ரூ.2,825க்கு 3ஜி ஸ்மார்ட்போன் வெளியானது..!!
இன்டெக்ஸ் நிறுவனம் அக்வா வி5 ஸ்மார்ட்போனினை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் விற்பனை குறித்து எவ்வித தகவல்களும் குறிப்பிடப்படவில்லை.
இது தான் எதிர்காலம் அடித்து கூறும் ஹாலிவுட்..!!
சிறப்பம்சங்களை பார்க்கும் போது இன்டெக்ஸ் வி5 ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்காட் இயங்குதளம் கொண்டிருப்பதோடு 1 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் மற்றும் 256 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

3.5 இன்ச் எச்விஜிஏ டிஎப்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த கருவி 100 கிராம் எடை கொண்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 512 எம்பி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதோடு 1100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
ஐபோன் 6, நெக்சஸ் 6 விலை குறைப்பு..!!
மேலும் 2 எம்பி ப்ரைமரி கேமரா, ப்ளாஷ் மற்றும் 0.3 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கின்றது. இதோடு 3ஜி, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், வை-பை 802.11 b/g/n, மைக்ரோயு எஸ்பி மற்றும் ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications
