால் உங்கள் தற்போதைய பயன்பாட்டு என்னை மாற்றாமலேயே ஜியோ சேவைக்கு உங்கள் எண்ணை போர்ட் செய்துகொள்ள முடியும்.

02 .பணச் சந்தை தீர்வுகள்

02 .பணச் சந்தை தீர்வுகள்

ரிலையன்ஸ் ஜியோ பணச் சந்தை பிரச்சனைகளுக்கான தீர்வுவாய் பேடிஎம், ப்ரீசார்ஜ் போல அதன் ஆன்லைன் மணி வேலட்டை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இது இந்தியாவில் 1 கோடி வியாபாரிகளை சென்றடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

03. ஹோம் டெலிவரி

03. ஹோம் டெலிவரி

அறிவிப்பின் பொது முகேஷ் அம்பானி இந்தியாவின் டாப் 100 நகரங்களில் ஜியோ சிம் அட்டைகளுக்கான ஹோம் டெலிவரி சேவை கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

04. சராசரி இந்திய பிராட்பேண்ட் பயனர்

04. சராசரி இந்திய பிராட்பேண்ட் பயனர்

மற்ற நெட்வொர்க்குகள் உடனான மீது ஜியோனின் இண்டர்கனெக்ஷன் நெரிசல் 20%-ல் இருந்து 0.2% ஆக குறையும் என்று ஜியோ வாக்குறுதி அளித்துளளது உடன் ஒரு சராசரி ஜியோ வாடிக்கையாளர் ஒரு சராசரி இந்திய பிராட்பேண்ட் பயனரை விட 25 மடங்கு அதிகமான தரவை பயன்படுத்துகிறார் என்ற தகவலையும் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். இந்த 4 அறிவிப்பும் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் மறைமுகமான பணிகளை செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பீதியில் பிற டிடிஎச் சேவை வழங்குநர்கள், அம்பானியின் அடுத்த பிளான்.?

Best Mobiles in India

Read more about:
English summary
4 BIG announcements from Reliance Jio that will change the path of Digital India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X