365 நாட்கள் வேலிடிட்டி உடன் எக்கச்சக்க சலுகைகள் வழங்கும் BSNL-ன் 4 அற்புதமான திட்டங்கள்.! விரைவில் 4ஜி..
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி சேவையை அனைத்து நகரங்களிலும் வழங்கிவிட்டன. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனமும் அனைத்து பகுதிகளிலும் 4ஜி சேவையை விரைவில் வழங்க உள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதேபோல் கடந்த ஜூன் 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3ஆவது புனரமைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஒப்புதல் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி மற்றும் 5ஜி சேவைக்கான அலைக்கற்றைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதுதவிர பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 கோடியாக மத்திய அரசு அதிகரித்து இருக்கிறது. இந்த ஒப்புதலுக்கு முன்னரே, நாடு முழுவதும் உள்ள 2ஜி மற்றும் 3ஜி டவர்களை 4ஜி டவர்களாக மேம்படுத்தும் பணியை பிஎஸ்என்எல் தொடங்கிவிட்டது.
மேலும் ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 4ஜி டவர் மேம்படுத்தும் பணிகளும், 5ஜி டவர் அமைக்கும் பணிகளும் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்னும் சில வாரங்களில் பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவை வழங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 4ஜி சிம் கார்டுகளை இலவசமாக மாற்றிக்கொள்ளும் வகையில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மையங்களிலும், சிம் கார்டு மேளாக்களிலும் முகாம்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. சரி இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ். 30 நாட்களுக்கு ரிங்டோன், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் மற்றும் லோக்துன் கன்டென்ட்டிற்கான அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.1515 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் எதுவும் இல்லை.அதாவது இது ஒரு டேட்டா திட்டம் ஆகும். எனவே அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவற்றிற்கு வேறு ஒரு திட்டத்தில் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40 Kbps ஆகக் குறைக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications