பிளிப்கார்ட் டெலிவரி ஹப்: 9 லட்சம் மதிப்பிலான 150 போன்களை திருடிய நான்கு பேர் கைது.!

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் டெலிவரி ஹப் மையத்திலிருந்து 150 விலை உயர்ந்த முன்னணி ஸ்மார்ட்போன்களை திருடியதாக நான்கு பிளிப்கார்ட் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

|

புது டெல்லி: டெல்லி அலிபூரில் உள்ள ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் டெலிவரி ஹப் மையத்திலிருந்து 150 விலை உயர்ந்த முன்னணி ஸ்மார்ட்போன்களை திருடப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட்:9 லட்சம் மதிப்பிலான 150 போன்களை திருடிய நான்கு பேர் கைது!

இதன் தொடர்பாக ஸ்மார்ட்போன்களை திருடியதாக பிளிப்கார்ட் இல் வேலை பார்க்கும் நான்கு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

போன்கள் திருட்டு

போன்கள் திருட்டு

பிப்ரவரி 19 ஆம் தேதி பிளிப்கார்ட் டெலிவரி ஹப்பில் இருந்து பினோலா மற்றும் பிலாஸ்பூரில் உள்ள கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்ட ஸ்மார்ட்போன்களில் சில போன்கள் திருடப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் பாதுகாப்புக் குழுவின் அதிகாரி மான் சிங்க் டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

நான்கு பேர் கைது

நான்கு பேர் கைது

பிளிப்கார்ட் நிறுவனம் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறை சோதனையை துவங்கியுள்ளது. காவல்துறை நடத்திய சோதனையில் கும்பல் தலைவர் சந்தோஷ் குமார் உட்பட நன்கு பேரை துவாரகா பகுதியில் நேற்று காவல்துறை கைது செய்துள்ளது.

பல முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்கள் திருட்டு

பல முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்கள் திருட்டு

இந்த கும்பலைக் கைது செய்யும் பொழுது முப்பதிற்கும் மேலான விலை உயர்ந்த பல முன்னணி நிறுவன ஸ்மார்ட்போன்களை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சந்தோஷ் குமார், பிரிஜ்மோகன், அகிலேஷ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் டெல்லியில் உள்ள வெவ்வேறு போக்குவரத்து நிறுவனங்களில் ஓட்டுநராக பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலுவையில் உள்ள வழக்கு

நிலுவையில் உள்ள வழக்கு

சந்தோஷ் குமார் மற்றும் பிரிஜ்மோகன் இருவர் மீதும் ஏற்கனவே ரேஷன் லாரியிலிருந்து 100 சக்கரை சாக்குகளைத் திருடிய வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கைவரிசையை தற்பொழுது பிளிப்கார்ட் நிறுவனத்திடம் காட்டியுள்ளனர் என்று காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

9 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் திருட்டு

9 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் திருட்டு

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட முப்பது ஸ்மார்ட்போன்களின் மதிப்பு சுமார் 2.5 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது வரை இந்த கும்பல் 150 ஸ்மார்ட்போன்கள் வரை திருடியுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது, அவற்றின் மதிப்பு சுமார் 9 லட்சம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
4 Arrested In Delhi For Stealing 150 Mobiles From Flipkart Delivery Hub : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X